காசநோய் (TB) அறிகுறிகள், பரவாமல் தடுத்தல், 6 மாதத்தில் பூரண குணமடைதல் TB Symptons prevention Treatment
காசநோய்
• காற்றினால் பரவும் நோய்.
• காச நோய்க்கான காரணி பக்டீரியா கிருமியாகும்.
• இது ஓரு பரம்பரை சம்பந்தமான நோயல்ல.
காசநோய் பரவுவது…
• சிகிச்சை பெறாத நுரையீரல் சம்பந்தமான காசநோயை உடைய ஒரு நோயாளி
• இருமும்பொழுதும்
• தும்மும்பொழுதும்
• சிரிக்கும் பொழுதும் கதைக்கும் பொழுதும்
நோய் கிருமியை கொண்டசளித் துளிகள் காற்றுடன் கலக்கும்.
இதனை ஒருவர் கவாசிக்கும் போது சளித் துளிகளுடன் கலந்த நோய்க் கிருமி மனித உடலில் சென்று நோய்த் தொற்று ஏற்படும்.
பெருமளவில் நுரையீரலுடன் தொடர்புபட்டே காசநோய் ஏற்படும் ஆயினும் உடலின் எந்த அவயவயமோ உறுப்போ இந்நோயினால் பாதிக்கப்படலாம்.
காசநோய் சம்பந்தமான நோய் அறிகுறிகள்….
01. இரண்டு கிழமைகளுக்கு மேற்பட்ட இருமல்
02. இரவு வேளைகளில் ஏற்படும் இலேசான காய்ச்சல்
03. உடல் நிறை குறைதல்
04. இரவு வேளைகளில் வியர்த்தல்
05. உணவில் விருப்பமின்மை
06. சளியுடன் இரத்தம் கலந்து வெளியேறல்
மேற்கண்ட நோய் அறிகுறிகளில் ஓன்றோ அதற்கு மேற்படவோ இருப்பின்… அண்மையில் உள்ள மார்புநோய் சிகிச்சை நிலையத்துக்கோ சளிப்படல் பரிசோதனை நிலையத்துக்கோ சென்று இலவசமாக சளிப்படல பரிசோதனை செய்து கொள்ளவும்.
சரியான சிகிச்சையை தினமும் 6 மாத காலத்துக்கு உட்கொள்வதன் மூலம் காசநோயை முற்றுமுழுதாகக் குணப்படுத்த முடியும்.
சிகிச்சையை இடைநடுவில் கைவிட்டால் …
* நோய் குணமடையாது
* நோயை பரப்பும் ஓருவராக
* சுகமடைய செய்ய முடியாத நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நோயாளி என்ற நிலைமைக்கு தள்ளப்படுவீர்.
உடலில் நோய் எதிப்பு சக்தி குறைவடைவது காசநோய் தொற்றுவதற்கு இலகுவாகும்…
01. நீரிழவு நோய் போன்ற நீண்ட காலம் தொடரும் நோய்
02. HIV/AIDS போன்ற நோய்
03. உடல் உறுப்புக்கள் மாற்றீடு செய்வது போன்ற நீண்ட காலம் சிகிச்சை பெறுதல்
04. போதைப் பொருள் மதுபானம் மற்றும் புகைப்பிடித்தலுக்கு அடிமையாதல்
05. போசனைக் குறைபாடு
06. 5 வயதுக்கு குறைந்தவர்கள்
07. வயோதிபமடைதல்
போன்ற சந்தர்ப்பங்கள் காச நோய் தொற்றுவதற்குறிய சந்தர்ப்பத்தை அதிகரிக்கும்.
காச நோய் பரவாமல் தடுப்பதற்கு
* சந்தேகத்திற்குரிய நோய் அறிகுறிகள் உடைய ஒருவராயின் வைத்தியரிடமோ , அருகில் உள்ள மார்பு நோய் சிகிச்சை நிலையத்துக்கோ, சளிப்படல மாதிரி பரிசோதிக்கும் பரிசோதனை நிலையத்துக்கோ சென்று பரிசோதிக்கவும், பரிசோதிக்க தூண்டுதல் செய்யவும்.
* காசநோயாளர்களை ஒதுக்கி வைக்க வேண்டாம்
* இருமும்பொழுதும் தும்மும்பொழுதும் மூக்கையையும் வாயையும் கைக்குட்டையினாலோ சிறு ணியினாலோ மூடிக் கொள்ளவும்.
*மதுபானம் போதை மருந்து போன்றவற்றைப் பாவிக்க வேண்டாம்.
* நீரிழிவு, அஸ்மா பேன்ற நீண்டகாலமாக இருக்கக் கூடிய நோய்களை கிரமமாக மருந்துகளை உட்கொள்வதன் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும்
* காசநோய் பற்றி தாம் அறிந்தவர்களுக்கு தெரியப்படுத்தவும்
* காச நோயாளர்களுக்கு முறையாக சிகிச்சை பெறுவதற்கு உதவி செய்யுங்கள்.
உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/
6,477 total views, 4 views today