தற்கொலை (Suicide)- இலங்கையின் கவலைக்கிடமான நிலை

By: Dr Ziyad aia

தோனியின் அகால மரணத்துடன் மீண்டும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது “தற்கொலை”.

இன்று தோனியாக நடித்த சுஷாந் சிங் கின் கவலைக்குரிய தற்கொலை பலரையும் அதிர்ச்சி கொள்ள செய்துள்ளது.

❗️தற்கொலை பற்றி எல்லோரும் பேசும் நிலையில் இலங்கையின் நிலைமை என்ன

❗️இலங்கை 2016 இல் தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.
(100,000 பேரில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கைப்படி.)
தற்போதும் முதல் 20 இடங்களுக்குள் உள்ளது.
(Source: Sri Lanka Police & WHO statistics 2017) ❗️

 இலங்கையில் தினம்தோறும் 6 to 11 தற்கொலைகள் இடம்பெறுகின்றன.

 இலங்கையில் தற்கொலை செய்வோரில் 80% ஆனவர்கள் ஆண்கள். (Source: Sri Lanka Police statistics 2017)

👩‍🎤 இலங்கையில் தற்கொலை முயற்சி செய்வோரில் அதிகமானோர் பெண்களாக இருந்தபோதும் பெரும்பாலும் அது பயம்காட்டும் முயற்சியாகவே தவிர மரணத்தில் முடிவதில்லை. (No Comments)

 இலங்கையில் 20% ஆன குழந்தைகள் தகப்பன் இன்றி வாழ்கின்றன. (Source: Department of Census and Statistics & United Nations data bank)

 சிதைந்த குடும்பம் (Broken homes) என்ற அடிப்படையில் ஒரு பெற்றோருடன் வாழும் பிள்ளைகளை கொண்ட நாடாக 254 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் இலங்கை 18 ஆவது இடத்தில் உள்ளது. (Source: Department of Census and Statistics & United Nations data bank)

 இலங்கையில் உள்ள 35% ஆன மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 5 க்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களாகும். (Source: Department of Census and Statistics)

 இலங்கையில் தற்கொலைக்கு பிரதான இரு காரணங்கள்.

01. மன அழுத்தம். (Depression) :- இது கடன் தொல்லை, காதல் தோல்வி என்று பட்டியல் நீண்டு செல்லும்.

02. மதுப்பழக்கத்துக்கு அடிமையாதல். இதனுடன் சேர்த்து ஏனைய போதைப்பொருள் பாவனையும் காரணங்களாகும்.

03. பெற்றோர் கண்காணிப்பு இன்மை மற்றும் தனிமை.

💞 Consultant Psychiatrist National Institute of Mental Health இன் கருத்துப்படி கத்தோலிக்கர்கள், ஹிந்து, பௌத்தர்கள் மத்தியில் அதிகளவு தற்கொலை செய்யும் தன்மை காணப்படுவதோடு முஸ்லிம்கள் மத்தியில் இது மிகக்குறைந்த அளவில் காணப்படுகிறது.

இதற்கு பிரதானமாக இரு காரணங்களை கூறலாம்.
01. மத நம்பிக்கை. (இஸ்லாத்தில் தற்கொலை தடுக்கப்பட்ட ஒன்று.)

02. முஸ்லிம்கள் மத்தியில் மதுப்பாவனை குறைவு.
(Source: http://www.sundayobserver.lk/2017/09/10/issues/%E2%80%98take-minute-change-life%E2%80%99-world-suicide-prevention-day )

 இலங்கையில் பிரதான தற்கொலை செய்யும் முறைகளை வரிசைப்படுத்தினால்:

01. தூக்கிட்டு தற்கொலை

02. நஞ்சருந்துதல் (கிருமி நாசினிகள்)

03. நகரும் புகையிரதத்துக்கு முன்னால் பாய்தல்

 

❗️ தற்கொலையை தவிர்க்கும் வகைகள்;
தற்கொலை வெறும் ஏழ்மையால் மாத்திரம் நிகழ்வது அல்ல.
ஒவ்வுருவரின் தேவை, மனநிலை, ஏமாற்றங்கள் ஆளுக்கு ஆள் வேறுபாடும்.
பிரபல நச்சத்திரங்களின் மரணங்களும் இதற்கு எடுத்துக்காட்டு.

💞 Digital உலகில் Mobile க்குள் மூழ்கி கிடக்காமல் நம்மை சார்ந்தோர், நண்பர்கள், தேவை உடையோரை சந்தித்து மனம்விட்டு பேசுதல் பலரை மனஅழுத்தத்தில் இருந்து காப்பாற்றும்.

💞 மதுப்பாவனை, போதைப்பாவனை போன்றவற்றில் இருந்து படிப்படியாக மீள உதவுதல். போன்ற பல தனிநபர் மற்றும் சமூக நடவடிக்கைகள் அவசியம்.
இவை பற்றிய விரிவான தகவல்களை பெற எனது பக்கத்தை like செய்து இணைந்திருங்கள்.

 

Data Sources:
 
 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

1,100 total views, 1 views today