இலங்கையில் உள்ள நச்சு பாம்புகளும் அடையாளம் காணுதலும்: Poisonous Snakes identification

#கவனிக்க:
 எல்லா பாம்புகளும் விஷப்பாம்புகள் இல்லை.
 எல்லா விஷப்பாம்புகள் தீண்டுதலும் மரணத்தில் முடிவதில்லை.

இலங்கையில் அதிக வகையான பாம்புகள் நிலம், சுத்தமான நீர், கடல் நீர் என்பவற்றில் வாழ்கின்றன.

ஏறத்தாழ 105 வகையான பாம்புகள் அடையாளங் காணப்பட்டு அறிக்கையிடப்பட்டுள்ளன.
புதிய வகையான பாம்புகள் இன்னமும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவற்றில் அநேகமானவை தீங்கு விளைவிக்கக் கூடியவை அல்ல. ஒரு சில வகையான பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை எனவும், மருத்துவ ரீதியாக முக்கியமானவையாகவும் கருதப்படுகின்றன.

நிலங்களில் வாழும் 6 வகையான இனப்பாம்புகள் அதிகளவு விஷமுடைய பாம்புகளாக கருதப்படுகின்றன. இலங்கையில் அநேகமான மரணங்கள் இவ் வகையான பாம்புகளினாலேயே ஏற்படுகின்றன.

1. நாகபாம்பு
2. கண்ணாடி விரியன்/புடையன்
3. எண்ணைவிரியன் / புடையன்
4. எட்டடி விரியன்/ புடையன்
5. கூனல் மூக்குப்புடையன் (5a Merrem’S hump nose viper & 6. Low land hump nose viper)

மேலும் மூன்று வகையான இனப்பாம்புகள் அதிகளவு விஷமுடைய பாம்புகளாக கருதப்பட்ட போதிலும் அவற்றினால் எவ்வித மரண சம்பவங்களும் அறிக்கையிடப்படவில்லை. அவையாவன
1. கூனல் மூக்குப்புடையன (Millard’s hump nose viper)
2. சுருட்டைப்பாம்பு
3. பச்சை விரியன் (Green pit viper)

இலங்கையில் காணப்படும் நிலங்களில் வாழும் ஒருவகையான பாம்பினம் மாத்திரம் Sri Lankan keelback, Blossom Krait (Rhabdophis ceylonensis) நடுத்தர விஷமுடைய பாம்பினமாக கருதப்படுகின்றது. அவை தீண்டும் போது விஷமேற்றும் தன்மை காணப்படினும் உயிராபத்து ஏற்படுவதில்லை.

இலங்கையில் காணப்படும் அனைத்து இனக் கடற்பாம்புகளும் அதிகளவு விஷமுடைய பாம்புகளாக கருதப்படுகின்றன. எனினும் இவ்வாறான பாம்புகள் ஆக்ரோசமான பாம்புகளாக காணப்பட்டாலும், கோபமூட்டும் சந்தர்ப்பங்களில் தீண்டும் தன்மையுடையது.

இலங்கையில் தற்போது 15 வகையான கடற்பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடலிலும் ஆற்றிலும் வாழும் வளைந்த மூக்கு கடற்பாம்பு(Enhydrina schistose) மிகவும் ஆக்குரோசமானது. இலங்கையில் வடபகுதி கரையோரங்களிலும் அதிகளவு விஷமுடைய கடற்பாம்பாக (Hydrophis viperinus) இன பாம்புகள் கருதப்படுகின்றன.

Hydrophis இன பாம்பு தீண்டுதலின் மூலம் சில மரண சம்பவங்கள் ஏற்பட்டமையும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

குறித்தளவு இனப்பாம்புகள் அதிக விஷம் கொண்டுள்ளதாக தவறான மதிப்பீடும் காணப்படுகின்றது. இவ்வகையான பாம்புகளினது நச்சுப்பற்கள் பின் வளைந்திருப்பதால் மனித உடலினுள் இவற்றால் முறையாக விஷத்தை செலுத்த முடிவதில்லை. இவ் வகையான பாம்பின் தீண்டுதலினால் நோவும் வீக்கமும் உண்டாகுமே தவிர மரணமேற்பட்டதாக ஆவணப்படுத்தப்படவில்லை.

இலங்கையில் குறைந்தளவு மருத்துவரீதியான முக்கியத்துவம் உள்ள பாம்புகள், அவையாவன.
1. Cat snake (சாரை பாம்பு)
2. Sri Lankan coral snake (Calliophis melanurus)
3. கண்குத்திப்பாம்பு ((Ahaetulla spp.)

Sources: Sri Lanka Medical Association

விஷப்பாம்புகளின் விஞ்ஞான, ஆங்கில, சிங்கள, தமிழ் பெயர்களை படத்தில் காண்க.
விஷப்பாம்புகளின் அடையாளப்படங்களையும் படத்தில் காண்க.

பாம்புக்கடி தடுப்பு முறைகள் முதலுதவி பற்றிய விபரங்கள் அடுத்த பதிவில்.

உறுதிப்படுத்தப்பட்ட, ஆதாரபூர்வமான சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருக்கவும்.

160 total views, 2 views today