போதைப்பொருள் சோதனையும் (Drug Testing),நான் அவனில்லை என நிரூபிக்க காத்திருக்கும் அரசியல்வாதிகளும்.

ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பற்ற வைத்த தீயொன்று, பிரதி அமைச்சர் புத்திக பதிரன ஊடாக பரவ ஆரம்பித்துள்ளது. Media க்கள் இதனை ஊதி பெரிதாக்கி பத்தினி தன்மையை நிரூபிக்க ஏனைய அரசியல்வாதிகளும் தூண்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த பரிசோதனைகள் எவ்வாறு மேட்கொள்ளப்படுகிறது? ஏமாற்றுக்கள் இடம்பெற வாய்ப்பு உண்டா? என நோக்குவோம்.

By Dr Ziyad Aia

பொதுவாக Drugs Testing என்ன காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது?

  1. போதைப்பொருள் பாவனை சம்பந்தமான சந்தேகத்தின் பெயரில். (Suspicion of intoxication)
  2. வேலை வாய்ப்புக்கு முன். (Pre-employment screening:) – இது சில நாடுகளில் அமுலில் உள்ளது.
  3. விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து சோதனை
  4. Medical screening: நோயாளிகள் மயக்கமான நிலை, மனப்பிறழ்வு, சோர்வு போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சை நோக்கில் போதைப்பொருள் பாவனை பற்றி சந்தேகிக்கும் சந்தர்ப்பத்தில்.
  5. விபத்தின் பின்னரான சோதனை. (Screening after an accident) சட்டநடவடிக்கைகள் மேட்கொள்ளும் நோக்கில்.

எந்த வகையான சோதனைகள் நடைமுறையில் உள்ளன:-
01. சுவாச சோதனை (Breathalyzer Test) – இது உடலில் உள்ள Alcohol அளவை உடனடியாக கண்டுபிடிக்கும் முறை. இது பொதுவாக Traffic Police சாரதிகள் மதுபோதையில் உள்ளனரா என சோதிக்க பயன்படும். மது அருந்தி குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் சாத்தியமாகும்.

02. இரத்த பரிசோதனை:- இரத்த மாதிரி பெறப்பட்டு அதில் கலந்துள்ள Drugs அளவு சோதிக்கப்படும். இரத்தத்தில் இருந்து போதைப்பொருளை பிரித்து சோதிப்பது கடினம். இது Expensive ஆனதும் நவீன Mechinaries உம் தேவைப்படும். பொதுவாக வெளிநாடுகளிலேயே அவசியமேற்படும்போது மாத்திரம் செய்யப்படுகிறது.

03. சிறுநீர் பரிசோதனை:- 
போதைப்பொருளை சோதிப்பதற்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் இலகுவானதுமான முறை.
போதைப்பொருள் பாவித்து இருந்தால் 14 நாட்கள் வரை Positive Results ஐ காட்டும். (Drugs உம் நாட்களின் எண்ணிக்கையையும் படத்தில் காண்க.) Drugs பாவனைக்கு அடிமையானவராக இருந்தால் இந்த நாட்கள் இன்னும் அதிகரிக்கலாம்.

சிறுநீர் எப்படி சோதிக்கப்படுகிறது?


இதனை இலகுவாக விளங்குவது என்றால் Pregnancy க்காக மேற்கொள்ளப்படும் Urine hCG Test ஐ குறிப்பிடலாம்.
அதாவது கர்ப்பம் தரித்தவுடன் சிறுநீரில் hCG எனும் Hormorne வெளியாகும். அதனை hCG Test Strip மூலம் சோதிக்கலாம். இதனை Rapid Test என்று அழைப்பர்.
அது போன்ற சோதனையே இங்கு மேற்கொள்ளப்படுகிறது. அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களின் Nawaloka Report ஐ உற்று நோக்கினால் அதில் 11 விதமான Drugs களுக்கு Urine Rapid Test செய்து இருப்பதும் அவை எல்லாமே Negative என்பதும் Cut Off ஓவ்வொன்றுக்கும் வழங்கப்பட்டிருப்பதும் விளங்கும். இந்த Cut Off இன் அர்த்தம் அதில் குறிப்பிடப்பட்ட அளவை விட அதிகாமாக இருந்தால் தான் Positive Results வரும்.
(அது சரி Urine Report என்கிறீர்கள் Blood கொடுக்கிற மாதிரி தானே Photo இருக்கிறது என்று கேட்பது புரிகிறது. Urine கொடுக்க போன இடத்துல Blood Sugar பார்க்க இரத்தம் கொடுத்து இருப்பாரு. Urine எடுக்கிற மாதிரி Photo போட்டால் நல்லவா இருக்கும்)

04. மயிர் (Hair) பரிசோதனை:- நீண்ட காலம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் முடியில் அது படியும். இது 90 நாட்கள் வரை முடியில் Positive ஆக இருக்கலாம்.

போலியான Drug Test Report ஐ காண்பிக்க முடியுமா? 
(Million Dollor Question)
01. வேறு ஒருவரின் Urine ஐ தனது பெயரில் கொடுத்தல் அல்லது செயற்கையாக தயாரிக்கப்பட்ட synthetic urine ஐ பரிசோதனைக்கு வழங்குதல்:- இப்போது Urine சோதனையில் சித்தி அடைவதடற்கு Synthetic or freeze-dried urine Powder வடிவில் வருகிறது. online suppliers மூலமும் விற்பனை ஆகிறது. பலர் ஊக்க மருந்து சோதனைகளில் இருந்து தப்புவதடற்கு இதனை சமீப காலமாக உபயோகிப்பதாக தகவல்கள் உள்ளன.
அடுத்ததாக சந்தேக நபர்களின் (Police Suspects) சோதனையின் போதே Urine Sample இல் மோசடி செய்யப்படுகிறதா என உன்னிப்பாக அவதானிக்கப்படும்.
தானாக முன் சென்று OPR (On Personal Request – படத்தில் REF.Doctor என்பதை பார்க்க ) Sample வழங்கும்போது ஆய்வு கூடங்களில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
(பாட்டிமார் சும்மாவா ஏசினார்கள் புத்தி வளர நல்லவனின்…..ஐ குடி என்று.)

02. கட்டுப்பாடுகளுடன் Urine Test நடைபெற்றால் கூட அதை மாற்ற உப்பு, வினாகிரி, Bleaching Powder என்பவற்றை கலக்க முடியும். இதடற்கும் சில பதார்த்தங்கள் விற்கப்படுகின்றன. (எதற்கு எதை கலக்க வேண்டும் என்பது Secret)

03. அதிகளவு நீர் அருந்துதல்:- எப்போதாவது என்ற முறையில் Drugs பாவிப்பவர்களுக்கு அதிக நீர் அருந்தும்போது சிறுநீரில் Drugs அளவு Dilute ஆவதால் Rapid Test இல் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்.

04. 14 நாட்களுக்கு பட்டினி இருத்தல்:- சுயமாக சோதித்து தனது பத்தினி தனத்தை நிரூபிக்க நினைப்பவர்கள் இதை கடைப்பிடித்தாலே Urine Negative Results கிடைக்கும். (சிலரின் Mind Voice:- I am waiting)

05. இன்னும் சில பல மருந்துகள் (detoxifying supplements) உள்ளன. ஆபத்தானவை அவதானமாக கையாளவும்.

இவ்வளவு Risk எதுக்கு தம்பியோட Results ஐ எடுத்து நம்ம அண்ணனோட பெயர்ல Photo Shop பண்ணி வெளியிட்டால் One Shot ல வேல முடிஞ்சது என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டான் அந்த அபிமானி.

சிறுநீரில் Rapid Drug Test செய்யப்படும் விதம்:-

1,126 total views, 3 views today