கட்டாக்காலி நாய்களின்(தெரு நாய்களின்) இனப்பெருக்கத்தை கட்டுபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு பட்ஜெட் 2019.

“பைத்தயம் நாய்களுக்கா? எங்களுக்கா?” By: Dr. Victor Ivan
தமிழில் ARM INAS 18/10/2018

சென்ற வாரம் லங்காதீப பத்திரிகையில் பதிவாகியிருந்த தகவல் ஒன்றின் படி
காலி கராபிடிய வைத்தியசாலையில் 2018 ஜனவரி முதல் ஆகஸ்ட் 2018 வரை நாய்கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 8,032. இந்த தகவலை வெளியிட்டிருந்தவர் கராபிடிய வைத்தியசாலையின் வைத்தியர் கீதாஞ்சலி குணரத்ன.

இப்படி நாய்கடிக்கு சிகிச்சை பெற்றவர்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். மேலும் இன்னுமொரு தகவலின் படி நாடு முழுதும் நாய்க்கடிக்கு இலக்காகி தினசரி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 30-35 பேர். மாதமொன்றுக்கு 300க்கும் 400க்கும் இடைப்பட்டோர். வருடமொன்றுக்கு சுமார் 730,000 பேர் நாய்க்கடிக்கு இலக்காகுவதாக சன்டேடைம்ஸ் பத்திரிகையின் தகவல் சொல்கிறது.

சுகாதார திணைக்களத்தின் தகவலின் படி இலங்கையில் வருடத்துக்கு 4,015,000 விபத்துக்கள் நிகழ்கின்றன. இதில் 33.1 வீதமான விபத்துக்கள் மிருகங்கள் கடிப்பதால் ஏற்படும் விபத்துக்கள்.

இரண்டாவது இடத்தில் இருப்பது வழுக்கி விழுதல் போன்றவற்றால் ஏற்படும் விபத்துக்கள். இவற்றுடன் ஒப்பிடும் போது பாதைகளில் ஏற்படும் வாகனவிபத்துக்களின் எண்ணிக்கை மூன்றாம் இடத்திலேயே உள்ளது.

வாகன வீதி விபத்துக்களால் தான் அதிகமான விபத்துக்கள் நிகழ்கிறது என்பது மக்களின் பொதுவான மனப்பதிவு. ஆனால் உண்மை நிலை அதுவல்ல. நாட்டின் அதிகம் விபத்துக்கள் நிகழ்வது நாய்க்கடி மூலம் தான் என்பது அரச தகவல்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி, பஸ், வான் போன்றவற்றால் நிகழும் விபத்துக்கள் நாட்டின் மொத்த விபத்துக்களில் 15 வீதம் மட்டுமே. ஆனால் நாய்க்கடி போன்றவற்றால் 33.1 வீதமான விபத்துக்கள் நிகழ்கின்றன.

நாட்டில் நாயின் சனத்தொகை 22 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் 60 வீதமானவை உரிமையாளரற்ற வீதியோர கட்டாக்காலி நாய்கள்.

விசர்நாய்க்கடி நோயிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற சுகாதரத்துறையில் மருந்துக்காக ஒதுக்கப்படும் பணத்தில் 30 வீதமான பணம் நாய்க்கடியின்போது வழங்கப்படும் சிகிச்சைகளுக்காக செலவழிக்கப்படுகிறது.

சன்டேடைம்ஸ் பத்திரிகையில் வெளியான தகவலின் படி நாய்க்கடிக்கு இலக்காகுபவர்களுக்கு சிகிச்சையளிக்க வருடத்துக்கு 200 மில்லியன் செலவழிக்கப்படுகிறது. ARV வகையை சேர்ந்த Verorab எனும் மருந்தின் சிறு குப்பியின விலை 900 ரூபா பெறுமதியாகிறது.

நாய்க்கடிக்கு இலக்காகி ஒருவர் 7 நாளைக்கு சிகிச்சை பெற்றால் மருந்துக்கு மட்டும் அவருக்கான செலவு 6,300 ரூபா. நாய்க்கடிக்கு பயன்படுத்தப்படும் Berikab என்ற ஒரு ஊசியின் பெறுமதி 6,000 ரூபா.

நாய்க்கடிக்கு இலக்கானவர்களுக்கு சிகிச்சையளிக்க செலவழிக்கப்படும் அதே அளவு தொகை பணம் நாய்களுக்கு விசர் தொற்றாமல் வருடாந்தம் அவற்றுக்கு ஏற்றும் மருந்துக்கும் செலவழிக்கப்படுகிறது. இப்படி நாய்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு இலங்கை அரசு செலவழித்து வரும் தொகை மிகப் பாரியது.

இலங்கையில் உரிமையாளரில்லாத பாதையில் திரியும் லட்சக்கணக்கான நாய்கள் உள்ளன. இந்த நாய்களால் ஏற்படும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களும் மிக அதிகம்.

அது மட்டுமல்ல பல்வேறுபட்ட நோய்களை காவும் மிருகமாகவும் இந்த நாய்கள் இருந்து வருகின்றன. அது மட்டுமல்ல இந்த நாய்களில் பெரும்பாலானவற்றுக்கு கிராமப்புற பாடசாலைகள் தான் தங்குமிடம். இவற்றின் மூலம் பரவும் நோயால் சில பாடசாலைகள் மூடப்பட்ட சந்தர்ப்பங்களும் கணிசமாகளவுள்ளன.

பாதைகளில் திரியும் உரிமையாளர்களற்ற கட்டக்காலி நாய்களை பிடித்து சென்று அவற்றை இல்லாமல் செய்யும் நடைமுறையை போன்று அதற்கு தேவையான சட்டமும் 1990இல் நாட்டில் அமுலில் இருந்தது.

இந்த முறை இல்லமாலக்கப்பட்டது ரோயல் கல்லூரி மாணவர் ஒருவரிடமிருந்து வந்த எதிர்ப்பின் காரணமாக. பிரதேச சபைகளினூடாக கட்டாக்காலி நாய்களை பிடித்து இல்லாமல் செய்யும் வேலைத்திட்டமும் அதனுடன் சேர்த்து இல்லாமல் போனது.

அதன் பிறகு இந்த தவறு எந்த அரசாலும் சரிசெய்யப்படவேயில்லை. அதனால் இன்று இந்த நாய்களால் ஏற்படும் பிரச்சினை பெருகி அதற்காக அரசுசெய்யும் செலவும் பலமடங்காக அதிகரித்துள்ளது.

“நாய்க்கு கட்டாயம் உரிமையாளர் இருக்க வேண்டும் இல்லாவிடில் அந்த நாய்கள் அழிக்கப்படுவதனை தவிர வேறு வழியில்லை என உலகின் மிகச் சிறந்த அகிம்சைவாதியான காந்தியே கூறியுள்ளார்.”

இப்படியான நாய்களால் அரசுக்கு ஏற்படும் செலவினங்களை நாட்டு மக்களுக்கு ஏற்படும் சுமையை ஓரு காலமும் Otara Gunewardene போன்ற சீமாட்டிகள் சுமக்கப் போவதில்லை. இதன் முழு சுமையையும் சாதாரண பொதுமக்களே சுமக்கின்றனர். இதனால் ஏற்படும் ஆபத்துக்களாலும் விபத்துக்களாலும் பாதிக்கப்படுவதும் சாதாரண பொதுமக்களே.

நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த வீண் சுமையிலிருந்து மீள ஒரேயொரு வழி பாதைகளில் திரியும்கட்டாக்காலி நாய்களை இல்லாமல் செய்வது மாத்திரமே.

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

3,500 total views, 5 views today