Declaimer:-

“எனது LankaHealthTamil.Com மூலமான ஆக்கங்களில் ஒவ்வொரு தகவலுக்கும் அதற்குரிய ஆய்வு ஆதாரம் 1,2,3… என இடப்பட்டிருக்கும். அதனை கீழ் உள்ள ஒவ்வொரு ஆதாரம் என இலக்கமிடப்பட்டவற்றை கிளிக் பண்ணி பார்வையிடலாம்.       By;- Dr Ziyad.A,I,A 

இலங்கையில் முதலாவது இரத்த மாற்றீடு 1950 இல் இடம்பெற்றது.

1959 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் S.W.R.D.Bandaranayake வுக்கு இடம்பெற்ற துரதிஷ்ட நிகழ்வின்போதே இரத்த மாற்றீடு பற்றிய மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டது.
அந்த நேரம் இலங்கை தேசிய வைத்தியசாலையில் ஒரு அறையே இரத்த வங்கியாக செய்யப்பட்டது.
1960 இல் முதலாவது இரத்த வங்கி தேசிய வைத்தியசாலையில் நிறுவப்பட்டது. (ஆதாரம் 1)

இன்று, நாராஹேன்பிடவில் உள்ள இலங்கை தேசிய இரத்த மாற்ரீடு சேவையே (National Blood Transfusion Service) இலங்கையில் உள்ள அனைத்து இரத்த வங்கிகளையும் மேற்பார்வை செய்கிறது.

2019 வரை நாடு முழுவதும் 99 இரத்த வங்கிகள் உள்ளன. அவற்றில் 19 இரத்த கூறுகளை பிரிக்கும் நிலையங்களாக செயற்படுகின்றன.
(See attached picture)

இரத்தமானது முழுமையாகவும் (Whole blood), கூறுகளாக பிரிக்கப்பட்டும் தேவை உடையோருக்கு வழங்கப்படுகிறது.
இரத்த கூறுகளாக பிரிக்கும் நிலையங்கள் Ampara,Anuradhapura,Badulla,Batticoloa,CIM,CNTH,Jaffna,Kalutara,Kamburugamuwa,Kandy,Karapitiya,
NBC, Peradeniya, Rathnapura, Trincomalee, Polonnaruwa
இவற்றில் சேகரிக்கப்பட்ட சகல இரத்த மாதிரிகளில் இருந்தும் பின்வரும் நோய்களுக்கான பரிசோதனை மேட்கொள்ளப்படுகிரது. HIV 1 & 2 , Hepatitis B , Hepatitis , Syphilis , Malaria

இரத்த கூறுகளும் அவற்றின் உபயோகங்களும்:-

01. முழு இரத்தம் (Whole blood):-
உடனடி இரத்த இழப்பு (acute blood loss), Exchange transfusion

02. Red Cell Concentrate (RCC):-
குருதிச்சோகைகளுக்கு (Anemia)

03. FFP:-
ஈரல் நோய்கள், பாரம்பரையாக வரும் குருதி உறையா நோய்கள்.

04. Cryoprecipitate:-
Factor VIII deficiency. Fibrinogen & willibrand disease

05. Platelet Concentrate:-
Thrombocytopenia எனும் குருதி சிறுதட்டுகள் குறையும் நிலை.

06. Human albumin:-
எரிகாயம், புரத இழப்பு

இரத்த தானத்தின் போது அண்ணளவாக 450ml இரத்தம் பெறப்படுகிறது. இதனை கொண்டு Red Cell Concentrate தயாரிக்கப்படும்போது 200ml க்கு 100ml Saline சேர்த்து தயாரிக்கப்பகிடும். ( 2 packet) எஞ்சிய பகுதியில் ஏனைய இரத்த பாகங்கள் தயாரிக்கப்படும். இதனாலேயே ஒருமுறை செய்யும் இரத்ததானம் மூன்று உயிர்களை காப்பாற்றும் என்று சொல்லப்படுகிறது.

எந்த நோய் நிலைமைக்கு அதிகளவு இரத்தம் பயன்படுகிறது?

2012 ஆம் ஆண்டுமுதல் இலங்கையில் சராசரியாக நாளொன்றுக்கு ஆயிரம் இரத்த மாற்றீடுகள் இடம்பெறுகின்றன.
2016 ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி
414,175 இரத்த தானம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 1135 . (ஆதாரம் 2)

01. விபத்துக்களை எடுத்துக்கொண்டால்:-

இலங்கையில் நிமிடத்துக்கு 8 விபத்துகள் இடம்பெறுகின்றன. (ஆதாரம் 3). இங்கே விபத்துக்கள் என்பவை வீடு, தொழில் துறை, வீதி விபத்துகள், வன்முறைகள், யுத்தம், விசர் நாய் கடி, எரி காய்ங்கள் என எல்லாமே அடங்கும்.
வீதி விபத்துக்களை எடுத்துக்கொண்டால் இலங்கையில் சராசரியாக பத்து நிமிடத்துக்கு ஒரு வீதி விபத்து இடம் பெறுகிறது.(ஆதாரம் 4).

இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி 2017 ஆம் ஆண்டிக்கான வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
3101. அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 8 மரணங்கள். (ஆதாரம் 5) (ஆதாரம் 6)

பொதுவாக விபத்துகளின்போது இரத்த மாற்றீடு அவசியப்படுவது இரத்த இழப்பானது 20-50% ஐ விட அதிகமாக இருக்கும் போதே. அதாவது Fatal Accidents. ஏனைய சந்தர்ப்பங்களில் Saline மூலம் இழந்த திரவத்தை ஈடு செய்யலாம். மரணத்துக்கு மேலதிகமாக 2017 இல் Fatal accidents ஆக பதிவானவை 2924.
அத்துடன் எரி காயங்களுக்கும் (Burns) இரத்தம் வழங்குவது அவசியப்படுகிறது.
இவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட Estimate படி விபத்துகளுக்காக நாளொன்றுக்கு 80-100 இரத்த மாற்றீடுகள் தேவைப்படுகின்றன.
இது பெரிய தொகையாக இருந்தாலும் நாளாந்த சராசரி மாற்றீடு 1000 உடன் ஒப்பிடும்போது சிறிய அளவே.
நாட்டில் யுத்தம் நிலவிய காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இப்போது அது இல்லை.

02. சத்திர சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால்:-

விபத்துகளின் போதும் சத்திரசிகிச்சை அவசியப்படுகிறது. ஆனால் இங்கு அதனை வேறாக நோக்கலாம்.
இங்கு சத்திரசிகிச்சை என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்ட சத்திரசிகிச்சைகள் (Routine Surgeries & Surgical emergencies).

பொதுவாக நவீன விஞ்ஞான வளர்ச்சி காரணமாக அதிக இரத்த இழப்பு இன்றிய சத்திர சிகிச்சைகள் (Minimal invasive surgeries) மேற்கொள்ளப்படுவதால் இரத்த மாற்றுவதற்கான அவசியம் குறைவடைந்துள்ளது.
பொதுவாக உறுப்பு மாற்று சத்திர சிகிச்சைகள் (organ transparent surgeries), ஆறு மணித்தியாலங்களுக்கு மேல் மேற்கொள்ளப்படும் புற்று நோய்க்கான சத்திர சிகிச்சைகள் என்பவற்றின் போது பொதுவாக இரத்த மாற்றுவது அவசியப்படும்.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் அவையும் குறைந்து வருகிறது.
பொதுவாக emergency surgery களுக்கும் இரத்தம் மாற்றுவது அவசியப்படும்.
Eg:- Ectopic pregnancy, Emergency laparotomy.

ஆனால் தொடர்ச்சியாக இரத்த மாற்றீடு தேவையில்லை என்றாலும் சகல பெரிய சத்திரசிகிச்சை களுக்கும் இரத்தம் தயார் நிலையில் வைக்கப்படும். தேவை ஏட்படும்போது வழங்க. இரத்த மாற்றீடுக்கு முன்கூட்டியே கையெழுத்து வாங்குவது அவசர தேவை ஏற்பட்டால் வழங்குவதட்கு மாத்திரமே.
உதாரணமாக சிசேரியன் சத்திரசிகிச்சையின் போது 5% ற்கும் குறைவானவர்களுக்கே இரத்த மாற்றீடு செய்யப்படுகிறது.(ஆதாரம் 7) ஆனால் எல்லோருக்கும் இரத்தம் தயார் நிலையில் வைக்கப்படும்.
தயார் நிலையில் வைக்கப்படும் இரத்தம் பயன்படாத விடத்து மறுநாளே வேறு ஒருவருக்கு அதை தயார் செய்யப்படும். இதேநேரம் சில வைத்திய சாலைகளில் சிசேரியனுக்கு உட்படுவோருக்கு இரத்தம் கேட்கலாம். எல்லோருக்கும் இரத்தம் பாய்ச்ச தேவை இல்லாதபோதும் அந்த 5% க்குள் யார் வரலாம் என்பது சொல்ல முடியாது. எல்லோருக்கும் தயார் நிலையில் வைக்கப்படும்.
ஆனால் எமது உதிரத்தால் பிறந்த குழந்தைக்காக ஒரு தர்மமாக நாம் அந்த இரத்தத்தை வழங்கினால் பல உயிர்களை காப்பாற்றும். ( ஏற்கனவே ஏதாவது சந்தர்ப்பத்தில் இரத்தம் வழங்கியிருந்தால் தேவைப்படாது.) நாளாந்த இரத்த தேவை 1000 ஐ தாண்டுகிறது என்பதை மறக்க வேண்டாம்.

பொதுவான சிறிய சத்திர சிகிச்சைகளின் போது இரத்தம் தேவைப்படாவிட்டாலும் சத்திரசிகிச்சைக்கு முன்னரான தயார்படுத்தலில் பலருக்கு இரத்தம் பாய்ச்சுவது அவசியப்படுகிறது. (Preoperative preparation). அதற்கு முக்கிய காரணம் இரத்த சோகை ( Anaemia)

03. குருதிச் சோகை ( Anaemia)

இலங்கையில் அதிகளவான இரத்த மாற்றுக்கான (Blood Transfusion) காரணம் இதுவே.

அனிமியா என்பது உடலில் ஒட்சிசனை காவிச்செல்லும் ஹீமோகுளோபினின் அளவு குறையும்போது ஏற்படும் நோய் நிலைமையாகும்.

இவற்றில் Severe Anaemia வின் போது இரத்தம் மாற்றுவது அவசியப்படுகிறது.

இலங்கையில் குருதிச் சோகை ( Anaemia) க்கான காரணங்கள்:-

01. Iron deficiency Anaemia:-
இதுவே உலகில் காணப்படும் மிகப் பொதுவான அனிமியா ஆகும். இது இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. ஏனெனில் எலும்பில் ஹீமோகுளோபின் உருவாவதற்கு இரும்பு மிக அவசியம்.

இலங்கையில் சுகாதார திணைக்களம் மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் இணைந்த ஆய்வின் மூலம் பல மாவட்டங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு 35 தொடக்கம் 45% iron deficiency Anaemia இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. (ஆதாரம் 8)
மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது நுவரெலியா மாவட்டம். ( See the picture )

பெண்களுக்கு Iron deficiency Anaemia வர காரணம் போஷாக்கு இன்மை, மாதவிடாயின் போதான அதிக இரத்தப்போக்கு, பிரசவத்தின் போதான அதிக தேவை, புழு தொற்றுக்கள்.
Iron குறைபாடு போன்றே Haemoglobin உட்பத்திக்கு தேவையான Vit – B12, Folic Acid குறைபாடும் anaemia வை உருவாக்கும். இதனாலேயே மேற்படி Iron மற்றும் விட்டமின்களை கொண்ட மாத்திரைகள் கருத்தரித்த தாய்மாருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
( இதை புரியாத சில வில்லேஜ் விஞ்ஞானிகள் சமூக வலைத்தளங்களில் விட்டமின்களை கொடுத்து தலையை பெருகச்செய்து சிசேரியனுக்கு உட்படுத்துவதாக கிளப்பி விடுகிறார்கள்.)

பொதுவாக Iron deficiency anaemia க்கு உணவு மேம்படுத்தல் மூலம் சரிப்படுத்தலாம். இவர்களுக்கு 7g/dl ஐ விட குறையும் போது இரத்த மாற்றீடு செய்யப்படுகிறது. இருந்தும் இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் சத்திரசிகிச்சைக்கு உட்படும் போது , சத்திர சிகிச்சைக்கு முன்னதான தயார்படுத்துவதற்காக இரத்தம் வழங்க வேண்டி ஏற்படுகிறது. இது உண்மையில் சத்திரசிகிச்சைக்கான இரத்த மாற்றுவது அல்ல. அனீமியாவுக்கானது.

B) நீண்டகால நோய்களின் போதான அனீமியா:-

1. நாட்பட்ட சிறுநீரக நோய்கள்:- (Chronic Kidney Diseases)
இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கான Erythropoietin எனும் Hormon இன் பெரும்பகுதி சிறுநீரகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்பட்ட சிறுநீரக நோயினால் இதன் உற்பத்தி பாதிக்கப்படுவதால் Anaemia ஏற்படுகிறது.
பொதுவாக 20 தொடக்கம் 30% ஆன சிறுநீரக நோயாளிகள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இரத்த மாற்றீடு செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாகிறார்கள்.
சிறுநீரக நோய்க்கான ஜனாதிபதி செயலணியின் 2014ஆம் ஆண்டு கணிப்பின் படி இலங்கையில் 40,680 சிறுநீரக நோயாளர்கள் உள்ளார்கள். (ஆதாரம் 9) இத்தொகை தற்போது இன்னும் அதிகம்.

2. புற்றுநோய்கள்:- புற்றுநோயாளிகளுக்கு என்பு மச்சை ஊடாக ஹீமோகுளோபின் உற்பத்தி குறைவடைய்வதால் அனீமியா ஏற்படுகிறது. இவர்களுக்கு வாழ்நாளை அதிகரிக்கும் சிகிச்சைகளோடு பலருக்கு இரத்த மாற்றீடும் அவசியப்படுகிறது.
2010 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு படி இலங்கையில் 21000 புற்று நோயாளர்கள் உள்ளனர்.              (ஆதாரம் 10)(ஆதாரம் 11)

3. நீண்ட கால நோய்களான TB, Rheumatoid arthritis, Chronic inflammatory Diseases போன்றவை அனீமியாவை உண்டாக்கும். (விரிவஞ்சி விவரிக்கவில்லை.)

3. என்பு மச்சை தாக்கும் நோய்களால் உண்டாகும் அனிமியா:-
இதற்கு உதாரணமாக சிறுவர்களை பாதிக்கும் புற்று நோய்களான Leukaemia , myelofibrosis என்பவற்றை குறிப்பிடலாம். இவ்வாறான நோய் நிலைமைகளின் போது பலமுறை இரத்த மாற்றீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.

C) Talassaemia:- இலங்கையில் அண்ணளவாக 4000 தலசீமியா சிறுவர்கள் உள்ளனர். (ஆதாரம் 12) இவர்கள் மாதந்தோறும் இரத்த மாற்றீடுக்கு உட்படுகின்றனர். அதாவது (4000×12)/365= 131 நாளொன்றுக்கு தலசீமியா சிறார்களுக்காக சராசரியாக 131 இரத்த மாற்றீடு செய்யப்படுகிறது.
இவர்களின் கண்ணீர் கதையை அடுத்த பதிவில் காண்க.

D) இவற்றுக்கு மேலதிகமாக Aplastic Anaemia, Hemolytic Anemia, Sickle cell Anaemia என பல வகைகள் உண்டு. (விரிவஞ்சி விவரிக்கவில்லை.)

எனவே இரத்தம் இரத்த மாற்ரீட்டை எடுத்துக் கொண்டால் அபிவிருத்தி அடைந்த நாடுகளை பொருத்தவரை அங்கு அனிமியா குறைவாகவும் வீதி விபத்துகள் குறைவாகவும் உள்ளது.
அங்கே பல சிக்கலான Cardiac, vascular, transparent சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதால் சத்திரசிகிச்சைக்கு அதிகளவான இரத்த மாற்று அவசியப்படுகிறது.

இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அனிமியா இரத்த மாற்றீட்டுக்கு பிரதான காரணமாக அமைகிறது. (ஆதாரம் 13) அதற்கு அடுத்தபடியாக வீதி விபத்துக்கள்.

 

Take Home Message:-

விபத்துகள் சத்திரசிகிச்சை என்பவற்றால் பொதுவாக ஒருவருக்கு வாழ்நாளில் ஒருமுறை இரத்த மாற்று செய்யப்படும். ஆனால் anaemia வினால் பலமுறை தேவைப்படும்.

இக்கட்டுரையின் நோக்கம் எதற்கு அதிகம் தேவை என்பதை புரியவைப்பது அல்ல. எதற்கெல்லாம் தேவைப்படுகிறது என்பதை புரிய வைப்பதே.
ஒரு சிறு நீரக நோயாளியை காப்பாற்ற சிறுநீரகம் தான் கொடுக்க வேண்டும் என்றில்லை இரத்த தானமும் பல நாள் அவரை வாழச் செய்யும், அதேபோன்று புற்றுநோய்கள், சிறுவர்களைத் தாக்கும் இரத்த புற்றுநோய் மற்றும் வாழ்நாள் முழுவதும் இரத்தத்தை நாடி நிற்கும் தலசீமியா. இவை எல்லாவற்றுக்கும் இரத்தமே தேவைப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் ஒரு நாளையாவது அதிகரித்து வாழ ஆசைப்படுவான். அந்த வாழ்நாளை அதிகரிக்க இந்த Blood Donation செய்கிறது.

பொதுவாக அனிமியா வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த மாற்றீடு செய்யும் போது அவரின் குடும்பத்தாரை நிர்ப்பந்திப்பதில்லை காரணம் அது குடும்பத்திலும் அந்நிலைமை காணப்படும் அல்லது குடும்பத்தவர்கள் பலமுறை இவருக்கு இரத்தம் தேவை என்பதால் கொடுத்திருப்பார்கள்..

இரத்தம் என்பது ஆய்வுகூடங்களில் செய்யும் பொருளல்ல அது விலைமதிப்பற்றது.
எமது ஒரு முறை இரத்ததானம் மூன்று உயிர்களை காப்பாற்றும்.

 

4,875 total views, 3 views today