Sri Lanka வில் விபத்தில் சிக்கிய ஒருவருக்கு சிகிச்சை தொடங்க Police Complaint அவசியமா?

By:- Dr Ziyad AIA

கடந்த சில காலமாக சமூக வலை தளங்களில் உலா வரும் ஒரு செய்தி.

“Sri Lanka விலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு…
விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது….

முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்…
தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்….”

முதலில் இந்த செய்தி எங்கு இருந்து வந்தது என்று பார்த்தால் இது 2012 இல் இந்தியாவில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாக சமூக வலை தங்களில் பரவிய செய்தி.
Sources:- http://mohamedbunder1.blogspot.com/2012/01/blog-post_06.html?m=0
                  http://www.aatroram.com/?p=4010

இது பின்னர் உல்டா செய்யப்பட்டு Sri Lanka என்று பெயர் மாற்றப்பட்டு மிக வேகமாக இலங்கை முழுவதும் பரப்பபடுகிறது.

இலங்கை பிரஜைகளாக இருந்து கொண்டு எமது Health System பற்றி மக்கள் அறியாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
முதலில் இந்த FIR ( First Information Report ) எனும் சொல் பதம் இந்தியா, பங்களாதேஷ் , பாகிஸ்தான் போன்ற நாடுகளிலேயே உபயோகத்தில் உள்ளது.  இலங்கையை பொறுத்த வரை Police Complaint என்ற சொல்லே பாவனையில் உள்ளது. 
சுகாதார துறையை பொறுத்தவரை India வை விட பல மடங்கு முன்னேற்றகரமான நிலையில் இலங்கை உள்ளது.

http://www.dailynews.lk/2018/04/10/local/148047/lankas-health-service-among-worlds-best-who-director-general

சில திரைப்படங்களில் காட்டுவதுபோல் ( Eg:- இந்தியன், போக்கிரி ) Treatment Start பண்ணுவதட்கு முன் FIR போட்டால்தான் admission யே பண்ணுவோம் என்பது போன்ற காட்சிகள் காட்டப்படுவது இந்தியாவில்உள்ள தனியார் வைத்திய சாலைகளில் Police Case களில் அலைவதில் இருந்து தப்ப எடுக்கும் கேவலமான செயல்.
இக்கட்டுரையின் நோக்கம் அதை விபரிப்பது அல்ல.
இலங்கையில் உள்ள நடைமுறையை மக்களுக்கு தெளிவுபடுத்த.

இலங்கையில் இவ்வாறான ஒரு (Police Complaint) கோரிக்கை  முன்வைக்கப்பட்டு எங்காவது கேள்விப்பட்டதுண்டா My Lord.

இலங்கையின் நடைமுறை என்ன?

விபத்தில் சிக்கிய ஒரு நோயாளியை அனுமதிப்பதற்கு, treatment செய்வதற்கு எந்த போலிஸ் Complaint உம் அவசியம் இல்லை.
Police complaint போடுவதாக இருந்தாலும் அதை வைத்தியசாலை நிர்வாகமே செய்ய வேண்டுமே தவிர நோயாளி அல்ல.

இதை மேலும் தெளிவாக விளங்குவதானால்:-
விபத்து அல்லது Criminal Case ஏதாவது நடந்தால் பதிக்க பட்டவர் உடனடியாக வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை அளிக்கப்படும். 
ஆரம்ப கட்ட சிகிச்சைகள் நிறைவு பெற்றதும் நடைபெற்ற நிகழ்வு போலீஸ் முறைப்பாட்டுடன் சம்பந்தப்பட்டது என்றால் நோயாளியின் BHT இல் வைத்தியர் “Inform Police” என்று எழுதுவார்.
( இதட்கு மேலதிகமாக பாதிக்கப்பட்டவரோ, அவரின் உறவினரோ தானாக Police Complain செய்து இருக்கவும் கூடும்.)

வைத்தியசாலை நிர்வாகம் நோயாளியின் பெயர் விவரத்தை Police க்கு அறிவிக்கும்.
பொதுவாக மாவட்ட வைத்தியசாலைக்கு மேல் தரம் உடைய வைத்தியசாலைகளில் வைத்தியசாலைக்கு என்றே police post இருக்கும். ( இலங்கையின் அரச வைத்தியசாலை கட்டமைப்பு பற்றி அறிய:- https://lankahealthtamil.com/இலங்கையின்-வைத்தியசாலை-க/
சிறு வைத்தியசாலைகளில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு வைத்தியசாலை நிர்வாகம் அறிவிப்பர்.

போலீசார் உரிய நோயாளி இருக்கும் Ward க்கு வருகை தந்து MLEF ( Medico-Legal Examination Form) ஐ பூர்த்தி செய்வர்.
இது 3 பகுதிகளை கொண்டது. முதல் பகுதியை Police நிரப்புவர்.
2ம், 3ம் பகுதிகளை வைத்தியர் நிரப்ப வேண்டும். இவை முறையே Medical Officers Copy, Police Copy எனப்படும். பூர்த்தி செய்தபின் Police Copy போலீசாரிடம் ஒப்படைக்கபடும்.

MLEF அறிக்கையை கொண்டு Police எந்த Offence க்கு கீழ் வழக்கு தொடுப்பது என்று தீர்மானிப்பர்.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் MLEF Form ஆனது நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படாது.

Case ஆனது நீதி மன்றத்துக்கு வரும்போது நீதிமன்றம் Case இன் தன்மைக்கு ஏற்ப வைத்தியரிடம் MLR ( Medico Legal Report ) அறிக்கையை சமர்ப்பிக்க கோரும். இது சம்பவம் நிகழ்ந்து சில மாதங்கள் முதல் வருடங்கள் வரை ஆகலாம்.
சில நேரங்களில் Case இன் தன்மைக்கு ஏற்ப வைத்தியர் நேரடியாக ஆஜராக வேண்டியும் ஏற்படலாம்.

எனவே இந்த MLEF form களை வைத்தியர் தன் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பது கடமையாகிறது.
இடமாற்றம், ஓய்வு பெறல் போன்ற சந்தர்ப்பம் உட்பட தொழிலை விட்டு விலகுவதாக இருந்தாலும் இந்த பொறுப்பில் இருந்து விலக முடியாது. No-pay leave சென்றால் கூட Acting Sign பண்ணுபவர் அதட்கு பொறுப்புதாரி ஆவார்.
மேலதிக விபரங்கள் தேவைப்படின் Comments இல் பதிவிடவும்.

எனவே, இலங்கையின் Health System இவ்வாறு இருக்க விளக்கம் இல்லாமல் உல்டா செய்து Sri Lanka வில் இல்லாத பிரச்சினை ஒன்றை இருப்பது போல் காட்டுவதை தவிர்க்கவும்.

உசாத்துணை:- Forensic Medicine & Medical Law, 2nd Edition, Hemamal Jayzwardena, Page No 32

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

2,908 total views, 1 views today