அரும்பத விளக்கம்:
GMOA, SLMA, SLMC, College of Physicians

GMOA – Government Medical Officers Association

JMO – Judicial Medical Officers

SLMA – Sri Lanka Medical Association

SLMC – Sri Lanka Medical Council

சமீப நாட்களாக இலங்கை மருத்துவ துறை சார் அமைப்புக்கள் பல COVID மரண அடக்கம் சம்பந்தமான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அதே நேரம் GMOA பற்றியும் மக்கள் மத்தியில் தவறான புரிதல்கள் உள்ளது. அவற்றைப் பற்றிய விழிப்பூட்டல் பதிவே இது.
By: Dr Ziyad Aia

GMOA – Government Medical Officers Association – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்.

இது ஒரு தொழிச் சங்கம்.
நிபுணத்துவ அமைப்பு கிடையாது. (ஆனால் அறிக்கைகள் அப்படித்தான் விடப்படும்.)
வைத்தியர்கள் யாவரும் இதில் அங்கத்தவர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. (விருப்பத்தேர்வு. விரும்பினால் அங்கத்தவர்களாக இருக்கலாம்.)

அதாவது, ஆசிரியர் சங்கம், தாதியர் சங்கம் கூட்டுறவு சங்கம் போன்ற ஒரு தொழில் சங்கம் (trade union) மட்டுமே.

GMOA 16th of October 1926 இல் ஆரம்பிக்கப்பட்டது.
1949 இல் தொழில் சங்கமாக பதிவு செய்யப்பட்டது. (1949 the GMOA was first registered as a trade union)
இன்றைய தேதியில் 20,000 க்கும் மேற்பட்ட வைத்திய (MBBS/MD) அங்கத்தவர்களையும் 90 கிளை அமைப்புக்களையும் (Branch Unions) கொண்டுள்ளது.

இலங்கையில் காணப்படும் தொழில் சங்கங்களில் பலம்பொருந்திய ஒரு அமைப்பாக GMOA காணப்படுகிறது.
இதன் பிரதான நோக்கங்களாக அங்கத்தவர்களின் உரிமையை பாதுகாத்தல் (Appointments, Transfers, Salary etc) அமைகிறது. இதற்கு அடுத்த படியாக பல சேவைகளை, பல விடயங்களில் தலையிட்டு செய்து வருகிறது. (அவை நாள்தோறும் செய்திகளில் காணக்கிடைப்பதால் விரிவஞ்சி தவிர்க்கப்படுகிறது.)

இதன் நிர்வாக உறுப்பினர்கள் வருடாவருடம் பொது வாக்களிப்பு முறையில் தெரிவு செய்யப்படுகின்றனர்.
GMOA க்கு மேலதிகமாக/எதிராக வேறு தொழில் சங்கங்களும் உள்ளன. (இவை மிகக்குறைந்த அங்கத்தவர்களை கொண்டு செல்வாக்கு குறைந்த தொழிச் சங்கங்களாக இருப்பதால் பேசுபொருளாவதில்லை.)
Eg: Government Medical Officers’ Forum (GMOF)
All Ceylon Medical Officers Association (ACMOA)
Association of Medical Specialists -(AMS) (https://amsvoice.wordpress.com/ )

GMOA பற்றிய மேலதிக தகவல்களுக்கு:
https://www.gmoa.lk/about/about-gmoa/

SLMC – Sri Lanka Medical Council – இலங்கை மருத்துவ சபை:

ஒருவர் இலங்கையில் வைத்தியராக கடமை புரிய கட்டாயம் SLMC யில் பதிவு செய்து அதன் பதிவிலக்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். allopathy வைத்தியர்கள் மாத்திரமல்லாது ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவர்கள் , மற்றும் தாதியர், செவிலியர், MLT போன்றோரும் இதில் பதிவு செய்யப்பட வேண்டும்.

அதாவது, SLMC ஒரு நபர் வைத்தியராக வேலை செய்வதற்கு அனுமதி அளிக்கும் அதிகார நிறுவனம்.
இது போன்ற சபைகள் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும்
Eg: GMC England, AMC Australia, IMC India

1924 இல் Ceylon Medical Council (CMC) என்று ஆரம்பிக்கப்பட்ட சபையானது 1987 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க மருத்துவ (திருத்த) சட்டம் மூலம் , அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் மருத்துவ கற்கை நெறிக்கான தராதரங்களை ஆய்வு செய்து அவற்றுக்கு அனுமதி வழங்கல்/இரத்து செய்ய அதிகாரம் பெற்றுள்ளது.

கவுன்சில் ஒவ்வொரு துறையிலும் தகுதி வாய்ந்த நபர்களின் பதிவேடுகளை பராமரித்து வெளியிடுவதன் மூலம், கல்வித் தரம் மற்றும் மருத்துவக் கல்வியின் தரத்தை பராமரித்தல், தொழில்முறை நடத்தை மற்றும் மருத்துவ நெறிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கவும், பதிவுசெய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரமும் பெற்றுள்ளது.

சுருங்க கூறின் ஒரு MBBS/MD தரத்தில் உள்ள வைத்தியர் இலங்கை நாட்டில் கடமை புரிய SLMC யில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமே தவிர GMOA இல் இல்லை.

SLMC பற்றிய மேலதிக தகவல்களுக்கு:
https://www.srilankamedicalcouncil.org/aboutus.php

SLMA – Sri Lanka Medical Association – இலங்கை மருத்துவ சங்கம்/கூட்டிணைவுக் கழகம்

இலங்கை மருத்துவ சங்கம் (எஸ்.எல்.எம்.ஏ) என்பது இலங்கையில் உள்ள தேசிய தொழில்முறை மருத்துவ சங்கமாகும் (Professional Boday), இது அனைத்து தரங்களின் மருத்துவ சேவையாளர்களையும் மருத்துவத்தின் அனைத்து கிளைகளையும் ஒன்றிணைக்கிறது.

இது ஆசியாவிலேயே மிகப்பழம்பெரும் மருத்துவ துறை சார் அமைப்பாகும்.
இது 1887 இல் ‘Ceylon Branch of the British Medical Association’ என்று ஆரம்பிக்கப்பட்டு, 1951 இல் Ceylon Medical Association’ என்று மாற்றம் பெற்று 1972 இல் Sri Lanka Medical Association என தற்போதைய பெயருக்கு மாற்றம் பெற்றது.

இதன் பிரதான நோக்கங்களாக:

1. அனைத்து வகை மருத்துவர்களுக்கும் ஒரு சிறந்த தொழில்முறை மற்றும் அறிவியல் அமைப்பாக செயட்பட்டு அவர்களின் திறனை மேம்படுத்த உதவுதல்.

2. இலங்கை மக்களுக்கான விரிவான நோய் தீர்க்கும் மற்றும் தடுப்பு சுகாதார சேவைகளுக்கு நிபுணத்துவம் மிக்கவர்களாக செயற்படுதல்.

3. மருத்துவ மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார நிபுணர்களிடையே மருத்துவ அறிவியலில் கலை அறிவு, மருத்துவ நடைமுறை, தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் அறிவியலை பரப்புதல்.

4. மருத்துவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார நிபுணர்களின் தொடர்ச்சியான தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குதல்.

5. நெறிமுறை மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும்.

என பல்வேறு வழிகளில் நிபுணத்துவம் மிக்க அமைப்பாக செயற்படுகிறது. இவ்வமைப்பே 02-01-2021 COVID மரணித்த உடல்களை அடக்க முடியும் என்று தமது சாதகமான நிலைப்பாட்டை அறிவித்தது.

https://www.lankahealthtamil.com/கொரோனா-சடலங்களை-இலங்கையி/

SLMA தான் Professional body. அது விஞ்ஞான ரீதியான மருத்துவ ரீதியான விடயங்களை மட்டுமே கையாளும். Trade union வேலைகளை செய்வதில்லை.

SLMA பற்றிய மேலதிக தகவல்களுக்கு:
https://slma.lk/vision-mission-objectives-valules/

College of specialize Doctors – வைத்திய நிபுணர்களின் கழகம்:

பொதுவாக வைத்திய துறையில் குறிப்பிட்ட ஒரு துறைசார் நிபுணத்துவ கற்கைகளை மேற்கொள்பவர்கள் தமக்கு இடையிலான ஒருமைப்பாட்டையும், நிபுணத்துவ அறிவை மேம்படுத்தவும் தமது நிபுணத்துவ துறைசார் தீர்மானங்களை ஒரு கூட்டாக வழங்க ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாகும்.

உதாரணமாக சமூக நோய் பரவல், அவற்றின் தடுப்பு சம்பந்தமான நிபுணர்களின் அமைப்பாக College of Community Physicians of Sri Lanka (CCPSL) திகழ்கிறது. இதுவும் COVID மரணித்த உடைகளை அடக்குக்குவது சம்பந்தமான நிலைப்பாட்டை சமீபத்தில் அறிக்கையாக வெளியிட்டது.

https://www.lankahealthtamil.com/covid-மரணித்த-உடல்களை-அடக்குவ/

அதேபோல் COVID நிலைமையின்போது Virus நுண்ணங்கி பற்றிய நிபுணர்களாக Microbiologists or Virologists உள்ளடங்கும் Professional Body ஆக College of Microbiologist உள்ளது. (https://slmicrobiology.lk/ )

College of Microbiologists ஆனது COVID மரணித்த உடல் அடக்கம் சம்பந்தமான College ரீதியான ஒருமித்த அறிக்கை விடாவிட்டாலும், முதலாவது Expert Committe இல் இவர்களில் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பின்னர் இவர்களில் பலர் 2வது புதிய Committe இல் உள்வாங்கப்பட்டு அவர்களால் வெளிப்பட்டதாக Twitter இல் கசிந்த அறிக்கையில் COVID மரணித்த உடல்களை அடக்குதல் விடயத்தில் சாதகமான நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர்.

அதேபோல்

Sri lanka College of Paediatricians – SLCP

CCP – Ceylon College of Physicians

Sri Lanaka Ccollege of Obtetrics & Gynaecologist – SLCOG 

என்று ஒவ்வொரு துறை சார் நிபுணர்களின் கழகங்கள் உண்டு. இவைகளை இணைக்கும் பாலமாக SLMA தொழிற்படும்.

 

JMO – Judicial Medical Officers (சட்ட வைத்திய அதிகாரிகள்)

சட்ட மருத்துவம் தொடர்பான வைத்தியர்களாக இவர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை Consultant JMO என்று அழைக்கப்படும். பொதுவான பேச்சு வழக்கில் சொல்வதானால் விபத்துகள், சண்டை, கொலை, தற்கொலை போன்றவற்றில் உடலை ஆராய்ந்து Police , நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பர்.
மரணித்து உடலில் பிரேத பரிசோதனை எனும் Post Mortem செய்வதும் இவர்களின் துறையே. இருப்பினும் Post mortem செய்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இவர்களுக்கு இல்லை.
அதுபற்றிய விளக்கத்துக்கு.
https://www.lankahealthtamil.com/பிரேத-பரிசோதனை-post-mortem/

இவர்களின் College ஆக College of Forensic Pathologists of Sri Lanka திகழ்கிறது. (http://www.cfpsl.org/ ) பல நேரங்களில் GMOA, JMO ஆகிய இரண்டு சொற்களும் உச்சரிக்கும்போது ஒரே மாதிரி காதில் விழுவதால் பல நேரங்களில் குழப்பம் ஏற்படுகிறது.
உதாரணமாக வைத்தியசாலையில் மரணித்த உடல்களை அடக்கம் செய்ய JMO எதிர்ப்பு தெரிவித்தார் என்பது பலவேளைகளில் (GMOA) என்றே காதில் விழும். இதனால் GMOA பற்றி பிழையான புரிதல் ஏற்படுகிறது.

இப்போ மரணித்த உடல்களை அடக்குவது சம்பந்தமான GMOA இன் நிலைப்பாடு என்ன என்று கேட்டால் வெறும் நழுவல் போக்களையே காண்பிக்கிறது. அது சம்பந்தமான நிபுணர்களே தீர்மானிக்க வேண்டும் என்று சொல்லி ஜகா வாங்குகிறது.
மரணித்த உடல்களின் அடக்கம் சம்பந்தமாக GMOA கடந்த April மாதம் வெளியிட்ட அறிக்கை.

Take-Home Message:

இலங்கையில் மருத்துவ துறைசார் அமைப்புகளில் GMOA என்பது தொழில் சங்கமே அன்றி நிபுணத்துவ அமைப்பு அல்ல என்பதோடு அதன் அங்கத்துவம் விரும்பியவர்கள் மாத்திரமே பெற்றுக்கொள்ளலாம்.
SLMC எனும் இலங்கை மருத்துவ சபையிலேயே கட்டாயம் மருத்துவர்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஏனைய மேலே குறிப்பிட்ட அமைப்புக்கள் நிபுணத்துவ அமைப்புக்களாகும்.

1,579 total views, 1 views today