Side effects of face Masks. முகக் கவசங்கள் அணிவதால் ஏற்படும் பாதிப்புகளும் தவிர்க்கும் முறைகளும்.

By: Dr Ziyad aia

COVID-19 ஐ தொடர்ந்து பல நாடுகள் முகக் கவசங்கள் அணிவதை கட்டாயமாக்கி உள்ளதோடு , சில ஐரோப்பிய நாடுகள் அதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன.

மறுபுறம் சீனா, தென்கொரியா ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் முகக் கவசம் அணிவதை வழமையாகக் கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் CDC ஆரம்பத்தில் சுகதேகியான பொது மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும் பின்னாட்களில் கைக்குட்டை, சீலை போன்ற ஏதாவது ஒன்றையேனும் கவசமாக பாவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மறுபுறம் அமெரிக்க ஜனாதிபதியே தனக்கு மாஸ்க் அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார். “I don’t think I’m going to be doing it,”

உலக சுகாதார நிறுவனம்  (WHO) கூட மாஸ்க் சம்மந்தமான தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. சுகதேகியான பொதுமக்களுக்கு அவசியமில்லை என்ற நிலைப்பாட்டை ஆரம்பத்தில் கொண்டிருந்தாலும் தற்போது அந்தந்த நாடுகள் நிலைமைக்கு ஏற்ப தீர்மானிக்கலாம் என்று கூறிவிட்டது. (ஆதாரம் 02)

இலங்கை சுகாதார அமைச்சை பொருத்தவரை பின்வரும் நிலைப்பாட்டை ஆரம்பத்தில் வெளிப்படுத்தியது.

சுகாதார அமைச்சகம் பின்வரும் நிலைமைகளுக்கு மாத்திரமே facemasks களை பரிந்துரைத்தது.
– நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள்
– நோய் சந்தேகக்கப்படும் நபர்களின் நெருங்கிய தொடர்புகள்
– நோயாளிகளை கவனிக்கும் சுகாதார ஊழியர்கள்
– சுவாச அறிகுறிகள் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களோடு மருத்துவமனைக்கு வருபவர்கள்

ஆனால் இன்றைய நாட்களில் பொலிஸ் தரப்பு உட்பட சுகாதார துறையும் எல்லோரையும் முக கவசம் அணியுமாறு வலியுறுத்துகிறது.

மாஸ்க் அணிவதால் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்கு தெளிவான ஆய்வு ஆதாரங்கள் இல்லாத போதும் University of East Anglia இனால் மேற்கொள்ளப்பட்ட ஒரு rapid systematic review ஆய்வின்போது சன நெரிசலான பகுதிகளில் முகக் கவசங்கள் அணிவது தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கலாம் என்ற கருத்தை கொண்டுள்ளது (ஆதாரம் 01)

முகக் கவசங்கள் அணிவதின் பாதிப்புகளை பட்டியல் படுத்தினால்:

01. முகமூடிகள் தவறான பாதுகாப்பு உணர்வை உருவாக்கக்கூடும்,. இதனால் சமூக தூரத்தை புறக்கணிக்க அணிபவர்களைத் தூண்டலாம் அல்லது கைகழுவுதல் போன்ற பிற நடவடிக்கைகளுக்கு மாற்றாக இது கருதப்படலாம். தொடுகைக்கு உட்படும் பொருட்களின்  வெளிப்புற மேற்பரப்பு மாசுபடுவதால்,  Mask அணிந்தவர்கள் அவற்றை கைகளால் தொட்டு தங்களைத் தாங்களே பாதிக்கக்கூடும். சீலைகள் போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட கவர்கள் சுவாசத்தின்போது ஈரமாகி, அவற்றை Virus பரவலுக்கு சாத்தியமான பாதையாக மாற்றும். (ஆதாரம் 02)

02. முகமூடியின் பொருத்தமற்ற பயன்பாடு: மக்கள் தங்கள் முகமூடிகளை அடிக்கடி கைகளால்  தொடக்கூடாது, அவற்றின் ஒற்றை-பயன்பாட்டு (Single Use) முகமூடிகளை அடிக்கடி மாற்ற வேண்டும் அல்லது தவறாமல் கழுவ வேண்டும். அவற்றை சரியாக அப்புறப்படுத்தல் (Dispose) மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும், இல்லையெனில் அவற்றின் அபாயங்கள் அதிகரிக்கக்கூடும் (ஆதாரம் 03)

03. முகமூடிகளை அணிந்த இரண்டு நபர்களிடையே பேச்சின் தரமும் அளவும் கணிசமாக குறையும். அவர்கள் அறியாமலேயே நெருங்கி வரக்கூடும். இவற்றை எதிர்கொள்ள ஒருவருக்கு பயிற்சி அளிக்கப்படலாம் என்றாலும், இந்த பக்க விளைவு சமாளிக்க மிகவும் கடினமாக இருக்கலாம். (ஆதாரம் 04)

04. Face Mask அணிவதால் வெளியேற்றப்பட்ட காற்று கண்களுக்குள் செல்லும். இது ஒரு சங்கடமான உணர்வையும் உங்கள் கண்களைத் தொடும் தூண்டுதலையும் உருவாக்குகிறது. உங்கள் கைகள் மாசுபட்டால் நோய் தொற்று பரவ ஏதுவாகிவிடும்.

05. முகமூடிகள் சுவாசத்தை மிகவும் கடினமாக்குகின்றன. COPD , அஸ்மா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முகமூடிகள் மூச்சுத் திணறலை மோசமாக்குகிறது. இது மரணத்தையும் ஏற்படுத்தலாம்.

06.  மேலும், முன்பு சுவாசிக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைட்டின் ஒரு பகுதி ஒவ்வொரு சுவாச சுழற்சியிலும் உள்ளிழுக்கப்படுகிறது. அந்த இரண்டு நிகழ்வுகளும் சுவாச அதிர்வெண் மற்றும் ஆழத்தை அதிகரிக்கின்றன. எனவே அவை உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றப்படும் காற்றின் அளவை அதிகரிக்கின்றன.

முகமூடி அணிந்த கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்கள் தம்மை அறியாமலேயே Corona Virus கொண்ட காற்றை மீள மீள சுவாசிப்பதால் வைரஸ் சுமைகளை அவர்களின் நுரையீரலுக்குள் தள்ளினால், இது பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ நிலையை மோசமாக்கும். (ஆதாரம் 05)

07. இரண்டு வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கு முகக்கவசம் (Face Mask) அணிய சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.
முகக்கவசங்களால் குழந்தைகளுக்கு மயக்கம், மூச்சு திணறல் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். 3 தொடக்கம் 5 வயது சிறுவர்களுக்கு Mask அணியும்போது கண்காணித்து, அறிவுறுத்தல்கள் வழங்கவும். (ஆதாரம் 06)

08. சிலருக்கு முகக்கவசங்கள் allergy யை ஏற்படுத்தி தோல் அழட்சிகளையும் உருவாக்கலாம்.

முகக் கவசம் அணிவதால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் வழிகள் :

01. தனிமையில் இருக்கும் போதோ அல்லது தனியாக வாகனத்தில் செல்லும்போதோ முக கவசத்தை கழற்றி காற்றை சுவாசிக்கலாம். ( இருப்பினும் இலங்கையில் வைத்தியர் ஒருவர் காரினுள் முகக்கவசம் அணியவில்லை என போலீசார் ஒருவர் ஏசிய வீடியோவும் Adaderana இல் வெளியாகியது.)

02. வீடுகளுக்குள் (சுவாச நோயோடு சம்பந்தப்பட்டவர்கள் இல்லாதபோது) மாஸ்க் அணிவதை தவிர்ந்து கொள்ளலாம்.

03. சன நெரிசலான இடங்களுக்கும் மக்கள் புழங்கும் இடங்களுக்கு செல்லும் போது மாத்திரம் மாஸ்க் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். அவ்வாறான இடங்களுக்கு முடிந்த அளவு செல்வதை தவிர்ப்பதே சிறப்பு. 

04. மாஸ்க்குகளை அடிக்கடி கைகளால் சரி படுத்துவதை தவிர்த்து முடிந்த அளவு அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வோம்.

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

2,553 total views, 1 views today