இலங்கையில் போதை பாவனைக்கு அடிமையானவரை விடுவிக்க என்ன செய்ய வேண்டும்?
By Dr Ziyad Aia

சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப்பாவனை அதனால் அடிக்கடி பேசப்படும் “போதைப்பொருள் ஒழிப்பு” ஒருபுறம் இருக்க. மறுபுறம் போதைக்கு அடிமையான ஒருவரை அதிலிருந்து மீட்க இலங்கையில் என்ன வழிமுறைகள் உள்ளன என பலர் கேட்கின்றனர். அதுபற்றிய விழிப்புணர்வு பதிவே இது.

சிகிச்சை மற்றும் புணர்வாழ்வு சேவைகள்

போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து மீட்சி பெறுவதற்காக அரச அமைப்புகளும் அரச சார்பற்ற அமைப்புகளும் வதிவிட சிகிச்சைகள் மற்றும் புணர்வாழ்வு சேவைகள் பலவற்றை வழங்கி வருகின்றன.

2007 ம் ஆண்டு இலக்கம் 54 சட்டமூலத்தின் (சிகிச்சை மற்றும் பணர்வாழ்வு) கீழ் கட்டாய சிகிச்சைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை இது போன்ற 4 நிலையங்களை நடாத்தி வருவதுடன், வெளியிட சேவைகளையும் வழங்கி வருகின்றது.

இந்த நிலையங்கள் கொழும்பு, கண்டி, காலி, மற்றும் நிட்டம்புவ ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர போதை தடுப்பு மற்றும் வெளியக செவைகளையும் சபை மேற்கொண்டு வருகின்றது.
(முகவரி , தொலைபேசி இலக்கங்களை படத்தில் காண்க.)

Sri Lanka Drug addicts treatment & Rehabilitation centre

இதன் போது
குடும்ப ஆலோசனை சேவை,
விஷ நீக்கம்,
உடற்பயிற்சி,
மனத்தளர்ச்சிக்கான சிகிச்சை,
உட்புற மற்றும் வெளிப்புற செயற்பாடுகள்,
உளநோய் சிகிச்சை,
சுகாதாரமான வாழ்வு முறைக்கான கல்வி,
ஊக்கமுண்டாக்குதல்,
தொழில்பயிற்சி,
ஆற்றல் அபிவிருத்தி
போன்ற செயற்திட்டங்கள் இம்மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.

 

பயிற்சி பெற்ற மற்றும் நன்கு அனுபவம் வாய்ந்த உலவ ஆலோசகர், உதவி ஆலோசகர்கள் மற்றும் சிகிச்சை ஊழியர்களின் பங்களிப்புடன் ஒரு வதிவிட மேலாளரால் நிர்வகிக்கப்படும். ஆலோசகர் தனிப்பட்ட முறையில் பெற்றோர், துணைவர்கள் அல்லது பாதுகாவலர்களுடன் வாடிக்கையாளரை மையத்தில் சேர்ப்பது குறித்து பேசுவார், மேலும் மையத்தில் வழங்கப்பட்ட வசதிகளைக் காண்பிப்பதற்காக அவர்களை அழைத்துச் செல்வார். வாடிக்கையாளரின் பெற்றோர், வாழ்க்கைத் துணைவர்கள் அல்லது பாதுகாவலர்களுக்காக மையத்தில் ஒரு மாதாந்த சந்திப்பு உள்ளது.

இதற்கு மேலதிகமாக அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் மாவட்ட ரீதியான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் ஊடாக:

01. சபையின் சேவைகளை (தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு) போதைப்பொருள் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், சமூகத்தில் அதிக ஆபத்துள்ள குழுக்கள் மற்றும் பொது மக்களுக்கு விரிவுபடுத்துதல்.

02. சபை நடத்தும் மருந்துகளின் பயன்பாட்டை தவிர்ப்பதட்கான திட்டங்களை உருவாக்க பள்ளிகள், கிராம சேவகர்கள், சமூர்த்தி அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், சமூக சேவை அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் மதத் தலைவர்கள் இடையே தகவல் தொடர்பு வலையமைப்பை நிறுவுதல் மற்றும் பராமரித்தல்.

03. தொடர்ச்சியான பின்தொடர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மேற்கண்ட திட்டங்களின் விளைவு / வெற்றியை மதிப்பீடு செய்தல்.

04. போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும், பொது மக்களுக்கும் தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குதல்.
(ஒவ்வொரு மாவட்டங்களுக்குமான பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களது தொடர்பு இலக்கங்களை கீழே Link இல் காண்க.)

 

இலங்கையில் இந்த பிரிவின் கீழ் தற்போது பதினொரு நியமிக்கப்பட்ட சிகிச்சை மையங்களும் பதின்மூன்று தனியார் சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

நியமிக்கப்பட்ட சிகிச்சை மையங்கள் (designated treatment centers) 10 சிறைச்சாலைகளிலும் Kandakadu Treatment & Rehabilitation center, Polonnaruwa யிலும் இயங்குகின்றன.

 

அதேபோல் 13 தனியார் மையங்கள் அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கீழ் இயங்குகின்றன. இவை NGO மற்றும் மத நிறுவனங்கள் ஊடாக இயங்குகின்றன.
அவற்றின் விபரங்கள் மற்றும் விலாசங்கள் கீழே Link இல் காண்க.

 

 

2018 ஆம் ஆண்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான 4447 நபர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
இவர்களில் 1142 (25.7%) பேர் அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை மூலமும்,

1048 (23.6%) பேர் சிறைச்சாலை திணைக்கள புணர்வாழ்வு திட்டங்கள் ஊடாகவும்,

415 பேர் (9.3%) அரச சார்பற்ற அமைப்புக்களின் முன்னெடுப்புக்கள் மூலமாகவும்,

1842 பேர் (41.4%) புணர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகத்தின் கந்தகாடு சிகிச்சை மற்றும் புணர்வாழ்வு நிலையத்தாலும் புணர்வாழ்வு அளிக்கப்பட்டனர்.

போதைபழக்கத்துக்கு அடிமையான பலர், அவர்களின் குடும்பங்கள் அதிலிருந்து மீள வழி இன்றி சமூகத்தால் ஒதுக்கப்பட்டு செய்வதறியாது சீரழிகின்றனர்.
அவ்வாறானவர்களுக்கு இத்தகவலை பகிர்ந்து உரியவர்களை தொடர்பு கொள்ள உதவி இக்கொடிய பழக்கத்திலிருந்து மீள உதவுவோம்.

Data Source: National Dangerous Drugs Control Board http://www.nddcb.gov.lk/

இலங்கையில் போதை பாவனை பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்களுக்கு இதனை Click செய்க.

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

2,587 total views, 1 views today