அரசாங்கத்தின் அலட்சியமா? அதிகாரிகளின் அசமந்தமா? மக்களின் அறியாமையா? Provincial Hospial Tablet Packets issue.

அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தோடு விமர்சனத்துக்கு உள்ளாகும் ஒரு விடயம்தான் படத்தில் (படம் 01) காட்டப்பட்டுள்ளவாறு (சம்மாந்துறை) வைத்தியசாலையில் வெற்று Paper இல் சுற்றப்பட்டு மாத்திரை வழங்கப்படுதல். இதனால் நோயாளிகள் சரியான மருந்து பாவனை முறைகள் தெரியாமல் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். அதேபோல் படம் இரண்டில் காட்டப்பட்டுள்ளது அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் Tablets packet.

ஏன் இதனை (சம்மாந்துறை போன்ற) மாகாண சபைக்கு கீழ் வரும் வைத்தியசாலைகளால் பெற முடியாமல் உள்ளது? அதில் உள்ள நிர்வாக சிக்கல்தான் என்ன?

சம்மாந்துறை வைத்தியசாலையானது மாகாண சபைக்கு கீழ் வருகிறது.
மாகாண சபைக்கு கீழ் வைத்தியசாலைகள் வந்தாலும் பல விடயங்கள் மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளது.
உதாரணமாக வைத்தியர் நியமனம் மற்றும் இடமாற்றம். வைத்தியசாலையை தரம் உயர்த்துதல் மற்றும் பெயர் மாற்றுதல் 😢, புதிய சேவைகள் மற்றும் கட்டிடங்கள் ,
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விநியோகம்போன்றவை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ( அதாவது இவ்விடயங்கள் நேரடியாக மத்திய அரசாங்கத்தின் இருந்து சுகாதார பணிமனைகள்(RDHS) ஊடாக செயற்படுத்தப்படும். மாகாண சபைக்கு இதில் அதிகாரம் இல்லை.)

இந்த இடத்தில் தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.
அதாவது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விநியோகிப்பதற்காக மத்திய அரசாங்கம் ஆண்டுதோறும் ஒவ்வொரு வைத்தியசாலையின் தரத்துக்கு ஏற்ப budget ஒன்றை வெளியிடும். அந்த அடிப்படையில் வைத்தியசாலை நிர்வாகி தேவையான மருந்துகளின் Estimate ஐ தயாரித்து RDHS ஊடாக மத்திய அரசாங்கத்திற்கு வழங்குவார். மத்திய அரசாங்கம் அப்பொருட்களை Regional Medical Supplies Division க்கு அனுப்பி வைக்கும். அது தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வைத்தியசாலைகளுக்கு வினியோகத்தை வழங்கும்.
( மத்திய அரசாங்கத்துக்கு கீழ்வரும் வைத்தியசாலைகளுக்கு நேரடியாகவே வினியோகம் இடம்பெறும்.)

மாகாணசபைகள் தமக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து வைத்தியசாலைக்கான சுத்திகரிப்பு பொருட்கள், காகிதாதிகள் மற்றும் Stationery, வைத்திய சாலை பாதுகாப்பு பிரிவு, சுத்திகரிப்பு பிரிவு போன்றவற்றுக்கான payments வழங்கும்.

Tablet Packets ஐ எடுத்துக் கொண்டால் அவை Stationary என்ற Category ற்குள் அடங்கும்.
எனவே இதனை வினியோகிக்க வேண்டியது மாகாண சபையே. (இங்குதான் பிரச்சினை இருக்கிறது.)

மத்திய அரசாங்கத்தினால் தயார் செய்யப்படும் Tablet Packets பெற்றுக் கொண்டாலும் அதனை RDHS ஊடாக மாகாண சபை Bill க்கான பணத்தை மத்திய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்.
இதற்கான நிதி பற்றாக்குறை or நிதி ஒதுக்கப்படாமையினாலேயே இந்த மாகாண சபைக்கு கீழான வைத்தியசாலைகளுக்குTablet Packets கிடைப்பதில்லை.
(இதற்கு பதிலாக பல வைத்திய சாலைகளில், மாணவர்கள் பத்திரமாக பாதுகாத்து ஒப்படைத்த அரச பாடப்புத்தகங்கள் கிழிக்கப்படுகின்றன.)

இதற்கான தீர்வுகள் என்ன?
01.நிரந்தர தீர்வு:-
01A. மாகாண சபை தமது கட்டுப்பாட்டின் கீழ் வரும் வைத்தியசாலைகளில் வருடத்துக்கான மருந்து பக்கெட் தேவையை கருத்தில் கொண்டு அதற்கான பட்ஜெட்டை தயாரித்து நிதி ஒதுக்கீடு செய்தல்.
இதற்கான முயற்சியை மாகாண சபை உறுப்பினர்கள் முன்னெடுக்க வேண்டும்.

01B. “மருந்தை நான் கொடுக்கிறேன், உறையை நீ கொடு” என்று மத்திய அரசாங்கம் மாகாண சபைகளின் மேல் சுமையை செலுத்தாமல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்ற Category க்குள் மாத்திரை உறைகளையும் எடுத்து மத்திய அரசாங்கமே அதனை வினியோகிக்கும் வழி முறையை கொண்டுவர வேண்டும். இதற்காக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

02.உடனடி தீர்வு:-
பிரச்சினைகளை எல்லோராலும் பேசவும் எழுதவும் முடியும் ஆனால் தீர்த்து வைக்க ஒருசிலரே முன்வருகின்றனர். சம்மாந்துறையை பொறுத்தவரையில் 400க்கு மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத சமூக சேவை அமைப்புகள் உள்ளன.

சம்மாந்துறை வைத்தியசாலையில் மாதாந்த OPD Tablet Packets களின் தேவை 30000 to 40000. இதட்கு செலவாகும் மாதாந்த செலவு அண்ணளவாக 15000rs.
12 சமூக சேவைகள் அமைப்புகள் சேர்ந்து ஒவ்வொரு மாதத்தை பொறுப்பெடுத்தாலே இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
இதற்கு மேலதிகமாக வர்த்தக நிறுவனங்கள், தனவந்தர்கள் முன்வரலாம்.
விமர்சனம் செய்வதில் காட்டும் ஆர்வம் திர்த்து வைப்பதில் இல்லை என்பது கசப்பான உண்மை.
Packet களில் Tablets வழங்கும் மாகாண சபைக்கு கீழான வைத்திய சாலைகளில் அன்பளிப்பு மூலமாகவே அவை நடைப்பெறுகின்றன.
(உங்கள் அனுபவங்களை Comment இல் பதிவிடவும்.)

எற்கனவே இதற்கான தீர்வை SFO சமூக சேவைகள் அமைப்பு ஒரு வருடத்துக்கு செய்தது. (படம் 03) அவர்களால் தனித்து தொடர்ந்து கொண்டுசெல்ல முடியாததால் கைவிடப்பட்டது.

நானும் தீர்வை சொல்லிவிட்டு விட்டுவிடவில்லை. இன்ஷா அல்லாஹ் Sammanthurai Peoples Health Welfare Association ஊடாக எதிர்வரும் வாரம் ஒரு இலட்சம் Tablet Packets அன்பளிப்பு செய்யப்பட இருக்கிறது.
இதனை தொடர்ந்து செல்ல ஏனைய சமூக சேவை அமைப்புகள் தனவந்தர்களின் உதவி தேவை. 10000 Packets களுக்கு 4200rs செலவாகும்.

ஆர்வமுடையவர்கள் inbox இலோ

https://m.facebook.com/story.php?story_fbid=1577869995681085&id=1487884744679611
0773625606 Whatsapp இலக்கத்துக்கோ தொடர்பு கொள்ளலாம்.
சொல்வீரர்கள் ஒதுங்கி செயல்வீரர்கள் முன்வரவும்.

“உலகின் தலைசிறந்த சொல் செயல்.”

By:- Dr Ziyad AIA

2,673 total views, 2 views today