❓ PCR Report இல் வரும் CT Value (Cycle Threshold Value) குறிப்பது என்ன? அதன் அளவீட்டை கொண்டு அச்சம் கொள்ள தேவையா? Tamil
By: Dr. A.I.A.Ziyad
இப்போது இலங்கையில் வழங்கப்படும் PCR Report களில் #Positive என்ற பெறுபேறு வந்தால் அதனுடன் சேர்த்து CT Value என்ற பெறுமானமும் குறிக்கப்பட்டிருக்கும். இந்த CT பெறுமானம் என்பது குறிப்பிட்ட மாதிரியில் Corona (SARS Cov-2) Virus ஐ கண்டுபிடிக்க தேவைப்படும் சுழட்சி (Cycle) அல்லது கால அளவு என்று சொல்லலாம்.
அதாவது, PCR எனும் Polymerese Chain Reaction என்பது நாசி / தொண்டை மாதிரியில் இருந்து பெறப்பட்ட மாதிரியை PCR இயந்திரத்தில் இட்டு மில்லியன் கணக்கில் பிரதி (Photo Copy) எடுக்கப்படும். பிரதிகள் இயந்திரத்தின் Sensor ஆல் உணரக்கூடிய ஆகக்குறைந்த அளவை எட்டும்போது Positive என்ற பெறுபேறு கிடைக்கும்.
PCR சோதனை பற்றிய எனது Video விளக்கத்துக்கு:
https://youtu.be/P4ZVNIbscLM
ஆரம்பத்தில் மூக்கு/தொண்டை பகுதியில் பெறப்படும் மாதிரியில்:
✅ அதிகளவு Corona virus கள் (High Viral Load) காணப்படும்போது PCR பிரதிகள் விரைவாக தேவையான அளவை (Threshold) எட்டுவதால் குறைந்த சுழட்சியில் CT Value (Cycle Threshold Value) Positive பெறுபேறு கிடைக்கும்.
✅ மாறாக பெறப்படும் மாதிரியில் குறைந்த அளவு Viral Load காணப்படும்போது PCR பிரதிகள் குறிப்பிட்ட அளவை அடைய நீண்ட நேரம் / அதிக சுழற்ச்சி (CT Value) தேவைப்படும்.
இதன்மூலம் விளங்குவது ஒருவரது PCR Report இல்
🛑 01. CT Value வானது குறைவாக காணப்படும்போது பெறப்பட்ட மாதிரியில் அதிகளவு வைரஸ் (Viral Load) உள்ளது என்றும்
🛑 02. CT Value வானது அதிகமாக காணப்படும்போது பெறப்பட்ட மாதிரியில் குறைந்தளவு வைரஸ் (Viral Load) உள்ளது என்றும் கொள்ளலாம்.
❓ இதன் அளவுகள் எவ்வாறு அமையும்?
🛑 01. CT Value 29 அல்லது அதனிலும் குறைவு எனில் பெறப்பட்ட மாதிரியில் அதிக Corona Virus கள் (High Viral Load)
🛑 02. CT Value 30 அல்லது அதனிலும் அதிகம் எனில் பெறப்பட்ட மாதிரியில் குறைந்த Corona Virus கள் (Minimal Viral Load) உண்டு என கொள்ளலாம்.
🛑 03. CT Value 35 க்கு மேலே செல்லும்போது சுழற்ச்சி நிறுத்தப்பட்டு Negative பெறுபேறு வழங்கப்படும்.
(இதனால்த்தான் Negative Results க்கு நேரமெடுக்கிறது.)
இந்த அளவீடு Machine ஐ பொறுத்து மாறுபடும்.
❓ CT Value ஐ அவதானிப்பதில் உள்ள அனுகூலம் என்ன?
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தின்படி
Discharge criteria for COVID-19 patients (Version 4 – 25th January 2021)
✅ 01. நோய் அறிகுறிகள் இன்றி PCR Positive என பெறுபேறு வருபவர்களுக்கு CT Value ஆனது 30 ஐவிட அதிகம் எனில்
✅ 01.A Antibody (IgG) பரிசோதனை செய்து அது Positive என வரும்பட்சத்தில் தனிமைப்படுத்தல் இன்றி விடுவிக்கலாம்.
❤️ (இங்கே Antibody Positive என்பதால் குறிக்கப்படுவது இவர் ஏற்கனவனே தொற்றுக்கு உள்ளாகி குணமாகியவர் என்று கருதலாம்.)
❌ இப்போ PCR செய்யவே வசதி இல்லாதபோது Antibody எல்லாம் எங்கே? எங்கு அங்கலாய்ப்பது புரிகிறது.
அத்தகையவர்களுக்கு
✅ 01.B நோய் அறிகுறிகள் இன்றி PCR Positive, CT Value = 30 என பெறுபேறு வந்து Antibody சோதனை செய்ய வாய்ப்பு இல்லாதபோதோ Antibody Test Negative என்று வரும்போதோ 10 நாட்கள் தனிமைப்பட்டு மேலதிக சோதனைகள் இன்றி வீடு செல்லலாம்.
✅ 02. நோய் அறிகுறிகள் இன்றி PCR Positive, CT Value < 30 இலும் குறைவு (அதிக Viral Load) இருப்பின் வைத்தியசாலை/ தனிமைப்படுத்தல் நிலையத்தில் 10 நாட்கள் தனிமைப்பட்டு வீட்டில் 4 நாட்கள் தனிமைப்பட வேண்டும்.
✅ 03. நோய் அறிகுறிகள் இன்றி PCR Positive என பெறுபேறு வந்து CT Value கிடைக்காதபோது 02 இல் குறிப்பிட்டதுபோல் (10 + 4) நாட்கள் தனிமைப்பட வேண்டும்.
✅ 04. PCR Positive + நோய் அறிகுறிகளை காண்பிப்போர்;
A. மிதமான நோய் அறிகுறிகள் (Moderate Illness) : 5 நாட்களுக்கு மேலான காய்ச்சல் (>38’C) நியூமோனியா மூச்சு திணறல் இன்றி
B. பாரதூரமான நோய் (Severe Illness) அறிகுறிகள்: 5 நாட்களுக்கு மேட்பட்ட காய்ச்சல் + நியூமோனியா மூச்சு திணறல் காணப்படல்
இவ்வாறான நிலையில் நோய் அறிகுறி தோன்றி 21 ஆவது நாளில் உடல் நிலை தேறியபின் விடுவிக்கப்படும்.
14 ஆவது நாளில் விடுவிப்பதாயின் நோய் அறிகுறிகள் தோன்றி 11 ஆவது நாளில் 24 மணித்தியால இடைவெளியில் இரு PCR சோதனைகள் செய்யப்படும். அவை Negative ஆகும் பட்சத்திலோ antibody test (lgG) is positive ஆகும் பட்சத்திலோ உடல்நிலை தேறிய ஒருவரை 14 வது நாளில் விடுவித்து 7 நாட்கள் வீட்டில் தனிமைப்பட பணிக்கப்படுவர்.
மேலதிக விபரங்களை இந்த Circular இல் காண்க.
https://www.epid.gov.lk/web/images/pdf/Circulars/Corona_virus/discharge_criteria_covid-19_updated_v4.pdf
❤️ சாதாரண தொற்றுக்கு உள்ளானவர் அறிகுறிகள் தோன்றியதில் இருந்து பத்து நாட்கள் வரை மட்டுமே வைரஸை பிறருக்கு பரப்பும் தன்மையுடன் இருப்பார்.
🛑 CT Value குறைவாக காணப்படும்போது (High Viral load) அக்காலப்பகுதியில் அடுத்தவர்களுக்கு பரவும் வேகமும் அதிகமாக காணப்படும். இவ்வாறான காலகட்டங்களில் கவனமாக செயற்பட வேண்டும்.
🛑 ஒருவருக்கு CT Value அதிகம் என்பதை வைத்துக்கொண்டு அந்நபருக்கு Viral Load குறைவு என நேரடியான முடிவுக்கும் வந்துவிட முடியாது. பெறப்பட்ட மாதிரியில் Viral Load குறைவு என்ற முடிவுக்கே வரமுடியும்.
மாதிரி பெறப்பட்ட இடம், மாதிரி பெறப்பட்ட காலம் (நோயின் ஆரம்ப நிலை) போன்ற காரணிகளால் மாறுபடலாம்.
🛑 எனவே RT-PCR சோதனையின் CT Value வை மாத்திரம் கொண்டு நோயின் தீவிர தன்மையை கணிப்பிட முடியாது. நோய் அறிகுறி இன்றிய பலருக்கும் CT Value குறைவாகவும் வந்துள்ளது.
நாம் பார்க்கும் CT value என்பது நாம் எடுத்த மாதிரியில் உள்ள வைரஸின் அளவை மட்டுமே கூறும்.
மாறாக நோயாளியின் உடலுக்குள் வைரஸ் தொடர்ந்து பல்கிப்பெருகிக்கொண்டே தான் இருக்கிறது. எனவே மாதிரியில் இருக்கும் வைரஸ் லோடு குறைவாக காட்டினாலும் உள்ளே நிஜமாக வைரஸ் லோடு அதிகமாக இருக்கலாம்.
Take Home Message:
எனவே CT value அதிகமாக இருக்கிறது என்பதற்காக அவருக்கு சாதாரண தொற்று வரும் என்றோ
சிடி வேல்யூ குறைவாக இருக்கிறது என்பதற்காக அவருக்கு தீவிர தொற்று வந்துவிடும் என்றோ அச்சப்படவும் தேவையில்லை.
மேலும் நோய் குணமடைந்தவர்களில் கூட வைரஸின் மரபணுக்கள் தொண்டை மற்றும் நாசியில் 28 நாட்கள் முதல் 35நாட்கள் வரை கூட இருக்கும்.
ஆனால் அதன் பல்கிப்பெருகும் தன்மையை இழந்து மிகவும் குறைவான அளவில் இருக்கும்.
எனவே தான் திரும்ப திரும்ப PCR பரிசோதனை செய்து நெகடிவ் என்று பார்க்க வேண்டும் என்று ஆசைபடக்கூடாது , அவசியமும் கிடையாது.
(😭 இதைத்தானேடா அப்போது ஜனாஸாக்களை எரிக்கும்போதும் சொன்னோம்.)
1,949 total views, 2 views today