பகுதி சூரிய கிரகணம் – ஞாயிறு: இலங்கையில் எப்படி, எந்த நேரம் தென்படும்.
தமிழில்: Ziyad Aia

இயற்கையின் அற்புதமான நிகழ்வான ஒரு பகுதிஅளவான சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று  (நாளை) தென்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. இது நிகழும்போது, ​​சந்திரன் சூரியனின் ஒளி பூமியை அடைவதைத் தடுக்கிறது. இதனால் சந்திரனின் நிழல் பூமியில் தென்படுகிறது.

இலங்கையர்கள் இதனை பகுதி அளவு சூரிய கிரகணமாக 24% மறைக்கப்பட்ட சூரியனை வட பகுதியில் உள்ளவர்களும் 16% மறைக்கப்பட்ட சூரியனை கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் உள்ளவர்களும் காண்பார்கள்.

பகுதி சூரிய கிரகணம் காலை 10.24 மணி முதல் தெரியும் மற்றும் யாழ்ப்பாண பிராந்தியத்தில் கிரகணத்தின் உச்சக்கட்டம் காலை 11.54 மணியளவிலும், கொழும்பு கிரகணத்தின் உச்சக்கட்டத்தை காலை 11.51 மணியளவில் காணலாம்.

சூரியக் கண்ணாடிகள், சாம்பல் அல்லது எக்ஸ்ரே தாள்களால் இருண்ட கண்ணாடிகள் (sun glasses, glasses darkened with ashes or X – ray sheets) ஆகியவற்றைப் பயன்படுத்தி சூரிய கிரகணத்தைக் பார்க்க வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது, ஆனால் சூரிய கிரகணத்தைக் பார்க்க குறிப்பாக பயன்படுத்தப்படும் எண் 14 வெல்டிங் கண்ணாடிகள் (No. 14 welding glasses) மற்றும் சூரிய கிரகணத்தை பார்க்க பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த பகுதியளவு சூரிய கிரகணத்தை வெற்று கண்களால் பார்க்க வேண்டாம் என்று உயர் கல்வி, தொழில்நுட்ப அமைச்சு (Ministry of Higher Education, Technology & Innovation) பொதுமக்களுக்கு கண்டிப்பாக அறிவுறுத்துகிறது.

News Source:

Partial Solar Eclipse – Sunday : How and what time to watch in Sri Lanka 👇

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

490 total views, 1 views today