❓ ஒட்சிசன் சிகிச்சை என்றால் என்ன? Oxygen Therapy யாருக்கு? எப்போது வழங்கப்படும்?
By Dr Ziyad Aia
பொதுவாக சத்திர சிகிச்சை , ICU , மற்றும் மயக்க நிலையிலுள்ள நோயாளிகளுக்கு Ventilator எனும் செயற்கை சுவாசம் மூலம் ஒட்சிசன் வழங்கப்படுவதை கேள்வியுற்றிருப்போம்.
இந்தியாவில் COVID இரண்டாம் அலையின் போது ஒட்சிசன் தட்டுப்பாடு அதனால் மரணங்கள் என பல செய்திகளை அடிக்கடி கேள்வியுற்றிருப்போம். இங்கு பேசப்படுவது Ventilator பற்றி அல்ல. Oxygen Therapy எனும் சிகிச்சை பற்றி.
❓ ஆக்ஸிஜன் சிகிச்சை என்றால் என்ன?
நாம் சுவாசிக்கும் காற்றில் காணப்படும் ஆக்ஸிஜன் என்ற வாயு மனித வாழ்க்கைக்கு இன்றி அமையாதது. சுவாசக் கோளாறு உள்ள சிலருக்கு இயற்கையாகவே போதுமான ஆக்சிஜன் கிடைக்காது.
அவர்களுக்கு துணை ஆக்ஸிஜன் (supplemental oxygen), அல்லது ஆக்ஸிஜன் சிகிச்சை (oxygen therapy) தேவைப்படலாம்.
❓ ஆக்ஸிஜன் சிகிச்சை யாருக்கு தேவை?
சுயமாக போதுமான ஆக்ஸிஜனைப் பெற முடியாதவர்களுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
இது பெரும்பாலும் நுரையீரல் நிலைமைகளால் நுரையீரல் ஆக்ஸிஜனை உறிஞ்சுவது குறையும்போது அவசியப்படுகிறது. அவ்வாறான நிலைமைகளாக:
✅ 01. Asthma எனும் மூச்சு வியாதி
✅ 02. நாள்பட்ட அடைப்பு நுரையீரல் நோய் (COPD) – இது Asthma வை ஒத்த பொதுவாக புகை பிடிபாபவர்களுக்கு நீண்ட நாட்களில் உருவாகும் நிலை.
✅ 03. நியூமோனியா (Covid தொற்றாலும் ஏற்படலாம்.)
✅ 04. மூச்சுக்குழாய் அழற்சி, (புதிதாகப் பிறந்த குழந்தைகளில் வளர்ச்சியடையாத நுரையீரல் காரணமாக ஏற்படுவது)
✅ 05. இதய செயலிழப்பு (Heart Failure)
✅ 06. சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் – Cystic Fibrosis
✅ 07. தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Sleep Apnoea)
✅ 08. நுரையீரல் நோய்
✅ 09. சுவாச தொகுதிக்கு ஏற்படும் அதிர்ச்சி (Trauma to respiratory system) – Covid தொற்றாலும் ஏற்படலாம்.
❓ ஒருவருக்கு ஒட்சிசன் சிகிச்சை தேவை என்பதை எவ்வாறு தீர்மானிப்பது?
ஆக்ஸிஜன் சிகிச்சையால் ஒரு நபர் பயனடைவாரா என்பதை தீர்மானிக்க, மருத்துவர்கள் நோயாளியின் நாடி இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை சோதிக்கின்றனர். ( Arterial Blood Gas Analysis)
மற்றொரு வழி, Pulse Oximeter ஐ பயன்படுத்துவதன் மூலம் இரத்த மாதிரி தேவையில்லாமல் ஆக்ஸிஜன் அளவை அல்லது செறிவூட்டலை மறைமுகமாக அளவிட முடியும். Pulse Oxymeter ஒரு நபரின் விரவக்ஷலில் Clip போல இணைக்கப்பட்டிருப்பதை அவதானித்து இருப்பீர்கள்.
நாடி இரத்த (Arterial Blood) ஆக்ஸிஜனின் இயல்பான அளவு 75 முதல் 100 mmHg வரை இருக்கும். ஆக்ஸிஜன் அளவு 60 mmHg அல்லது அதற்கும் குறைவாகும்போது துணை ஆக்ஸிஜனின் தேவை உருவாகிறது.
அதிகப்படியான ஆக்ஸிஜனும் ஆபத்தானது.அது, உங்கள் நுரையீரலில் உள்ள செல்களை சேதப்படுத்தும். உங்கள் ஆக்ஸிஜன் அளவு 110 mmHg க்கு மேல் செல்லக்கூடாது.
சிலருக்கு எல்லா நேரத்திலும் ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படுகிறது. பெரும்பாலானோருக்கு எப்போதாவது அல்லது சில சூழ்நிலைகளில் மட்டுமே இது தேவைப்படுகிறது.
❓ குறைந்த ஆக்ஸிஜனின் அறிகுறிகள் யாவை?
உங்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காதபோது, இதில் பல அறிகுறிகளை நீங்கள் அனுபவிப்பீர்கள்:
🛑 விரைவான சுவாசம்
🛑 மூச்சு திணறல்
🛑 வேகமான இதய துடிப்பு
🛑 இருமல் அல்லது மூச்சுத்திணறல்
🛑 வியர்த்தல்
🛑 குழப்பம்
🛑 உங்கள் சருமத்தின் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள்
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்.
❓ ஆக்ஸிஜன் சிகிச்சை வகைகள் யாவை?
பல்வேறு வகையான ஆக்ஸிஜன் சிகிச்சைகள் பயன்படுத்தப்படலாம். இவை பின்வருமாறு:
✅ ஆக்ஸிஜன் வாயு (Oxygen Gas)
இதில் வாயு நிலையில் ஒட்சிசன் சேமிக்கப்பட்டு இருக்கும். Portable வகையை சேர்ந்தது. வீடுகளில் வைத்தும் பாவிக்கலாம்.
✅ திரவ ஆக்ஸிஜன் (Liquid Oxygen)
இங்கு திரவ நிலையில் ஒட்சிசன் சேமிக்கப்பட்டு இருக்கும். Gas ஐ விட கொள்ளளவு கூடியது. இதுவும் வீடுகளில் பாவிக்கலாம்.
✅ ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் (Oxygen concentrators)
✅ ஹைபர்பரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை (hyperbaric oxygen therapy)
ஒட்ஸிசன் அழுத்தம் 4/5 மடங்கு கூடிய அறைகளில் வைத்து சிகிச்சை வழங்கும் முறையாகும். உங்கள் இரத்த நாளங்களில் காயங்கள், கடுமையான நோய்த்தொற்றுகள் அல்லது காற்றின் குமிழ்கள் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்க இந்த வகை ஆக்ஸிஜன் விநியோகம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இரத்த ஆக்ஸிஜன் அளவு மிக அதிகமாகிவிடாதபடி ஹைபர்பரிக் சிகிச்சை கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
❓ உடலினுள் ஓட்ஸிசன் விநியோக முறைகள் பின்வருமாறு: (படத்தில் காண்க.)
nasal cannula
the nonrebreather mask
the incubator (for infants)
continuous positive airway pressure (CPAP)
தகவல் மூலாதாரங்களுக்கு:
https://www.healthline.com/health/oxygen-therapy#types
https://www.webmd.com/lung/lung-home-oxygen-therapy
உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரபூர்வமான சுகாதார தகவல்களுக்கு எனது பக்கத்தை Like செய்து இணைந்திருக்க.
#Dr_Ziyad_Aia
#LankaHealthTamil.Com
1,344 total views, 1 views today