தமிழில்:- Dr Ziyad Aia
Li Wenliang எனும் 34 வயதுடைய Wuhan ஐ சேர்ந்த வைத்தியர் December 30 லேயே தனது வைத்தியசாலையில் 2003 களில் Corona Virus களால் பரவிய SARS ஐ ஒத்த நோய் அறிகுறிகளுடன் 7 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருப்பதை சக வைத்தியர்களுக்கு சீனாவில் உள்ள WeChat Social Media மூலம் அறிய படுத்தினார். ( சீனாவில் ஃபேஸ்புக் ஏற்கனவே தடை என்பது குறிப்பிடத்தக்கது)
இந்நோய் Wuhan இல் உள்ள Sea Food & Wild Animals மார்க்கெட்டில் இருந்தவர்களுக்கு வருவதாகவும் நியூமோனியா வை ஒத்த நோய் அறிகுறிகளை கொண்டிருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
இந்த செய்தியில் அவர் தனது சக ஊழியர்களையும் அவதானமாக இருக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.

இச்செய்தியை அவர் பகிர்ந்து சில மணி நேரங்களிலேயே அவரது பெயருடன் வைரலாக பரவியது.

இதனால் அவரும் அவருடைய சக வைத்தியர்கள் சிலரும் வதந்தி பரப்புவதாக குற்றம் சாட்டப்பட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

அவரது எச்சரிக்கையை ஆரம்பத்திலேயே கருத்தில்கொண்டு முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இன்றுவரையான 20,000 பேர் மற்றும் 425 மரணங்களை தவிர்த்திருக்கலாம்.

January 10, Wuhan இல் Corona Virus தொற்றுக்கு உள்ளான நோயாளியை சோதித்த பின் அவருக்கும் இருமல் காய்ச்சல் எடுத்தது. பின்னர் அவருக்கும் அந்நோய் பரவியதாக உறுதிப்படுத்தப்பட்டு இப்போது ICU வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Sources :-

https://edition.cnn.com/2020/02/03/asia/coronavirus-doctor-whistle-blower-intl-hnk/index.html

https://www.bbc.com/news/world-asia-china-51364382

https://www.washingtonpost.com/world/2020/02/04/chinese-doctor-has-coronavirus/

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

1,261 total views, 1 views today