💓👹⛄️பிடிச்சு இருக்கோ இல்லையோ இனி கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்வோம்! Live with Corona!
By: Dr Ziyad Aia

இலங்கையில் ஏன் இரவிலும் விடுமுறை நாட்களிலும் ஊரடங்கு?
Election க்காகத்தான் இந்த Selection ஆ?

💓 கொஞ்சம் அறிவியலோடு யதார்த்தத்தையும் பேசுவோம்.

May 11 உடன் இலங்கையில் ஊரடங்கு போடப்பட்டு 52 நாட்கள் ஆகின்றன.
கடந்த 7 நாட்களில் 240 புதிய நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தேதியை வைத்து Patient Zero வை கணக்கு பார்த்தாலும்
covid.iq.lk கணிப்பு படி 12th July ஆகலாம். அது இன்னும் நீடித்து செல்லவே வாய்ப்பு உண்டு.

மறுபுறம் இப்போது செய்யப்படும் RT-PCR சோதனையின் Sensitivity 50 – 70% விதமே. அதாவது 30% மானவர்களுக்கு நோய் இருந்தும் காண்பிக்காது.

So, Patient Zero வரை Lockdown சாத்தியமில்லை. இப்போதைக்கு தடுப்பூசிகள் இல்லை.
நோய் வந்தால் ஓரளவு தடுக்கக்கூடிய supportive மருந்துகள் உள்ளன.

இலங்கையில் Lockdown அமுல்படுத்தப் பட்டுள்ளதால் COVID-19 இன் வேகமான பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளத்தோடு பரவியவர்களுக்கும் எம்மிடம் இருக்கும் வழங்களை கொண்டு பராமரிப்பை வழங்க கூடியதாக உள்ளது.

இது போக இலங்கையில் Dengue Season பொதுவாக June , july மற்றும் October to December இல் தலைவிரித்து ஆடும்.
Corona வுக்கு பயத்தில் Dengue காய்ச்சலோடு வீட்டிலேயே இருந்தால் அதன் மரணவீதம் பயங்கரமானது.

இலங்கையில் Corona மரண வீதம் இன்றைய தேதியில் 1% ஆக உள்ளது. அதிக Testing செய்தால் இது இன்னும் குறையலாம்.

Lockdown இன்னும் தொடர்ந்தால் கொறோனாவால் நிகழும் மரணத்தை காட்டிலும் பொருளாதார மற்றும் பட்டினியால் நிகழும் மரணங்கள் அதிகரித்துவிடும்.

சமூக வலைத்தளங்களில் கருத்து சொல்லும் பலபேர் ஏதோ ஒரு வகையில் நிரந்தர வருமானம் உடையவர்கள் or வருமானமுடையவர்களின் பராமரிப்பில் உள்ளவர்கள்.
உண்மையான ஏழைகளுக்கு முகவரியும் இல்லை. முகநூலும் இல்லை.
Mobile phone இருந்தாலும் இலக்கத்தை மனனம் இட்டு Dial செய்யும் ரகம் அவர்கள்.
அவர்களின் நிலையை & நிலைப்பாட்டை ஒருபோதும் சமூக வலைத்தளங்கள் பிரதிபலிப்பதில்லை.

மறுபுறம் பிச்சை எடுப்பவர்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாது, வீதிகளிலும் செய்ய முடியாது.

 

இந்த சூழ்நிலையில் சடுதியாக Lockdown ஐ நீக்கி நாட்டை வழமைக்கு திருப்ப முடியுமா?

 

உண்மையில் இது இருகூர் கொண்ட கத்தி. கரணம் தப்பினால் மரணம்.
Lockdown ஐ முழுமையாக நீக்கி Bulb வாங்கிய பல நாடுகள் உண்டு.
Lock down இல்லாமல் நாளாந்த கடமைகளை செய்யும் ஆப்பிரிக்க நாடுகளும் உண்டு. பல்லாயிரம் மரணங்கள் நிகழ்ந்தும் Lockdown ஐ நீக்கி முகம்கொடுக்க தயாரான UK போன்ற நாடுகளும் உண்டு.

Lockdown நீடித்தால் எமது நாடு அதள பாதாளத்துக்கு செல்லும்.
Lockdown ஐ நீக்கி ஒருவேளை மரண ஓலங்கள் கேட்க ஆரம்பித்தால் மருத்துவ துறையில் இருந்து எதிர்க்கட்சி வரை அரசாங்கத்தை நோக்கி கை நீட்டும்.
(இந்த நிலையை தான் கீழுள்ள படம் பிரதிபலிக்கிறது.)

இதுக்குள்ள சனியன் தேர்தல் ஒன்று வந்த மாட்டிக்கிட்டு.
அரசங்கம் எது செய்தாலும் தேர்தலோடு ஒப்பிட்டே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் இந்த இரவு நேர ஊராடங்கும் ,விடுமுறை நாள் ஊராடங்கும்.
அதாவது நாட்டை இயங்கவும் விடணும். ஊரடங்கு இருக்கிற மாதிரியும் காட்டிக்கணும்.
(ஊராடங்கு இருக்கு ஆனா இல்ல.)
இது ஆரம்ப நாட்களில் இந்தியா, சவூதி அரேபியா, துபாய் போன்ற பல நாடுகள் கடைப்பிடித்த Technique தான் இந்த இரவு நேர ஊரடங்கு.

ஆரம்பித்த்தில் அரசு விட்ட தவறை ஊடகங்கள் உம்மத்தின் மீது சாட்டி திசை திருப்பியதுபோல் Lockdown அகற்றப்பட்டு அசம்பாவிதங்கள் நடந்தால் பெருநாள் Shopping மேல் பொறுப்பு சாட்டி தப்பிக்கலாம் என்ற நம்பிக்கையும் அரசுக்கு இருக்கும்.
எச்சரிக்கை மக்களே!

ஊரடங்கு (Lockdown) நீக்கப்பட்ட பின்னும் கொரோனாவுடன் நாமும் நம்முடன் கொரோனாவும் சேர்ந்து தான் வாழ இருக்கிறோம் என்பதை மனதில் நன்கு பதிய வைத்துக்கொள்வோம். 100% வழமையான செயட்பாடுகளை ஆரம்பித்து விட்டால் சடுதியாக Corona பரவி ஒரே நேரத்தில் எம்மால் கையாள முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

அரசாங்க மற்றும் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றுவோம்.

இது அரசாங்கத்தின் பரீச்சார்த்த முயற்சிதான்.

தொடர்ந்து

 முகக்கவசம் அணிவோம்

 சமூக இடைவெளியை கடைபிடிப்போம்

 கைகளை சோப் / சேனிடைசர் கொண்டு கழுவுவோம்.

கொரோனா தொற்றை கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தின் பெரும்பான்மையாக விளங்கும் இளமையான மக்கள் தொகை பெறப்பெற உருவாகும் மந்தை எதிர்ப்பு சக்தி எனும் Herd Immunity மூலம்
சில மாதங்களில் இருந்து சில வருடங்களில் கொரோனா நம்மை விட்டு விலகிச்செல்லும்.
(அதட்காக ஆட்டுமந்தைகள் போல் கூடி ஒரே நேரத்தில் பரவலை அதிகரித்து கைசேதப்படும் நிலைக்கு ஆளாக வேண்டாம்.)

தற்போது வரை கொரோனா தொற்றால் இலங்கையில் மரண விகிதங்கள் மிகக்குறைவாக இருப்பது ஆறுதலான விசயம்.

நாம் வீட்டில் இருக்கும் வயதான முதியோரையும் நீரிழிவு (Diabetes), பிரஷர் (Hypertension), Cancer போன்ற நோய்கள் இருபவர்களையும் கர்ப்பிணிகளையும், குழந்தைகளையும் முடிந்தளவு வீட்டுக்குள்ளேயே வைத்திருப்போம்.

அவர்களிடம் இருந்து முடிந்தவரை இடைவெளியை கடைபிடிப்போம்

கொரோனாவுடன் சேர்ந்து வாழ்ந்து அதை வீழ்த்துவோம்.

⛄️ Election வருகிறதோ இல்லையோ நாடு இந்த Lockdown இல் இருந்து வெளியே வந்துதான் ஆகணும். அதுதான் நெசம். இது கத்திமேல் நடக்கும் செயன்முறைதான். இதனை அரசியலாக பார்க்காமல் நாட்டின் நலனுக்காக அறிவுறுத்தல்களை பேணி,இறைவனை பிரார்த்திப்போம்.

#Dr_Ziyad_Aia
#LankaHealthTamil.Com

Herd Immunity என்றால் என்ன என்பதை அறிய கீழுள்ள பதிவை பார்க்க:
https://m.facebook.com/story.php?story_fbid=3081641751918980&id=100002195571900

COVID-19 Lockdown இனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள & ஏற்படவுள்ள பொருளாதார பாதிப்புகள் பற்றி அறிய:
https://www.facebook.com/104427794593487/posts/105587267810873/

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

425 total views, 7 views today