இலங்கையில் முதன்முறையாக உயிருள்ள ஒருவரின் ஈரல் மாற்று சத்திர சிகிச்சை (Liver Transplant) மூலம் 9 வயது குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.
நன்றி: Newswire.lk
தமிழில்: Dr Ziyad aia

ராகம வைத்தியசாலையில் ( North Colombo Teaching Hospital) ஈரல் மாற்று சத்திரசிகிச்சை பிரிவினால் உயிருள்ள ஒருவரின் ஈரலை 9 வயதான Cirrhosis எனும் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு வெற்றிகரமாக மாற்றீடு செய்யப்பட்டது.

ராகம வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ஐம்பதாவது ஈரல் மாற்று சத்திரசிகிச்சை ஆக இது இருந்தாலும் பிள்ளை ஒன்றுக்கு உயிருள்ள ஒருவரின் ஈரலை மாற்றியது இதுவே முதல் முறையாகும்.

Kishanu எனும் 9 வயதுடைய யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக்கொண்ட வறிய குடும்பத்தை சேர்ந்த பெண் பிள்ளை Liver chirrhosis எனும் நோய்க்கு உட்பட்டிருந்தாள்.
இது அரிய வகையான பாரம்பரிய காரணியால் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறு வயதிலேயே இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும் இதனை குணப்படுத்த முடியாததால் அடிக்கடி ICU வில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது அக்குழந்தை.

உயிரை காப்பாற்ற ஒரே வழியாக ஈரல் மாற்ரீடு செய்ய வேண்டும் என்று இருந்த நிலையில் இலங்கையில் குழந்தைகளுக்கான ஈரல் மாற்ரீடு வசதிகள் இருக்கவில்லை.

இதனால் ஒரே தெரிவாக வெளிநாட்டுக்கு செல்ல வேண்டியும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டியிருந்தது. இது அக்குடும்பத்தால் நினைத்தே பார்க்க முடியாத ஒன்று.

குழந்தைக்கு ஈரலை வழங்க அவளது 38 வயதான தாய் முன்வந்தார். தாயை சோதனை செய்ததில் அவரது ஈரல் குழந்தைக்கு பொருந்தியதால் இலங்கை வைத்திய குழு துணிகரமான செயலில் இறங்கியது.
July 14 2020 இல் இடம்பெற்ற இந்த சத்திர சிகிச்சை 12 மணி நேரங்களுக்கு மேல் மேற்கொள்ளப்பட்டது.

ராகம வைத்தியசாலையில் ICU கட்டில்கள் நிரம்பி இருந்ததால் ஹேமாஸ் தனியார் வைத்தியசாலையில் உள்ள ICU வில் 7 நாட்களுக்கு பிள்ளை அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் அவ் வைத்தியசாலை இச்சேவையை இலவசமாகவே வழங்கியது.

14 நாட்களின் பின் தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். தாயின் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை.

பொதுவாக ஈரல் மாற்று சத்திர சிகிச்சையின் போது வயதான ஒருவரின் 40% ஆன ஈரல் பகுதியை இன்னொருவருக்கு வழங்க முடியும். ஏனைய ஈரல் பகுதி தானாகவே மீள் உற்பத்தி செய்வதன் மூலம் சாதாரண வாழ்க்கையை வாழ முடியும்.

அதேபோல் அந்த ஈரலைப் பெற்றுக்கொண்ட குழந்தையும் பெரியவள் ஆகும்போது சாதாரண வாழ்க்கையை வாழ முடியும்.

Professor Rohan Sriwardena தலைமையிலான சத்திரசிகிச்சை குழு, மயக்கமருந்து குழு, சிறுவர் பராமரிப்பு குழு, கதிரியக்கவியல் குழு என 20க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் அடங்கலாக ஏனைய சுகாதார ஊழியர்களின் உதவியுடன் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு:
http://www.newswire.lk/2020/07/26/the-first-successful-paediatric-liver-transplant-in-sri-lanka-living/

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.

565 total views, 1 views today