குளியாப்பிட்டிய ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்திற்கு கீழான போதனா வைத்தியசாலையாக தரமுயர்வு. Kuliyapitiya Hospital Upgraded to Teaching Hospital.

அரசாங்கத்தின் கொள்கை தீர்மானத்திற்கு அமைய 2016 பெப்ரவரி 19 ஆம் திகதிய வர்தமானி அறிவித்தல் மற்றும் வரவு செலவு முன்மொழிவின் மூலம் இலங்கை வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தில் (Wayamba University of Sri Lanka) மருத்துவ பீடமொன்று நிறுவப்பட்டது.
புதிய மருத்துவ பீடத்தின் மாணவர்களுக்கு கிளினிக் பயிற்சிகள் பெற்றுக்கொள்ளும் வசதிகளை வழங்கும் பொருட்டு வடமேல் மாகாணத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, 2018.08.07 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய மற்றும் வடமேல் மாகாண கௌரவ ஆளுனரின் அனுமதியுடன் குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலை (BHK) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மத்திய அரசிற்கு பெற்றுக்கொண்டு போதனா வைத்தியசாலையொன்றாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
மேற்படி தீர்மானத்திற்கு அமைய குளியாபிட்டிய ஆதார வைத்தியசாலை “போதனா வைத்தயசாலை” பிரிவின் கீழ் 2019-01-24 சுற்றுநிருபத்தின்படி வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் இலங்கையில் மருத்துவ கல்வியை விரிவு படுத்தும் நோக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வரவு செலவு உரையில் முன்மொழிவுக்கு இணங்க இலங்கை சபரகமுவ பல்கலைக் கழகத்தில் மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்பட்டது. சபரகமுவ பல்கலைக் கழகத்தில் இப்புதிய பீடத்தின் மருத்துவ மாணவர்களுக்கு விரிவான மருத்துவ பயிற்சிகளை வழங்குவதற்காக இரத்தினபுரி மாகாண பொது வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டது.
2018.09.11 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்திற்கமைய, சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ பயிற்சிகளை வழங்குவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் பொருட்டு இரத்தினபுரி மாகாண பொது வைத்தியசாலை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அதற்கமைய இவ்வைத்தியசாலை “போதனா வைத்தியசாலை – இரத்தினபுரி” என மீள பெயரிடப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தலைவர் பணிப்பாளர் என்பது மாற்றமின்றி இருக்கும்.

 

 

696 total views, 2 views today