COVID-19 க்கு கியூபா மருந்து கண்டுபிடித்து விட்டதா? Interferon alfa-2b அதனை அமெரிக்கா தடுக்கிறதா?
By: Dr Ziyad Aia

ஒரு விடயத்தை அரைகுறையாக விளங்கி YouTube வீடியோ பதிவிடும் சில வில்லேஜ் விஞ்ஞானிகளால் கிளப்பி விடப்படும் குழப்பங்கள் இவை.

இந்த Interferon alfa-2b என்பது Recombinant Technology மூலம் E. Coli எனும் Bacteria விலிருந்து 2001 இல் சுவிட்சர்லாந்து , University of Zürich இல் Charles Weissmann எனும் விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது.
(Intron A என்பது அதன் உரிமம் பெற்ற முதலாவது Brand)
(Interferon இன் ஆரம்ப வடிவங்கள் 1970 களிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.)

Weissmann, Charles (2001), Buckel, Peter (ed.), “Recombinant interferon – the 20th anniversary”, Recombinant Protein Drugs, Milestones in Drug Therapy, Birkhäuser, pp. 3–41, doi:10.1007/978-3-0348-8346-7_1, ISBN 978-3-0348-8346-7, retrieved 2020-03-20

இது Leukemia, Lymphoma போன்ற இரத்த புற்று நோய்கள் மற்றும் நுரையீரல் புற்று நோய்களுக்கும் பாவிக்கப்படுகிறது. மற்றும் Hepatitis B & C போன்ற வைரஸ் தொற்றுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

உண்மையில் இந்த இன்டர்பெரோன் என்பவை மருந்து என்பதை விட immunity enhancer ஆகவே பயன்படுகிறது.

Cuba செய்தது என்ன?
COVID-19 நோயாளிகளுக்கு இதனை (Interferon alpha 2b) சோதித்ததில் நல்ல பலன்கள் கிடைப்பதாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை மேலும் பல நாடுகள் பரிசீலனை செய்கின்றன.
Interferon Alpha 2b ஐ Cuba முதலில் COVID-19 க்கு சோதித்ததால் அது
COVID-19 க்கான Cuba வின் மருந்து,
COVID-19 க்கான Cuba கண்டுபிடித்த மருந்து என்பது மருவி Media க்களில்
அந்த மருந்தே புதிதாக Cuba வினால் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற விம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது.

Interferon Alfa 2b பாவனையில் உள்ள பிரச்சினை என்ன?


இதன் பிரதான Side Effect இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல். (அப்படியே COVID-19 அறிகுறி மாதிரியே இருக்குல்ல.)
ஒரு மருந்தை பாவிப்பதானால் அதன் Risk vs Benifit ஆராயப்படும்.
Cancer நோயாளிக்கு அந்த நோயோடு ஒப்பிடும்போது இந்த Side effect பெரிதல்ல என்ற அடிப்படையில் தீவிர மருத்துவ கண்காணிப்பின் கீழ் Chemo Theraphy ஆக இலங்கையில் உள்ள சகல புற்றுநோய் வைத்திய சாலைகளிலும் வழங்கப்படுகிறது.

இலங்கையில் 4 நிறுவனங்களின் தயாரிப்புகள் உள்ளன. (See the picture)
https://nmra.gov.lk/index.php…

interferon alpha-2b இந்தியாவிலேயே தயாரிக்கும்போது எதுக்கு Cuba?

Interferon Alpha 2 manufacturing Indian companies
http://www.drugsupdate.com/brand/showavailablebrands/235

COVID-19 ஐ பொறுத்தவரை தெளிவான நன்மை நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே இந்த Side effects தாண்டி அந்த மருந்து பாவனைக்கு வரும். இது மிகவும் விலை கூடிய மருந்தும் கூட.

இதனை பல நாடுகள் சோதனை செய்து வருகின்றன.

COVID-19 க்கு பல நாடுகளில் பரீட்சிக்கப்பட்ட Side effects குறைந்த HydroChoroquine எனும் மருந்து இலங்கையிலும் பாவனைக்கு தயார் ஆகிறது.
https://www.gmoa.lk/hydroxychloroquine-for-covid-19/

அமெரிக்காவின், ஈரான் மற்றும் கியூபா பிரச்சினை பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஈரான் நாட்டுடன் அமெரிக்கா கொண்ட பிரச்சினையால் அதன் மசகு எண்ணெயை வாங்க வேண்டாம் என உலக நாடுகளை கட்டுப்படுத்துகிறது. அதற்காக மசகு எண்ணையை பாவிக்கக் கூடாது என்பது அர்த்தமல்ல.

அதேபோல்தான் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒத்து வராது. இதனால் கியூபா தயாரிப்புகளை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என தனது வல்லாதிக்கத்தை பயன்படுத்தி வருகிறது.
ஆனால் இந்த இன்டர்பெரோன் அல்ஃபா என்பது கியூபா தயாரிப்போ அதன் உரிமை மருந்தோ அல்ல.
கியூபா அதனைப் பாவித்து நன்மை தருவதாக சொல்லி இருக்கிறது இதனை பல நாடுகள் இப்போது சோதித்து வருகின்றன.
சோதனைகள் வெற்றி அளித்தால் பாவனைக்கு வரும்.
“கியூபாவின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தலாம் அறிவியலை அல்ல.”

உண்மையில் இந்தக் கட்டுரை ஒரு தேவையில்லாத ஆணி தான்.
ஆனால் பல பேர் பேஸ்புக்கிலும் whatsApp இல் Message அனுப்பி இதுபற்றி வினவுவதால் இப் பதிவை இடுகிறேன்.
இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று வைத்தியர்களுக்கே மருந்து சொல்லிக்கொடுக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

549 total views, 1 views today