By:- Dr Ziyad Aia
சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்களில் இவ்வாறான ஒரு செய்தி பரவியது:-
//இம்முறை இன்புளுவன்சா காய்ச்சல் புதிய வகையான Virus ஒன்றினால் மிக வேகமாக பரவி வருவதோடு அது தொண்டையில் தாக்கினால் 10 நிமிடங்களுக்குள் உடலில் பரவி உயிராபத்தை ஏற்படுத்தும். எனவே தொண்டை காய்ந்து விடாமல் தொடர்ந்து நீர் அருந்திக் கொண்டு இருக்க வேண்டும்.// என்று அந்த செய்தி இருந்தது.

இதனால் மக்கள் மிகவும் பீதி அடைந்தனர். மக்களின் இந்த அச்சத்தைப் போக்க சுகாதார அமைச்சு கடந்த 08-01-2020 இல் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதன் சுருக்கம்:-

” இன்புளுவென்சா (Influenza) வின் தற்போதைய நிலை”
Influenza பற்றி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் போலியான செய்தி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டதல்ல.

ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவக்காற்று காலப்பகுதியில் அதிகளவான Influenza தொற்று ஏட்படுவது வழமை.
அதன் அடிப்படையில் கடந்த 2019 November, December காலப்பகுதியில் அதிக நோயாளிகள் பதிவாகினர்.
அது டிசம்பர் கடைசி பகுதியில் இருந்து குறைய ஆரம்பித்துள்ளது.

Influenza Virus இனால் உருவாகும் காய்ச்சல் சாதாரணமாக தடிமல், இருமலோடு ஏட்படும். பெரும்பாலான நேரங்களில் அது தானாகவே குணமாகிவிடும்.

இருப்பினும் Risk அதிகமானவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். அவர்கள்:-
01. கர்ப்பிணி தாய்மார்கள்
02. இரண்டு வயதுக்கு குறைந்த குழந்தைகள்
03. 65 வயதிற்கு மேற்பட்டோர்
04. ஏனைய நோய்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்
Eg:- Diabetes, Cancer
05. நீண்டகால இதய, சிறுநீரக, ஈரல் பாதிப்பு உள்ளோர்

எனவே இவ்வாறான ரிஸ்க் உள்ளவர்கள் தகுதிவாய்ந்த வைத்தியரை நாடி ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோல் இந்த high-risk இல் இல்லாதவர்களில் கூட சுவாசிப்பது கடினமான நிலை ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெறவேண்டும்.

இந்த நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்க:-
01. தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டை பாவித்தல்
02. கையை நீர், சோப் கொண்டு கழுவுதல்
03. முகத்தை அடிக்கடி கைகளால் தொடுவதை தவிர்த்துக் கொள்ளுதல்
04. சன நெரிசலான இடங்களில் தேவையில்லாமல் கூடுவதை தவிர்த்தல்
05. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் கவனமாக இருத்தல்.

எனவே தற்போது நாட்டில் பரவிவரும் இன்ப்ளுவன்சா நோயானது வழமையான நோய் நிலைமையே. புதிய வகை வைரஸினால் உருவாவது அல்ல.

முழுமையான ஊடக அறிக்கையை கீழே பார்க்கலாம்:-

 

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

1,359 total views, 1 views today