நன்றி:- Wikipedia

நவீன மருத்துவத்தின் தந்தை இப்னு சீனா (Ibn Sina or Avicenna). இபின் சீனா அல்லது அவிசென்னா எனச் சுருக்கமாக அழைக்கப்படும், அபு அலி அல்-ஹுசெய்ன் இபின் அல்லா இபின் சீனா (கிபி 980 – கிபி 1037) பாரசீகத்தைச்சேர்ந்த, பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் வானியல், வேதியியல், நிலவியல், ஏரணவியல், தொல்லுயிரியல், கணிதம், இயற்பியல், கவிதை, உளவியல், அறிவியல் போன்ற பல துறைகளிலும் வல்லுனராக இருந்ததுடன், ஒரு போர்வீரராகவும், அரசியலாளராகவும், ஆசிரியராகவும் இருந்தார்.

இபின் சீனா 10 ம் வயதிலையே இஸ்லாமிய அடிப்படை அறிவை பெற்று திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார். இவர் இளம் வயதிலையே பல்வேறு ஆசிரியர்களிடம் அல் ஜிப்ரா, வான சாஸ்திரம், தர்க்கவியல், தத்துவம், இறையியல் என்று பல்வேறு விசயங்களை கற்றுக் கொண்டார்.

இவர் தனது 16 ம் வயதில் மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். இவர் 18 ம் வயதில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கினார். மன்னர் நூஹ் இப்னு மன்சூர் சாமாணி என்பவர் நோய்வாய் பட்டிருந்தபோது அவரது நோயை குணப்படுத்த முடியாமல் பல்வேறு மருத்துவர்கள் திரும்பிச் செல்லவே, இறுதியாக இப்னு சீனா அழைக்கப்பட்டார். மன்னரின் நோயை குணப்படுத்தினார் இப்னு சீனா. குணமாகிவிட்ட மகிழ்ச்சிப் பெருக்கால் மன்னர் யாருக்கும் அனுமதிக்காத தனது அரச நூலகத்தை பயன்படுத்தும் உரிமையை இப்னு சீனாவிற்கு வழங்கினார். தனது சிகிச்சைக்கு கைமாறாக இதனை கருதிய இப்னு சீனா, அந்நூலகத்தில் பொதிந்திருந்த அரும்பெரும் நூல்களை எல்லாம் கற்று பயன் அடைந்தார்.

அவர் எழுதிய நூல்களிலே உலகப் புகழ்ப்பெற்ற நூல் அல் கானூன் பித்திப் (The canon of Medicine) ஆகும். இந்நூல் 1270 ல் ஹீப்ரு (யூதர்களின்) மொழியிலும் லத்தின் மொழியிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு உள்ளது. இதன் லத்தின் மொழியாக்கம் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டதிலிருந்து 30 பதிப்புகளை கண்டுள்ளது.

15 ம் நூற்றாண்டில் இந்நூல் குறித்து பல்வேறு விளக்கவுரை நூல்கள் வெளிவந்துள்ளன. இந்நூலில் உள்ள உடற்கூறு பகுதி மட்டும் நீக்கப்பட்டு, டாக்டர்.O . C Gruner என்பவரால் 1930 ல் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்றால் இந்த 21 ம் நூற்றாண்டு வரை நீடித்து நிற்கும் இதன் செல்வாக்கை புரிந்துக் கொள்ளலாம்.

இவ்வாறு இப்னு சீனா எழுதிய “அல் – கானூன் பித்திப்” (’மருத்துவ நெறிமுறைகள்’) என்ற மருத்துவ கலைக்களஞ்சியம் 15 ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய பல்கலைகழகங்களின் மருத்துவ பாடத்திட்டத்தில் முக்கிய நூலாக சேர்க்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் நாட்டில் அமைந்து இருக்கும் பாரிஸ் மருத்துவ பல்கலைகழகத்தில் இவரது பெயரில் ஆய்வகம் ஒன்று அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்  நவீன மருத்துவத் தந்தையாகப் போற்றப்படுகிறார். [3][4][5]. முக்கியமாக உடலியக்கவியல் ஆராய்ச்சியில் முறைப்படியான பரிசோதனைகளையும், அளவீடுகளையும் முதன்முறையாகப் பயன்படுத்தினார்.[6]. தொற்றுநோய்களைக் கண்டறிந்தும், அவை தொற்றும் முறைகளை வகைப்படுத்தியும், அவற்றைக் கட்டுபடுத்தும் முறைகளைக் கண்டறிந்தும் அக்கால மருத்துவத் துறைக்குப் பெரும் பங்களிப்புகளைச் செய்தார்.[7]

 • “மருத்துவராகவும் மீஇயற்பியலாராகவும் விளங்கிய அவர் மாபெரும் பாரசீகச் சிந்தனையாளர் ஆவார்…” (excerpt from A.J. Arberry, Avicenna on Theology, KAZI PUBN INC, 1995).
 • “அவிசென்னாவின் பெயர் (இபின் சீனா, இறப்பு, 1037) இரானிய மெய்யியலார் காலவரிசையில் முதலில் வைக்கப்பட்டிருந்தாலும் அண்மைய ஆய்வுகள், இவரதையொத்த அல்லது சற்றும் குறையாத அமைப்புடைய இசுமிலி மெய்யியல் அமைப்புகள் முன்பே நிலவியதைக் கண்டுபிடித்துள்ளன. ” (from p. 74 of Henry Corbin, The Voyage and the messenger: Iran and philosophy, North Atlantic Books, 1998. இவர்பலதுறையறிஞர், அரசியலாளர், ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கிலும் [[இசுலாமியப் பொற்காலம் சார்ந்த மிகச்சிறந்த ந்தனையாளராகவும் எழுத்தாளராகவும் மதிப்பிடப்பட்டவர்.[8]

மிகவும் பெயர்பெற்ற அவரது இரண்டு நூல்கள் பின்வருமாறு:

1.நோயாற்றுதல் நூல் –இது ஒரு மெய்யியல் மற்றும் அறிவியல் களஞ்சியம்,

2.மருத்துவ நெறிமுறைகள்  –இது ஒரு மருத்துவக் களஞ்சியம்.[9][10][11]

இது நிரந்தர மருத்துவப் பாடநூலாக பல இடைக்காலப் பல்கலைக் கழகங்களில் விளங்கியது.[12]அது 1650 வ்ரை பயன்பாட்டில் இருந்தது.[13]அவிசென்னாவின் ’மருத்துவ நெறிமுறைகள்’ நூல் 1973இல் நியூ யார்க்கில் மறுஅச்சடிக்கப் பட்டது.[14]

 

சூழ்நிலைகள்

இசுலாமியப் பொற்காலத்தே அவசென்னா ஏராளமான நூல்களை எழுதினார். இப்பணிக்காக கிரேக்க,உரோமானிய, பாரசீக, இந்திய நூல்களின் மொழிபெயர்ப்புகள் விரிவாக அலசப்பட்டன. அக்காலத்தே கிரேக்க, உரோமானியச் சிந்தனை புலமைப் பரப்புகள், குறிப்பாக இடைநிலைப் பிளாட்டொனியமும்புதுப் பிளாட்டோனியமும் அரிசுட்டாட்டிலியமும் சார்ந்த பனுவல்கள் அல்-கிந்திச் சிந்தனைப் பள்ளியால் மொழிபெயர்க்கப்பட்டு அவற்றுக்கு இசுலாமிய அறிஞர்களால் உரைவிளக்கமும் மீளாக்கமும் கணிசமான புத்துருவாக்கங்களும் உருவாக்கப்பட்டன.இவர்கள் பாரசீக, இந்திய வானியல், கணிதவியல், கோண அளவியல் மருத்துவம் சார்ந்த மரபுவழி அமைப்புகளை வளர்த்தெடுத்தனர்.[16] 

இப்புலமைப் பின்னணியில் குர்ரானும் ஹதீஸும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மெய்யியலும் இறையியலும் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டன. இவை அவிசென்னாவாலும் அவரது எதிரிகளாலும் மேற்கொள்ளப்பட்டன. Al-RaziAl-Farabiஆகிய இருவரும் மருத்துவ முறையியலையும் அறிவுப் பரப்பையும் விரிவாக்கினர். அவிசென்னா பால்க், குவாரழ்சுமி, இரே(இரான்), இசுஃபாகன், ஃஅமடான் கார்கான், போன்ற பல நூலகங்களை அணுகி, பல பனுவல்களைப் பார்வையிட முடிந்துள்ளது. ‘Ahd with Bahmanyar’ போன்ற பல்வேறு நூல்கள் இவர் அக்காலத்தின் மிகப் பெரிய பேரறிஞர்களுடன் வாதிட்டதைக் குறிப்பிடுகின்றன..குவாரழ்சுமி நூலகத்தை விட்டு வெளியேறும் முன்பு இவர்Rayhan Biruni (பெயர்பெற்ற அறிவியல், வானியல் அறிஞர்), Abu Nasr Iraqi (புகழ்மிக்க கணித வல்லுநர்), Abu Sahl Masihi (பெரிதும் மதிக்கப்பட்டமெய்யியலார்), Abu al-Khayr Khammar (சிறந்த மருத்துவ மேதை) ஆகியவர்களைச் சந்தித்ததை அருழ்சி சமர்கந்தி விளக்குகிறார்.

இப்னு சீனாவின் கால பகுதியிலேயே வாழ்ந்த சத்திர சிகிச்சையின் தந்தை (Father of Surgery) என அழைக்கப்படும் Al-Zahrawi பற்றிய Wikipedia பதிவையும் அதனுடன் கீழே தரப்பட்டுள்ள Resources ஐயும் ஆய்வு செய்யுங்கள்.

https://en.wikipedia.org/wiki/Al-Zahrawi

10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் Al-Zahrawi கண்டுபிடித்த சத்திர சிகிட்சை முறைகள் , சத்திர சிகிட்சை உபகரணங்கள் , மருந்துகள் பற்றிய தெளிவான வரலாறுகள் உண்டு.
எல்லாவற்றையும் யூத கிறிஸ்தவர்களுக்கு தாரைவார்த்துவிட்டு மடமையில் மூழ்கிக் கிடக்கிறோம்.

 

மேற்கோள்கள் (Resources)

 1.  கோர்பின், (1993) பக்.170
 2.  கோர்பின்,(1993) பக். 174
 3.  Cas Lek Cesk (1980). “The father of medicine, Avicenna, in our science and culture: Abu Ali ibn Sina (980-1037)”, Becka J. 119 (1), p. 17-23.
 4.  Medical Practitioners
 5.  D. Craig Brater and Walter J. Daly (2000), “Clinical pharmacology in the Middle Ages: Principles that presage the 21st century”, Clinical Pharmacology & Therapeutics 67 (5), p. 447-450 [448-449].
 6.  Katharine Park (March 1990). “Avicenna in Renaissance Italy: The Canon and Medical Teaching in Italian Universities after 1500 by Nancy G. Siraisi”, The Journal of Modern History 62 (1), p. 169-170.

“Students of the history of medicine know him for his attempts to introduce systematic experimentation and quantification into the study of physiology”.

 1.  David W. Tschanz, MSPH, PhD (August 2003). “Arab Roots of European Medicine”, Heart Views 4 (2).
 2.  “Avicenna (Persian philosopher and scientist) – Britannica Online Encyclopedia“. Britannica.com. பார்த்த நாள் 2012-01-07.
 3.  Nasr, Seyyed Hossein (2007). “Avicenna“. Encyclopædia Britannica Online. அணுகப்பட்டது 2007-11-05.
 4.  Edwin Clarke, Charles Donald O’Malley (1996), மாந்தனின் மூளையும் தண்டுவடமும்: பழங்கால முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்று ஆய்வு, Norman Publishing, p. 20 (ISBN 0-930405-25-0).
 5.  Iris Bruijn (2009), Ship’s Surgeons of the Dutch East India Company: Commerce and the progress of medicine in the eighteenth centuryAmsterdam University Press, p. 26 (ISBN 90-8728-051-3).
 6.  “Avicenna 980-1037“. Hcs.osu.edu. பார்த்த நாள் 2010-01-19.
 7.  e.g. at the universities of Montpellier and Leuven (see “Medicine: an exhibition of books relating to medicine and surgery from the collection formed by J.K. Lilly“. Indiana.edu. மூல முகவரியிலிருந்து14 December 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2010-01-19.).
 8.  https://ia700505.us.archive.org/8/items/AvicennasCanonOfMedicine/9670940-Canon-of-Medicine.pdf, Avicenna’s Canon Of Medicine,by Cibeles Jolivette Gonzalez
 9.  “Avicenna”, in Encyclopædia Iranica, Online Version 2006“. Iranica.com. பார்த்த நாள் 2010-01-19.
 10.  Major periods of Muslim education and learning“. Encyclopædia Britannica Online. (2007). அணுகப்பட்டது 2007-12-16.
 11.  Afary, Janet (2007). “Iran“. Encyclopædia Britannica Online. அணுகப்பட்டது 2007-12-16.
 12.  Encyclopædia IranicaAvicenna biography

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

6,749 total views, 1 views today