அந்த காலத்தில் வீட்டில் தானே பிரசவம் பார்த்தார்கள். இப்போது வைத்தியசாலை எதற்கு? Home Delivery Vs Hospital Delivery

சிலர் சமூக வலைத்தளங்களில் அக்காலத்தில் வீட்டு பிரசவத்தில் மரணங்கள் ஏற்படவில்லை என்கின்றவாறு கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்காக இத்தகவல்.

இலங்கை பதிவாளர் திணைக்களத்திடம் இருந்து 1911 முதல் கர்ப்பிணி தாய் மரண வீதம்.    தமிழாக்கம் Dr Ziyad Aia

இலங்கை 1948 இல் சுதந்திரத்தை பெற்றுக் கொண்ட காலப்பகுதியில் 100,000 குழந்தை பிறப்புகளில் 1700 கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பம் சம்பந்தமான காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.

2014இல் இது ஒரு இலட்சத்திற்கு 32.03 ஆக குறைவடைந்துள்ளது. இதற்கு பல விடயங்கள் காரணமாக அமைந்துள்ளன. அவையாவன:-
மக்களின் சமூக பொருளாதார நிலைமையில் ஏற்பட்ட முன்னேற்றம், இலவச கல்வி அதனுடன் இணைந்த கல்வி அறிவு மட்ட அதிகரிப்பு, இலவச சுகாதார சேவை, சிறந்த போக்குவரத்து வசதிகள், தொற்றா நோய்களை கட்டுப்படுத்தியமை, சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியசாலை பிறப்புகள்.

தற்சமயம் இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு ஒப்பான அளவுக்கு மிகக் குறைந்த அளவிலான கர்ப்பிணி தாய் மரண வீதத்தைக் (Meternal Morality Rate) கொண்டுள்ளது. இதற்கு தேசிய குடும்ப சுகாதார பணியகத்தின் ( Family Health Breau) செயற்பாடும் மிக முக்கிய காரணமாகும்.

கீழே உள்ள வரைபுகள் கர்ப்பிணித்தாய் மரண வீதத்தைக் (MMR) காட்டுகின்றன. அதில் 1911 முதல் 1995 வரையான தகவல்கள் இலங்கை பதிவாளர் திணைக்களத்திடம் (Registrar General’s Department) இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எல்லா கர்ப்பிணி தாய் மரணங்கள் சம்மந்தமான பதிவுகளும் பதியப்படாத காரணத்தால் இம்மரணங்கள் இக்காலப்பகுதியில் (1911-1995) இன்னும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

1995 முதல் இலங்கை குடும்ப சுகாதார பணியகம் (FHB) ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் கர்ப்பிணித் தாய்மார்களை பதிவு செய்து வருகிறது. 
இதன் தகவல்படி 2014இல் ஒரு இலட்சம் குழந்தைப் பிறப்பில் 32.03 கர்ப்பிணித் தாய் மரணம் இடம்பெற்றுள்ளது. 1985 முதல் கர்ப்பிணித்தாய் மரணங்கள் நேரடியாக குடும்ப சுகாதார பணியகத்தில் பதியப்படுகிறது. 1995 முதல் குடும்ப சுகாதார பணியகம் கர்ப்பிணி தாய் மரண வீரத்திற்கான புள்ளி விவரங்களை பதிவு செய்யும் உத்தியோகபூர்வ பணியகமாக அங்கீகரிக்கப்பட்டது.
தற்போது நாடுபூராகவும் நிகழும் சகல கர்ப்பிணித்தாய் மரணங்களும் பதிவு செய்யப்படுகின்றன. மரணம் நிகழ்ந்து 24 மணித்தியாலத்துக்குள் குடும்ப சுகாதார பணியகத்துக்கு Notification அனுப்பப்படுகிறது. 
அதனைக் கொண்டு மரணங்களை கள ரீதியாகவும், வைத்தியசாலை ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் ஆராயப்படுகிறது. 
அவற்றுக்கான காரணங்களை மகப்பேற்று நிபுணர்களை கொண்டு கண்டறியப்படுகிறது. எதிர்காலங்களில் அவ்வாறான மரணம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை குடும்ப சுகாதார பணியகம் மேற்கொள்கிறது. H677a , H677 form கள் ஊடாக தகவல்கள் திரட்டப்படுகின்றன.

2009 முதல் சகல கர்ப்பிணி மரணங்களுக்கும் பிரேத பரிசோதனை (Post Mortum) கட்டாயம் என சுகாதார அமைச்சின் செயலாளரினால் சகல திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கும் (Coroner) உத்தரவிடும் Circular விநியோகிக்கப்பட்டது.
ஒரு கர்ப்பிணித் தாய் மரணம் இடம்பெற்றால் அதனுடன் சம்பந்தப்பட்ட சகல தகவல்களும் ஆராயப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆராயப்படும் தகவல்கள் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Eg:- Meternal Death Investigation Report, bed Head Tickets, other clinical records, pregnancy records, & postmortom reports.

மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள லிங்கை பார்க்கவும்.
http://www.epid.gov.lk/web/images/pdf/wer/2015/vol_42_no_46-english.pdf

Note:-
இது இவ்வாறு இருக்க சில முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் விட்டு பிரசவம் மற்றும் அதனுடனான கர்ப்பிணித்தாய் மரணங்கள் பல உயர் மட்டங்களில் பேசப்பட்டு வருகின்றன. அதன் பின்விளைவுகளை எமது சமூகம் சிந்தித்து செயற்பட வேண்டும்.

781 total views, 4 views today