தூக்கிலிடல் சந்தர்ப்பங்களும், மரணம் நிகழும் முறையும்:
By Dr Ziyad Aia

தூக்கிலிடல் (Hanging) என்பது தனது உடலின் முழுமையான or பகுதியான பாரதத்தின் மூலம் கழுத்து பகுதி நெரிக்கப்பகிடுவதை குறிக்கும்.

தூக்கிலிடும் எல்லா சந்தர்ப்பங்களிலும் மூச்சு திணறினால் மாத்திரம் மரணம் நிகழ்வதில்லை.

முழுமையான தூக்கிடல்: (Total Hanging)
உடலின் முழுமையான பாரமும் தொங்குவதால் இது நிகழ்கிறது. இதன் போது உடலானது ( கழுத்து பகுதியை தவிர) வேறு எந்த பொருளுடனும் தொடுகையில் இருக்காது. பொதுவான தூக்குத் தண்டனை மற்றும் தற்கொலைகள் இதில் அடங்கும்.

பகுதியான தூக்கிடல்: (Patial Hanging)
இதில் கழுத்துப்பகுதி நெறிக்கப்பட்டு இருந்தாலும் உடல் பகுதி அளவிலேயே தொங்கிய நிலையில் காணப்படும்.
நிலத்தில் கால் வைத்த நிலையிலோ சுவரில் சாய்ந்த நிலையிலோ படுத்து கொண்ட நிலையிலோ இது நிகழலாம்.
(படத்தை பார்க்க.)
இது பொதுவாக குடிபோதையில் நிகழும் தாட்கொலைகள், பயமுறுத்த செய்த செயல் மரணத்தில் முடிதல்,
குழந்தைகள் தவறுதலாக சீலை, மற்றும் கயிறு போன்றவை கட்டில், கதவு Handle போன்றவற்றில் கழுத்துடன் சேர்த்து சிக்கும்போது மரணம் நிகழ்கிறது.
இவ்வாறான நிலைகளில் மூச்சு திணறலை விட இரத்த நாளங்கள் இறுகுவதால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு மரணம் நிகழ்கின்றது. இதனை உறுதி செய்ய Post Mortem த்தின்போது கழுத்து பகுதியில் இரத்த உறைவு (petechial haemorrhages), கண்களில் இரத்த கசிவுகள் (conjunctival injection) காணப்படும்.

தூக்கிலிடல் நிகழும் சந்தர்ப்பங்கள்:

01. தற்கொலை (Suicide):
இலங்கையில் பிரதானமாக தற்கொலை இடம்பெறும் விதம் தூக்கிலிடல் முறையாகும். இதன்போது பொதுவாக வெளி காயங்கள் காணப்படுவதில்லை.
(மேலதிக விபரங்களுக்கு முன்னைய பதிவை பார்க்க.)

02. தற்செயலாக (Accidental):
பொதுவாக குழந்தைகள் சீலை, ஊஞ்சல் மற்றும் கயிறுகளில் கழுத்து சிக்கும்போது ஏற்படலாம். வயதுவந்தவர்களில் Masochist எனும் பாலியல் முறையில் நிகழலாம்.

03. கொலை: (Homicide)
தூக்கிலிட்டு கொலை செய்தல் என்பது அரிதாக நிகழ்ந்தாலும் , நிகழ்ந்த கொலையை மறைக்க மரணித்த பின்னர் தூக்கிலிடலாம்.
(Eg: போலீஸ் தடுப்பு காவலில் நிகழும் தற்கொலைகள்)
ஆரோக்கியமான வயது வந்த ஒருவரை தூக்கிட்டு கொலை செய்வது கடினம் இருப்பினும் மது மற்றும் போதை பாவனையால் சுயநினைவின்றி இருக்கும்போது செய்யப்படலாம்.

சில சந்தர்ப்பங்களில் கழுத்தை நெரித்து or கம்பியால் கொலை செய்தபின் தூக்கிலிட்டு ஆதாரங்களை மறைக்கலாம்.

04. மரண தண்டனை (Judicial Hanging)
பொதுவாக இலங்கை உட்பட பல நாடுகளில் மரண தண்டனை தூக்கிலிடல் மூலம் வழங்கப்படுகிறது.
இங்கே தூக்கிலிடும் உயரமானது கழுத்து பகுதியில் இருக்கும் என்பு விலகி முண்ணானை உடைப்பதன் மூலம் உடனடியாக சுய நினைவு இழக்க செய்யப்பட்டு சில நிமிடங்களிலேயே மரணம் நிகழ்கிறது.

தூக்கில் இடும் போது மரணம் நிகழும் முறைகள்:

01. மூச்சு திணறல் (Asphyxia):
இதன்போது தொண்டையின் அடிப்பகுதி மேல்நோக்கியும் பின்னோக்கியும் இழுக்கப்படுகிறது. இதனால் நாக்கு பகுதி மூச்சுக் குழலை மூடுவதால் மூச்சுத்திணறல் மூலம் மரணம் நிகழ்கிறது.

02. மூளைக்கான இரத்த ஓட்டம் தடைப்படல்: (Cerebral Ischemia)
மூளைக்கு இரத்தம் வழங்கும் நாடிகள் (Artery) தடைபடுவதால் மூளை பாதிக்கப்பட்டு இது நிகழ்கிறது.

03. மூளையில் இருந்து திரும்பும் இரத்தம் தடைபப்டல் (Cerebral Congestion)
இது மூளைக்கு சென்ற இரத்தம் மீண்டும் நாளங்கள் (Veins) மூலம் இதயத்துக்கு செல்ல முடியாததால் நிகழ்கிறது. (Stagnant Hypoxia)
பொதுவாக பகுதி அளவான தொங்குதல் மற்றும் குழந்தைகளின் கழுத்து இறுகுதல் போன்றவற்றில் மரணம் நிகழும் பிரதான முறை.

04. Vagal Inhibition:
இது கழுத்து நெரிக்கப்படும்போது இதயத்தை தூண்டும் நரம்பின் பகுதியான (கழுத்து பகுதியில் காணப்படும்) Carotid Bodies நெரிக்கப்படுவதால் இதயம் நின்று மரணம் நிகழலாம். ( மிக அரிதான முறை)

05. கழுத்து எலும்பு விலகல்
(Fracture dislocation of upper cervical vertebral column)
முன்பு குறிப்பிட்டது போல் மரண தண்டனை வழங்கும் போது மரணம் நிகழும் முறை.
இங்கு கழுத்து என்பு விலகி முண்ணானை அழுத்துவதால் உடனடியாக மரணம் நிகழும்.

கேள்வி: ஒருவர் தன்னைத்தானே கழுத்தை நெரித்து தற்கொலை செய்ய முடியுமா? Please Comment

By: Dr A.I.A.Ziyad
MBBS (Pera)
MSc Biomedical Informatics
Registrar in MD Health Informatics

Source:
Forensic Medicine & Medical Law
2nd Edition by Dr Hemamal Jayawardena

உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரபூர்வமான சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
Facebook.com/LankaHealthTamilPage

778 total views, 1 views today