ஊருக்கொரு ஆதார வைத்தியசாலையால் General Hospital க்கான வாய்ப்பை இழந்து வரும் RDHS Kalmunai.
மருத்துவ புறக்கணிப்புகள் அதிகரிக்குமா?
நாணயத்தின் மறுபக்கம்.
இலங்கை 25 நிர்வாக மாவட்டங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நிர்வாக மாவாட்டத்துக்கும் ஒரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை (RDHS) அடங்கலாக மொத்தம் 26 உள்ளது . அந்த 26 வரக் காரணம் அம்பாரை மாவட்டம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது.
1. கல்முனை பிராந்தியம்
2. அம்பாறை பிராந்தியம்
கல்முனைப் பிராந்தியத்தை எடுத்துக் கொண்டால் இங்கு 7 ஆதார வைத்தியசாலைகள் (Base Hospitals) காணப்படுகின்றன. அதாவது கல்முனை வடக்கு , கல்முனை தெற்கு (எனும் Ashraf Memorial Hospital), அக்கறைப்பற்று, சம்மாந்துறை பொத்துவில், திருக்கோவில் மற்றும் நிந்தவூர். இவற்றில் கல்முனை North & South மற்றும் அக்கறைப்பற்று ஆகிய மூன்றும் மத்திய அரசாங்கத்திற்கு கீழும் ஏனைய நான்கும் மாகாண அரசாங்கத்திற்கு கீழும் வருகின்றன.
எமது நாட்டிலுள்ள வைத்தியசாலை கட்டமைப்பைப் பற்றி அறிய கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://www.lankahealthtamil.com/இலங்கையின்-வைத்தியசாலை-க/
இலங்கையில் கல்முனை பிராந்தியம் தான் அதிகளவான ஆதார வைத்தியசாலைகளைக் கொண்டுள்ளது. இதனால் எமக்கான மருத்துவ சேவைகள் சிறப்பாக இருக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அதில் மறைந்து கிடக்கும் ஒரு கசப்பான உண்மையை வெளிக்கொணரவே இந்தப் பதிவு.
சாதாரண பிராந்திய வைத்தியசாலைளை ஆதார வைத்தியசாலைகளக தரமுயர்த்துவதால் நல்ல சேவை தானே மக்களுக்கு கிடைக்கும் என கேட்கலாம்.
ஆனால் அந்த தரமுயர்த்தலானாது திட்டமிட்ட அடிப்படையில் செய்யப்படவில்லை. பிராந்திய வைத்தியசாலைகள் ஆதார வைத்தியசாலைகளாக தரமுயர்த்தப்படுவதற்கு முன்னர் கல்முனை பிராந்தியத்துக்கான பொது வைத்தியசாலையை பெற்றிருக்க வேண்டும். நாம் வரலாற்று தவறை இழைத்து விட்டோம்.
எமது பிராந்தியத்தை எடுத்துக்கொண்டால் பொது வைத்தியசாலையாக (General Hospital) அம்பாறை மாவாட்டத்துக்கு அம்பாறை பொது வைத்தியசாலையும் அதற்கு அடுத்த படியாக மட்டகளப்பு போதனா வைத்தியசாலையுமே அருகிலுள்ள வைத்தியசாலைகள். இதில் அம்பாறை வைத்தியசாலையை மக்கள் மொழிப் பிரச்சினை, அவ் வைத்தியசாலையில் உள்ள கட்டுப்பாடுகள், தூரம் காரணமாக தவிர்ந்து வருகின்றனர். மட்டகளப்பு வைத்தியசாலையை எடுத்துக்கொண்டால் அது மிக நீண்ட தொலைவில் உள்ளது . ஆக கல்முனை பிராந்தியத்துக்கான ( RDHS – Kalmunai) பொது வைத்தியசாலை காலத்தின் கட்டாயம்.
ஏன் இந்த பொது வைத்தியசாலை என்ற ஒன்று தேவைப்படுகிறது?
வெறும் உட்கட்டமைப்பு மற்றும் facilities ஐ அதிகரிப்பதற்கு மாத்திரமா என்றால் நிச்சயமாக இல்லை.
இதனை சத்திர சிகிச்சை நிபுணர்களின் (Surgeon) நியமனத்தை கொண்டு புரிய வைக்கலாமென்று நினைக்கிறேன். அதாவது அம்பாறை, மட்டக்களப்பு போன்ற பொது வைத்தியசாலைகளில் குறைந்தது 3 அல்லது 4 சத்திர சிகிச்சை நிபுணர்கள் காணப்படுகிறார்கள் (அதுவே General Hospitals க்குரிய Cadre.) எனவே ஒரு விபத்து அல்லது ஏதாவது ஒரு அவசர நிலைமை வந்தால் யாராவது ஒரு சத்திர சிகிச்சை நிபுணர் அதனைப் பார்வையிடக்கூடிய சாத்தியமுண்டு. பொதுவாக 3 சத்திரசிகிச்சை நிபுணர்கள் ஒரு வைத்தியசாலையில் இருந்தால் அந்த மூவருக்கும் ஒரு மாதத்தைப் பிரித்துப் பத்துப் பத்து நாள் on call என்ற அடிப்படையில் வரும். எனவே அந்த 10 நாளில் எந்த சத்திர சிகிச்சை நிபுணர் பொறுப்பாக உள்ளாரோ அவருடைய விடுதிக்கு அந்த நோயாளி அனுமதிக்கப்படுவார். அவர் எந்த நேரமும் அந்த நோயாளியை பார்க்கக்கூடிய வசதி ஏற்படும். அதேநேரம் பொதுவைத்தியசாலையாக இருந்தால் Interntship எனும் பயிற்சி வைத்தியர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் பொதுவாக 24 மணி நேரமும் வேலை செய்யக்கூடிய நிலைமை இருக்கும். அதேபோல் நிபுணராக கற்று கொண்டிருக்கும் வைத்தியர்களும் (Registrar, Senior Registrar) நியமிக்க படுவர். எனவே நோயாளிகளுக்கு சிறந்த கவனிப்புக் கிடைக்கும்.
“இதை வைத்துக் கொண்டே பலர்பொது வைத்தியசாலைகளுடன் ஒப்பிட்டு ஆதார வைத்தியசாலைகளின் சேவைகளை விமர்சனம் செய்கின்றனர்.”
இதே போன்னு ஆதார வைத்தியசாலைகளின் நிலைமையை பார்த்தால் ஆதார வைத்தியசாலையில் ஒவ்வொரு பிரிவுக்கும் பொதுவாக ஒரு வைத்திய நிபுணரே (One man Army) இருப்பர். அதாவது சத்திரசிகிச்சை பிரிவுக்கு ஒரு சத்திரசிகிச்சை நிபுணரே இருப்பார். அதே நேரம் அவருக்கு கீழ் 2 or 3 வைத்தியர்களே இருப்பர். ( Grade A வைத்திய சாலைகளுக்கு இது 4 or 5 வரை இருக்கும்.)
பொதுவாக நாங்கள் வைத்திய நிபுணர்களின் பட்டங்களை பார்க்கும்போது “V” என்ற எழுத்து முன்னால் இடப்பட்டிருக்கும். உதாரணமாக surgeon கு VS என்றும் மகப்பேற்று நிபுணருக்கு VOG என்றும் பொது வைத்திய நிபுணருக்கு VP என்றும் இடப்படும். இந்த V என்ற எழுத்தின் அர்த்தம் “Visiting”. அதாவது பொதுவாக வைத்திய நிபுணருக்குரிய வேலை நேரம் 6 மணித்தியாலம் அது காலை 8.00 முதல் பகல் 12.00 மணி வரையும் மாலை 2 .00 மணியிலிருந்து 4.00 மணி வரையும் இருக்கும்.
அதே நேரம் அந்த சத்திரசிகிச்சை நிபுணர் அந்த வைத்தியசாலைக்கு 24 மணித்தியாலமும் On Call என்ற அடிப்படையில் பொறுப்பாக இருப்பார்.வேலை நேரம் முடிந்தாலும் அதே பிரதேசத்தில் எந்த நேரமும் On Call இல் அவதானமாக இருக்க வேண்டும். (திறந்த வெளி சிறைச்சாலை). “V” என்ற எழுத்துக்குள் மறைந்து இருக்கும் மர்மம் அதுதான். 24 மணி நேரம் on-call கடமையில் இருந்தாலும் ஒரு நாளைக்கான Overtime கொடுப்பனவு மாகாண வைத்திய சாலைகளில் பொதுவாக 2 மணி நேரமும் , மத்திய அரசாங்க வைத்திய சாலைகளில் ஒரு நாளைக்கு 4 மணி நேரமுமே Claim பண்ண முடியும். அதாவது வைத்தியர் ஒருவரால் மாதம் ஒன்றுக்கு 120 மணித்தியாலயத்துக்கு மேல் Overtime Claim பண்ண முடியாது.
(இதே நேரம் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் 6 மணி நேர Shift ஐ முடித்த பின் On Call என்ற Stress இல் இருந்து விடுபட்டு தனிப்பட்ட விடயங்களையோ வேறு இடங்களுக்கோ செல்லலாம் என்பதையும் கவனத்தில் கொள்க.)
எனவே ஒரு ஆதார வைத்தியசாலைக்கு விபத்தில் சிக்கிய ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டால் அது எந்த நேரமாக இருந்தாலும் ஒரு சத்திரசிகிச்சை நிபுணர் அவரை கண்காணிக்க வேண்டும். (கண்காணிப்பு என்பது நேரடியாக வருகை தருவதல்ல. தேவை ஏட்பட்டால் மாத்திரம் வருகை தரவேண்டும். இல்லாவிட்டால் கடமையில் இருக்கும் வைத்தியருக்கு ஆலோசனை வழங்கல்.) இது எந்த அளவு சாத்தியம்? ஒருவக்கு குடும்பம், சமூக வாழ்க்கை நல்லது , கெட்டது என்ற நிலைமைகள் இருக்கும் . எனவே இந்த ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் விபத்தில் சிக்கிய நோயாளிகள் உரிய நேரத்தில் வைத்திய நிபுணரால் பார்க்க முடியாமல் போகலாம். அந்த நேரம் நோயாளியுடன் வருபவர்கள் சண்டை பிடிப்பார்கள், எமது நோயாளியை அம்பாறைக்கோ மட்டக்களப்புக்கோ அனுப்புங்கள் என்று. ஆனால் அந்த நேரத்தில் சட்டம் இடம் தராது. அதாவது ஒரு பொது சத்திரசிகிச்சை நிபுணர் அந்த வைத்தியசாலையில் இருந்தால் அவரது கண்காணிப்புக்கு முடியாத அல்லது அதற்கான பரிகாரத்தை வழங்கும் வசதி இல்லாத நிலைமையாக இருந்தால் மாத்திரமே ஏனைய வைத்தியசாலைக்கு அனுப்பலாம். உதாரணமாக விபத்தில் சிக்கி தலையில் அடிபட்ட ஒரு நோயாளி அனுமதிக்கப்ட்டால் அங்கே வைத்திய நிபுணர் இருந்தாலும் CT scan எடுக்க வேண்டும் என்ற தேவைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அனுப்பலாம். அங்கு அனுப்பினாலும் பல நேரங்களில் அவர்கள் கூட்டி வந்த Ambulance ஐ நிற்க சொல்லிவிட்டு CT scan எடுப்பார்கள் அதில் பிரச்சினை இருந்தால் மட்டுமே அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் . இல்லையென்றால் மீண்டும் அனுப்பிய வைத்தியசாலைக்கே திருப்பி அனுப்பப்படும் . இந்த விடயம் பொது மக்களுக்கு விளங்காததால் சண்டை பிடிக்கிறார்கள்.
எனவே இங்கு நமக்கு நாமே வைத்துக்கொண்ட பொறிதான் சாதாரண ஆதார வைத்தியசாலையில் இருக்கும் வைத்தியர்கள் நோயாளியை நினைத்தவாறு பொது வைத்தியசாலைக்கு அனுப்ப முடியாது என்ற நிலை. ஆனால் ஒரு சத்திரசிகிச்சை நிபுணரால் 24 மணித்தியாலமும் கண்காணிப்பு செய்ய முடியாது . இந்த நடைமுறைச் சிக்கல் இருப்பதனாலேயே பொது வைத்தியசாலையின் முக்கியத்துவம் மிகவும் பிரதானமாக அமைகிறது .
இதே நேரம் அம்பாறை பிராந்தியத்தை எடுத்துக்கொண்டால் அம்பாறை வைத்தியசாலை பொது வைத்தியசாலையாக ஆகும் வரை வேறு எந்த ஆதார வைத்தியசாலைகளும் இருக்கவில்லை . (மஹியங்கனையை தவிர). ஆனால் கல்முனை பிராந்தியம் ஆளாளுக்கு போட்டி போட்டு இருக்கும் வைத்தியசாலைகளை ஆதார வைத்தியசாலைகளாக ஆக்கிக் கொண்டதால் பொது வைத்தியசாலை ஒன்றைப் பெறுவதில் நடைமுறை சிக்கல் நிலவுகிறது. இந்த நடைமுறைச் சிக்கல் பல மருத்துவ புறக்கணிப்புகளை (Medical Negligence) உருவாக்கலாம்.
ஒரு வைத்திய நிபுணர் மட்டுமே ஒரு வைத்தியசாலையை கண்காணிக்கும் நிலை வரும்போது அவருடைய தேவையின் நிமித்தம் phone off ஆனாலோ , தூங்கிவிட்டாலோ அவரால் கண்காணிக்க முடியாமல் போகும்.
இவ்வாறான ஆதார வைத்தியசாலைகள் அதுவும் மகாணசபைக்கு கீழ்வரும் வைத்தியசாலைகள் இருப்பதால் இவ்வைத்தியசாலைகளுக்கு கடமை புரிய வெளிமாவட்டங்களில் இருந்து வைத்திய நிபுணர்கள் வருவதற்கு தயங்குகிறார்கள். காரணம் 24 மணித்தியாலமும் on call ல் இருக்கவேண்டும் . அவசரத்தேவைக்கு லீவ் எடுப்பதாக இருந்தால்கூட ஏனைய வைத்தியசாலையில்லுள்ள நிபுணர் ஒருவர் “Cover-up sign” பண்ண வேண்டும். மருத்துவத்துறையில் “Coverup-sign” பண்ணுவதும் Current கம்பியில் கை வைப்பதும் ஒன்றுதான்.
அத்துடன் வேற்று மொழி பேசும் வைத்திய நிபுணர்கள் தமது பிள்ளைகளுக்கான பாடசாலை, எமது பிரதேசம் பற்றிய தவறான புரிந்துணர்வுகள் போன்ற காரணங்களால் சுயமாக வர தயங்குகிறார்கள். அதே நேரம் கட்டாய முறையில் நியமிக்க படுவோரும் தமக்குரிய வெளிநாட்டு பாயிச்சிக்கு தெரிவான உடனேயே மாயமாகி விடுகின்றனர். இதனால் பல வைத்தியசாலைகளின் நிபுணர்களுக்கான வெற்றிடம் தொடர்கிறது. இது இன்னும் பல வருடங்களுக்கு தொடரும்.
எமக்கு இருக்கும் ஆதார வைத்தியசாலைகளுக்கான நிபுணர்களை எமது பிராந்தியத்தில் இருந்து உருவாக்கினால் தான் ஓரளவு இப்பிரச்சினை தீரும்.
ஒரு வைத்தியசாலையை தரமுயர்த்துவதானால்:-
01. அதன் அருகிலுள்ள ஏனைய தரம்வாய்ந்த வைத்தியசாலைக்கிடையிலான தூரம்,
02.வைத்தியசாலையின் மூலம் பயன்பெறும் சனத்தொகை (Catchment Population)
03.வைத்தியசாலையிலுள்ள இடவசதி என்பன கருத்தில் கொள்ளப்படும்.
பல ஆதார வைத்தியசாலைகள் கல்முனை பிராந்தியத்துக்கு வருவதற்கு முன் குறிப்பிட்ட ஒரு வைத்தியசாலையில் அதிகளவான Patient Turnover இருந்தது. இப்போது ஊரூருக்கு ஆதார வைத்திய சாலைகள் வந்துவிட்டதால் நோயாளிகள் ஒரே வைத்திய சாலையை நோக்கி அல்லாமல் பரவலாக்கம் ஆகியுள்ளது.
இந்த நேரம் ஒரு கேள்வி வரலாம் மாவாட்டத்துக்கு என்று ஒரு பொது வைத்தியசாலையே (District General Hospital) இருக்கும் போது எப்படி சாத்தியமென்று. இதனை சாத்திய படுத்தலாம் என செய்து காட்டியவர் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் . அம்பாறை மாவாட்டத்திலேயே 2 சுகாதார சேவைகள் பணிமனை உருவாக்கப்பட்டதன் மூலம் கல்முனை பிராந்தியத்திற்குரிய பொது வைத்தியசாலை உண்டாவதற்குரிய அடித்தளம் ஆரம்பத்திலேயே இடப்பட்டுள்ளது.
எனவே எமது பிராந்திய அரசியல் தலைவர்கள் வெறும் குறுகிய வட்டத்துக்குள் இருந்து சிந்திக்காமல் சமூகத்துக்காக இதனை செய்ய முன் வரவேண்டும் . ஒவ்வொரு ஊரும் தமக்கான வைத்தியசாலையை தரமுயர்த்துவது அவசியம் தான் . அதைவிட கல்முனை பிராந்தியத்ர்த்துக்கான பொது வைத்தியசாலை காலத்தின் கட்டாயம்.
(பொது வைத்திய சாலையின் ஏனைய பல பாரிய நன்மைகள் விரிவஞ்சி குறிப்பிடவில்லை)
பொதுவாக சிந்திப்போம். பொதுப்படையாக சிந்திப்போம். ஊர்வாதத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வைத்துவிட்டு சமூகத்துக்காக இந்த தேவையை நிறைவேற்ற முன் வாருங்கள். கல்முனை பிராந்தியத்துக்கான ( அதிக பயனாளிகளை கொண்ட, இடவசதி உடைய ஒரு வைத்தியசாலையை) பொது வைத்தியசாலையாக தரமுயர்த்துதல் என்ற கோரிக்கையை முன்னிறுத்துவோம். அதுவே கரையோர மாவட்டத்தையும் எதிர்காலத்தில் பெற்று தரும் அடித்தளமாக அமையும் என்பது எனது தாழ்மையான கருத்து.
உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/
COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.
4,395 total views, 3 views today