Madurankuliya – Unaveliya வை சேர்ந்த 20 வயதுடைய “பெற்ரோல்” குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான இளைஞன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்த சம்பவம் gasoline addiction மற்றும் Sniffing Glue எனும் கவனிக்கப்படாத ஒரு பக்கத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறது. (செய்தி Link இல்)

By: Dr Ziyad Aia

Sniffing glue என்பது இரசாயனங்களின் வாசனைகளை நுகர்வதன் மூலம் ஒருவகையான உள்ளூணைவை (High) பெறுவதை குறிக்கும்.
aerosol sprays
cleaners
other household chemicals
போன்றவற்றிலிருந்து வெளியாகும் வாசனையை நுகர்வதன்மூலம் இதற்கு அடிமையாக்குகிறது.
இவற்றை நுகர்தல் தற்காலிக euphoria or hallucinations வை உண்டாக்கி தலை சுற்றல் மயக்கம் போன்ற நிலையை உண்டாக்குகிறது.
இதனை அடிக்கடி மேற்கொள்ளும்போது சுவாச பாதிப்பு (Acute respiratory failure), மூளை பாதிப்பு (Brain damage), இருதய பாதிப்பு (Heart rhythm disturbances) வரை ஏற்படும்.

Sniffing Glue போன்ற ஒரு பழக்கமே gasoline addiction எனும் பெற்றோல் வாசனையை நுகர்தல். Gasoline (பெற்றோல்) என்பது 150 க்கும் மேற்பட்ட இரசாயனங்களின் கலவையினால் ஆனது. CDC’s Agency for Toxic Substances and Disease Registry (ATSDR) இன் தகவல்படி இதில் காணப்படும் benzene இன் மணமே (sweet odor) அடிமையாக்குவற்கு காரணமாக அமைகிறது.
இருப்பினும் Gasoline அதிக அளவில் சுவாசிக்கும்போதே நச்சு விளைவுகளை காண்பிக்கிறது. இதனாலேயே Petrol Shed களில் கடமை புரிபவர்களுக்கு பாதிப்பு காட்டுவதில்லை.
அதிக அளவில் பெட்ரோலிய வாசனையை நுகரும்போது தலைசுற்றல், தலைவலி, மயக்கம், மறதி போன்ற நிலையை ஏற்படுத்தி சில சமயங்களில் மரணத்தையும் கொண்டுவரலாம்.

A moderate amount of gasoline can cause dizziness, headaches, euphoria, irritability, drowsiness and loss of memory, says the ATSDR. However, large amounts could lead to hallucinations, seizures, loss of consciousness and even death.

gasoline addiction மற்றும் Sniffing Glue போன்ற பழக்கங்கள் பொதுவாக பதின்ம வயது (Teenage) இளைஞர்களேயே அதிகளவு ஆட்கொள்கிறது.

பதின்ம வயது இளைஞர்கள் மது மற்றும் ஏனைய போதைப்பொருள்களுக்கு அடிமையாகி அதனை பாவிக்க முடியாத நிலை வரும்போது, அவற்றை வாங்க பணம் இல்லாததால் அரிதாக இவ்வாறான வினோதமான பழக்கத்துக்கும் அடிமையாக வாய்ப்புள்ளது.

சமூக பார்வையில் Bike வைத்திருத்தல், அவற்றுக்காக Petrol போத்தல்களில் சேமித்தல் சாதாரண நடைமுறையாக பார்க்கப்படுவதால் கவனிக்காமல் (Unnoticed) விடப்படுகிறது.

இதில் சில அரிதான நபர்கள் Petrol ஐ சிறிய அளவில் குடிப்பதற்கு அடிமையாகின்றனர். இது மிக ஆபத்தான பழக்கமாகும். இப்பழக்கம் மிக விரைவிலேயே ஈரல், மூளையை பாதித்து மரணத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறான இளைஞர்களை அடையாளம் கண்டு Rehabilitation க்கு உட்படுத்துவது அவசியமாகும்.

Gasoline addiction மற்றும் Sniffing Glue எனும் இரசாயன
வாசனையை நுகரும் கவனிக்கப்படாத பக்கம்

Sources:
https://www.hirunews.lk/english/258580/20-year-old-addicted-to-consuming-petrol-commits-suicide

https://www.healthline.com/health/sniffing-glue

https://www.foxnews.com/health/is-smelling-gasoline-a-dangerous-addiction

https://www.linkedin.com/pulse/we-drinking-gasoline-holly-whitaker

170 total views, 1 views today