Facilities offered at Sri Lanka Health Ministry Medical Care Institutions – 2020
பல்வேறு வகையான மருத்துவ பராமரிப்பு நிறுவனங்களில் வழங்கப்படும் வசதிகள் – 2020
வைத்தியசாலைகளை மீள் வகைப்படுத்தல் தொடர்பாக வைகாசி 11, 2005 திகதியிடப்பட்ட பொது சுற்றறிக்கை இலக்கம் 02-61/2005 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வைத்தியசாலைகள் போதனா வைத்தியசாலைகள், மாகாண பொது வைத்தியசாலைகள், மாவட்ட பொது வைத்தியசாலைகள், மாவட்ட ஆதார வைத்தியசாலைகள், பிரதேச வைத்தியசாலைகள், ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு வகையான வைத்தியசாலைகளில் கிடைக்க வேண்டிய நிபுணத்துவ சேவைகளும் அந்த சுற்றறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அப்போதிலிருந்து மக்கள் தொகை கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை முறையின் மாற்றங்கள் காரணமாக நாட்டில் நோயின் சுமை மற்றும் சுகாதாரத் தேவைகள் கணிசமான அளவில் மாறிவிட்டன. இத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கையில் பட்டப்பின் படிப்பு பயிற்சிக்கு பல புதிய நிபுணத்துவங்களும் துணை நிபுணத்துவங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, பல்வேறு வகையான வைத்தியசாலைகளுக்கூடாக வழங்கப்பட வேண்டிய சேவைகள் திருத்தியமைக்கப்பட்டு மேற்குறிப்பிடப்பட்ட சுற்றறிக்கை இப்புதிய சுற்றறிக்கை மூலம் பிரதியீடு செய்யப்படுகின்றது.
வைத்தியசாலை வகைகளின் அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட சேவைகள் இணைப்பு 1 இல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்புடைய வகைகளின்படியிலான வைத்தியசாலைகளின் பட்டியல் இணைப்பு II இல் கொடுக்கப்பட்டுள்ளது. இணைப்பு I இல் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தியமைக்கப்பட்ட சேவைகளுக்கு அமைய உங்கள் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்குமாறு இத்தால் தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
JM Pathirani Jayawardene,
Secretary
Ministry of Health
Circular Attached Below (With Tamil Intro)
665 total views, 1 views today