Dettol ஆனது Corona Virus ஐ கொல்லுமா?
2020 இல் பரவிய Virus க்கு 2019 மருந்து வெளியிட்டிருப்பது Co-Operate சதியா?
சீனாவே Novel Corona Virus ஐ அழிக்க திண்டாடும்போது இலங்கையில் சீன நோயாளி குணமாகியது எவ்வாறு?

இந்த கேள்விகள் பொதுவாக சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கிறது.

உண்மையில் Corona Virus என்பவை இன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல.
உண்மையில் இந்த Corona Virus கள் 1960 களில் மனிதனில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் வெளிச்சுவரில் அரச கிரீடத்தை (Crown-Like) ஒத்த வெளிநீட்சிகள் காணப்பட்டதால் Corona Virus என பெயரிடப்படுகின்றன.

இந்த Corona Virus என்பது சர்வ சாதாரணமாக மனிதனில் காணப்படும் ஒன்றுதான். என்னடா இது புது புரளியா உள்ளது?
ஆம். பிரதானமாக நான்கு வகை வைரஸ்கள் மனித உடலில் காணப்பட்டு அடிக்கடி ஜலதோஷம் (தடிமல்), காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். அவை:-

 

Common human coronaviruses
01. 229E (alpha coronavirus)
02. NL63 (alpha coronavirus)
03. OC43 (beta coronavirus)
04. HKU1 (beta coronavirus)

மேலே சொன்ன நான்கு வகைக் மேலதிகமாக ஆபத்தான இன்னும் மூன்று வகை உள்ளன அவை தான் மனித இனத்துக்கு மிக அச்சுறுத்தலாக அமைந்து விட்டன. (அதாவாது சமீபத்தில் சீனாவில் பரவிய Virus உடன் சேர்த்து 7 வகை)

05. SARS-CoV (beta coronavirus that causes severe acute respiratory syndrome- SARS):-
இது 2002 இல் முதன்முதலாக தென்சீனவில் பதிவாகியது.
வெளவால்களின் மூலம் ஏனைய விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவி பின்னர் மனிதனிலிருந்து மனிதனுக்கே பரவியது.
8098 Case கள் பதிவாகி 774 மரணங்கள் ஏட்பட்டது. (மரண வீதம் 10%)
இதற்கு எந்த மருந்தோ தடுப்பூசிகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. அதேநேரம் 2004 பின் எந்த புதிய Case உம் பதிவாகவில்லை

06. MERS-CoV (beta coronavirus that causes Middle East Respiratory Syndrome- MERS)
இது முதலாவதாக 2012இல் சவுதி அரேபியாவில் பதிவாகியது.
இது பொதுவாக ஒட்டகங்களை தொடுவதன் மூலமும் அவற்றின் இறைச்சியை சாப்பிடுவதன் மூலமோ, பாலை அருந்துவதன் மூலமோ பரவியது. மனிதனிலிருந்து மனிதனுக்கு மிக குறைந்த அளவே பரவுவதாக நம்பப்படுகிறது.
இதுவரை 2494 உறுதியான Cases உள்ளத்தோடு 2019-11-30 வரை 858 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. (மரண வீதம் 34%)
2016 யிலிருந்து இதன் தொற்று இயற்கையாகவே குறைந்து கொண்டு வருகிறது.

07. 2019 Novel Coronavirus (2019-nCoV):-
இது சீனாவின் Wuhan மாநிலத்தில் முதலில் பதிவாகி நாளுக்குநாள் இதன் தொற்றுகளும் மரணங்களும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இதுவும் SARS போலவே வெளவால் இல் இருந்து பாம்புகள் போன்ற வன விலங்குகளுக்கு பரவி மனிதனை வந்தடைந்து இப்போது மனிதனிலிருந்து மனிதனுக்கே பரவுகிறது.
பொதுவாக மரணித்தவர்கள் வயதான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த ஆண்கள்.

இந்த அடிப்படையில் தான் சில தொற்று நீக்கிகள் தமது பொருள் 99.9% வீதமான நுண்கிருமிகளை அழிப்பதோடு ஆபத்தான கிருமிகளை அளிப்பதாகவும் விளம்பரம் செய்கின்றன.
பொதுவாக Corona Virus போன்றவை உயிருள்ள உடலுக்கு வெளியில் 5 நாட்களுக்கு மேல் உயிர் வாழாது. இது அந்த விளம்பரங்களுக்கு சாதகமாக அமைகின்றன. காரணம் தோற்று நீக்கிகள் உடலுக்கு வெளியே (தோலில்) பாவிக்கப்படுபவை.

சீனாவே Novel Corona Virus ஐ அழிக்க திண்டாடும்போது இலங்கையில் சீன நோயாளி குணமாகியது எவ்வாறு? இலங்கை வைத்தியர்கள் மருந்தை கண்டுபிடித்து விட்டார்களா?
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட Novel Corona Virus தொற்றுக்கு உள்ளான நோயாளி குணமானதும் இந்த கேள்விகள் எழுந்தது.

அப்படி பார்த்தால் டெங்கு நோய்க்கு கூட மருந்து இல்லை. அப்படியானால் எப்படி நோயாளிகள் குணமாகி வீடு செல்கிறார்கள்? சிந்திக்க மாட்டார்களா இவர்கள்?
பொதுவாக வைரஸ் நோய்களுக்கு மருந்துகள் இல்லை. அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாகவே அழிந்து குணம் கிடைக்கிறது. அதுவரை அந்த நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவே வைத்தியசாலையில் அனுமதித்து Supportive Treatment வழங்கப்படுகிறது.

உதாரணமாக டெங்கினால் Platelet குறைந்து இரத்த கசிவு ஏற்படுதல், இரத்தக் குழாய்களில் நீர் குறைந்து மரணம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக வைத்தியசாலையில் அனுமதித்து நீர் சமநிலையை பேணி, அதற்கேற்ப Saline வழங்கி கண்காணிக்க படுகிறார்கள்.
வைரஸுக்கு எதிரான உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினால் மனிதன் தேறி விடுகிறான்.

இதுபோன்றே இன்புளுவென்சா, இதற்கு முன்னர் வந்த கொரோனா வைரஸ் (SARS , MERS) தொற்றுக்கள் எல்லாவற்றிலும் நடைபெறுகிறது.
சீனாவில் கூட இப்போது Novel Corana வைரஸ் தொற்றிய பலர் தேறியுள்ளார்கள். வயதான, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மரணத்தைத் தழுவுகிறார்கள்.

இதே நேரம் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் Corona Virus க்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத திணைக்களமே இலவசமாக வழங்குகிறது போன்ற செய்திகையும் காண கிடைத்திருக்கும்.
ஒரு நோயாளியை கூட பார்க்காமல் சோதிக்காமல் எப்படி மருந்து என்று சாதாரணமாகவே கேள்வி எழும்.
உண்மையில் அவை மருந்துகள் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாக நம்பப்படுபவை. (Immune Boosters). அவை நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டி நோய் வராமல் தடுக்கும் என்பதே அதன் பொருள். மாறாக மருந்துகள் இல்லை.

நோய் எதிர்ப்பு சக்தியை சாதாரணமாகவே ஆரோக்கிய உணவு பழக்கம், சுகாதாரமான நடைமுறை, நோய் எதிப்பு சக்தியை குறைக்கும் நீண்டகால நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் போன்றவற்றால் அடையலாம்.

ஏனைய Corona Virus தொற்றுக்களோடு ஒப்பிடும்போது Novel Corona Virus இன் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் மரண வீதம் குறைவு.

நோயை தருபவனும் அவனே. குணப்படுத்துபவனும் அவனே.

Sources:-
Human Coronavirus Types
https://www.cdc.gov/coronavirus/types.html

Chart: Wuhan Coronavirus Compared With MERS, SARS and Common Cold
https://www.kqed.org/science/1956068/chart-wuhan-coronavirus-compared-with-mers-sars-and-common-cold

Coronavirus may have originated in lab linked to China’s biowarfare program
https://www.washingtontimes.com/news/2020/jan/26/coronavirus-link-china-biowarfare-program-possible/

Wuhan coronavirus can survive for 5 days outside the body: Chinese expert
https://www.taiwannews.com.tw/en/news/3870656

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

2,443 total views, 2 views today