Dengue புகை Fogging விசிறுதல். சாதக, பாதகங்கள்.

“நுளம்பு தொல்லை தாங்க முடியவில்லை. எங்கள் பிராந்தியத்துக்கு புகை அடிப்பதில்லையா? டெங்கு வந்த பின்னார்தான் அடிப்பார்களா? பொறுப்பில்லாத PHI மாரும் சுகாதார பிரிவினரும்.”

இது டெங்கு காலத்தில் சமூகத்தில் /முகநூலில் காணக்கிடைக்கும் ஆதங்கமும், அங்கலாய்ப்புகளும்.

நுளம்பு புகை எனும் Thermal Fogging எல்லா இடங்களுக்கும் ஏன் அடிப்பதில்லை or அடிக்க கூடாது என்பதை புரியவைக்கும் பதிவே இது.

By: Dr A.I.A.Ziyad,
Senior Registrar in Health Informatics

டெங்கு நோய் ஒவ்வொரு ஆண்டும் பல உயிர்களை காவு கொள்கிறது. டெங்கு நோயை தடுக்க டெங்கு நுளம்பு பரவலை தடுப்பதே ஒரே வழி.

அந்த தடுப்பு முறைகளில் கடைசி அஸ்திரம்தான் இந்த Fogging எனும் நுளம்பு புகை அடித்தல்.
(Fogging has been listed as the last option in chemical control methods due to some of its limitations.)

Fogging முறையில் இலங்கையில் பரவலாக பாதிக்கப்படுவது Thermal Fogging முறை. இம்முறையில் பீடை நாசினி சூடேற்றல் முறையில் விசிறப்படுகிறது. இப்புகை கண்களுக்கு புலப்படும்.
Fog is an aerosol spray having a distribution of droplets with a Volume Median Diameter (VMD) below 50 microns (mostly 5-15 microns).

இவற்றில் பாவிக்கப்படும் பீடை நாசினியானது (Insecticides) Organophosphates and Pyrethroids வகையை சார்ந்தவை. பொதுவாக Malathion, Fenitrothion, Deltamethrin, Etofenprox, Cyhalothrin, Permethrin, Cyphenothrin போன்றவை பாவிக்கப்படுகின்றன. இவை ஆபத்தானவையாக இருந்தபோதும் மிகவும் ஐதாக்கப்பட்ட வடிவிலேயே விசிறப்படுகிறது.

நுளம்பு புகை (Fogging) விசிறுவதற்கான பரிந்துரை என்ன?

இதில் பாவிக்கப்படும் ஆபத்தான இரசாயனம் மற்றும் இதிலுள்ள பாதகங்கள் (Limitations) காரணமாக இது பின்வரும் நிலைமைகளின்போதே பரிந்துரைக்கப்படுகிறது.

01. குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் ஒருவருக்கு Dengue காய்ச்சல் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு/சந்தேகிக்கப்பட்டு 48 மணி நேரத்துக்குள் Fogging விசிறப்படும்.

02. குறிப்பிட்ட பகுதியில் பல நோயாளிகள் (Cluster) வரும்போது 48 மணித்தியாளத்துக்கு மேலதிகமாக 5 to 7 நாட்களில் இன்னொரு முறை விசிறப்படும்.

(வைத்தியசாலையில் ஒருவருக்கு டெங்கு நோய் உரறுதிப்படுத்தப்பட்டு or சந்தேகிக்கப்பட்டவுடன் உடனடியாக MOH & PHI க்கு Notification அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்டும்.

இதற்காக பிரத்தியேக DenSys எனும் செயலியும் உள்ளது.

பொதுவாக இந்த Fogging புகை சன நெரிசல் மிக்க குடியிருப்புகள், பாடசாலை, வைத்திய சாலைகளிலேயே பாவிக்கப்படுகிறது.

Fogging புகை பாவித்தலின் பிரதிகூலங்கள்:-

01. சூழலில் தட்காலிகமாகவே புகை நிலைத்து இருப்பதால் நன்மை குறைவு. பூரண நன்மை அடைய வேண்டுமெனில் பலமுறை விசிறப்பட வேண்டும்.

02. பொதுவாக இவை புகைக்கு Expose ஆகும் நிறை உடலி நுளம்புகளை மாத்திரமே அளிக்கும். குடம்பிகளை அழிக்காது.

03. காலநிலை காரணிகளான காற்று, வலியின் ஈரப்பதன், வெப்பநிலை என்பவை இதன் செயற்திறனை பாதிக்கும்.

04. கிருமிநாசினிகள் மிகவும் ஐதாக்கப்பட்டு பாவிக்கப்படுவதால் சுகாதார பாதிப்புகள் குறைவு என்றபோதும் குழந்தைகள், வயதானவர்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தப்படுவதோடு வீட்டில் உணவுப்பொருட்கள் மூடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

05. சூழலில் உள்ள ஏனைய பிரயோசனமான உயிரங்கிகளையும் அளிக்கும். Eg: தேனீக்கள்

06. செலவு மிகுந்தது.

07. Fogging Machine சரியாக Maintain பண்ணப்படுவதோடு உரிய செறிவு பேணப்பட வேண்டும். (maintenance and accurate calibration)

நடைமுறை சிக்கல்கள்:

Fogging பாவனைக்குரிய Pesticides MOH ஊடக வழங்கப்பட்ட போதும் அதனை, விசிறும் கருவிகள் அந்தந்த பிரதேச/நகர சபை ஊடாகவே பொதுவாக வழங்கப்படுகிறது.

கருவி பற்றாக்குறை,
ஆளணி பற்றாக்குறை,
Dengue Season இல் ஒரே நேரத்தில் பல இடங்களை Cover பண்ண வேண்டி இருத்தல்
போன்றவை இதன் நடைமுறை சிக்கல்களாகும்.

Take-Home Message:

Dengue புகை (Fogging) விசிறுதல் வெறும் நுளம்பை அழித்தல் என்ற நோக்கத்துக்காக அன்றி குறிப்பிட்ட பிரதேசத்தில் Dengue நோயாளி அடையாளம் காணப்பட்டால் அதன் மேலதிக பரவலை தடுக்க எடுக்கும் அதிரடி நடவடிக்கை மாத்திரமே.

Fogging இன் பிரயோசனம் அதன் side effects ஐ கருத்தில் கொண்டு பொதுவாக நுளம்பு தொல்லை என்ற ஒரே காரணத்துக்காக விசிறப்படுவதில்லை.
( Risk Vs Benefits – ஆபத்துக்கு பாவமில்லை.)

இவ்வாக்கத்தின் ஆதாரங்கள் மற்றும் Fogging விசிறுதல் பற்றிய சுகாதார அமைச்சின் Guidelines ஐ கீழே காண்க.

படத்தில் காட்டப்பட்டுள்ள Fogging விசிறும் செயன்முறையில் உள்ள சுகாதார குறைபாடுகளை Comment இடவும்.

Fogging in Dengue Control (Part I)

 

Fogging in Dengue Control (Part II)

 

GUIDELINES FOR AEDES VECTOR SURVEILLANCE AND CONTROL IN SRI LANKA

2,161 total views, 1 views today