COVID -19 பாதிக்கப்பட்டவர்களை சாதாரணமாகவே (உட்புகமுடியாத) plastic பைகளில் சுற்றி புதைக்க முடியுமென Professor Malik Peiris அறிவுறுத்துகிறார்! (இன்றைய 15-12-2020 The Island பத்திரிகையின் முதல் பக்க செய்தி)

COVID-19 பாதிக்கப்பட்டவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது கொரோனா வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும் என்ற கூற்று அறிவியலற்றது என்று உலகப் புகழ்பெற்ற நோயியல் நிபுணரும் வைரலஜிஸ்ட்டுமான பேராசிரியர் மாலிக் பீரிஸ் கூறுகிறார்.

தற்போது ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் வைராலஜி துறையின் தலைமை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். SARS ஐ ஏற்படுத்தும் வைரஸைக் கண்டுபிடித்த முன்னணி விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர்.

டாக்டர் பீரிஸ் The Island க்கு கருத்து தெரிவிக்கையில் “பதில் எளிது. சில பாக்டீரியாக்களைப் போலல்லாமல் வைரஸ்கள் உயிருள்ள கலங்களில் மாத்திரமே பெருக்கமடைய முடியும். அடிப்படையிலே வைரஸ்களுக்கு பெருக்கமடைய உயிருள்ள கலங்கள் அவசியம். ஒரு நபர் இறந்ததும், அவரது உடலில் உள்ள செல்கள் இறந்ததும் வைரஸ் இறந்துவிடும். இதுவே முதல் காரணம்”.

“இரண்டாவது காரணம் தொற்று காலம்.

நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு முந்தைய காலம் மற்றும் நோய் அறிகுறிகள் தோன்றிய 4-5 நாட்களுக்குப் பிறகு இந்த virus அதிகளவில் பரவக்கூடியது. அறிகுறிகள் தோன்றியவுடனேயே ஒருவர் இறந்துவிடுவது மிகவும் அரிது.

அறிகுறிகள் தோன்றி ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் இறக்கக்கூடும். இந்த காலகட்டத்தில் நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு மிகக் குறைவு. ஆன்டிபாடிகளின் (antibodies) உருவாக்கத்துடன் இது இன்னும் மிகவும் குறைவு.

“நீங்கள் சடலங்களை ஓடும் நீரில் புதைக்கப் போவதில்லை. உடலை ஆறு அடி கீழே புதைக்கும்போது, அது மிகவும் பாதுகாப்பானது. ஏதேனும் அரிதான வாய்ப்பால் எஞ்சிய தொற்று வைரஸ் இருந்தால், அது பல அடி மண்ணின் வழியாக வடிகட்டி தண்ணீரில் இறங்கி உயிர்வாழ்வது மிகவும் சாத்தயமில்லாமலாகிறது.

“எனவே, கொரோனா வைரஸை அடக்கம் செய்வதால் பரவுவது சாத்தியமே இல்லை (extremely unlikely). இந்த அடக்கம் செய்யும் வியாபாரத்தை (விடயத்தை) நான் நன்கு அறிவேன் (I’m very familiar with this business of burial), ”என்று அவர் கூறினார்.

தமிழில்: Dr Ziyad aia

Source: https://island.lk/dr-malik-suggests-burying-covid-19-victi…/

பி.கு:
Professor Malik Peiris போன்ற உலக தரம்வாய்ந்த virologist களின் ஆலோசனையை பெறாமல், இவர் போன்றவர்களை நிபுணர் குழுவில் சேர்க்காமல் யார் அந்த இலங்கை விஞ்ஞானிகள்? என்ற கேள்வியை கெளரவ ரவூப் ஹக்கீம் MP அவர்களும் பாராளுமன்றத்தில் எழுப்பி இருந்தார்.
That கரடியே காறி துப்பின Moment:
https://m.facebook.com/story.php?story_fbid=2965769506989711&id=1423400127893331

721 total views, 1 views today