புதிய ஆய்வில் 80% COVID-19 நோயாளிகள் வைட்டமின் டி (Vitamin D) குறைபாடுள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டது!
BY: Dr A.I.A.Ziyad

COVID-19 உள்ள 216 பேரைப் பார்த்த ஒரு புதிய ஆய்வில், 80 சதவிகிதத்தினர் தங்கள் இரத்தத்தில் போதுமான அளவு வைட்டமின் டி யை கொண்டிருக்கவில்லை என்று கண்டறியப்பட்டது.

போதுமான வைட்டமின் டி அளவைக் கொண்ட COVID-19 நோயாளிகளுக்கு இந்த நோயிலிருந்து இறப்பதற்கான 51.5 சதவிகிதம் குறைவான ஆபத்து இருப்பதும் சிக்கல்களுக்கு  (complications) குறைந்தளவான ஆபத்துகள் இருப்பதாக வேறுபட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

போதுமான வைட்டமின் டி அளவைப் பராமரிப்பது குறைவான ஆபத்து அல்லது சிலருக்கு கடுமையான COVID-19 இலிருந்து மீட்க உதவக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர், இருப்பினும் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகிறது.

(ஆதாரங்கள்: 1,2,3,4 & 5)

Vitamin D குறைபாட்டுக்கான காரணங்கள்:
விட்மனின் டி குறைபாடானது பல சுகாதார பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது.
Osteoporosis எனும் என்பு மென்மையாதல், மனஅழுத்தம் (Depression), தசை சோர்வு (Muscle weakness), புற்றுநோய் (Cancer), முதல் மரணம் வரை சம்பவிக்கலாம்.
Vitamin D ஆனது உடலில் கல்சியம் அகத்துறிஞ்சப்பட உதவுகிறது.

01. மட்டுப்படுத்தப்பட்ட அளவு சூரிய ஒளி உடலில் படல்:
Vitamin D க்கு the sunshine vitamin என்ற பெயரும் உண்டு. சூரிய ஒளி உடலில் படும்போது உடலில் உள்ள Cholesterol ஆனது Vitamin D ஆக மாற்றமடைகிறது. பொதுவாக பகல் நேர ஒளி சிறந்தது. (ஆதாரங்கள் 6, 7)
வெயிலில் நடக்காமை, எப்போதும் உடலை துணியினால் முழுமையாக மூடி இருத்தல், குளிர் காலநிலையில் வசிப்போர் சூரிய ஒளிமூலம் Vitamin D பெறுவது மட்டுப்படுகிறது.

02. கருமையான தோல் (dark skin) : தோல் கருமையாக காணப்பட Melanin எனும் நிறமணிகள் அதிகளவு இருப்பதே காரணம். இவை சூரிய ஒளியின் தாக்கத்தை குறைப்பதோடு Vitamin D உருவாவதையும் குறைக்கிறது. (ஆதாரம் 8)

03. கொழுத்த உடல் (Obesity)
கொழுத்த உடலமைப்பை கொண்டவர்களில் உடலில் அகத்துறிஞ்சப்படும் Vitamin டி யை கொழுப்பு காலங்கள்
(fat cells) அகத்துறிஞ்சி கொள்வதால் சாதாரண உடலமைப்பை கொண்டவர்களை விட 30 மடங்கு தேவைப்படும். (ஆதாரம் 9)

04. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்:
இவர்களில் vitamin D யை அதன் Active வடிவத்துக்கு மாற்றுதல் பாதிப்பு ஏற்படுவதால் குறைபாடு ஏற்படுகிறது.

05. சைவ உணவுகளை உண்போர் அல்லது தேவையான அளவு மீன் (fish), மீன் எண்ணெய் (fish liver oils), முட்டை மஞ்சள் கரு (egg yolks0, பால் உணவுகள் (fortified dairy) மற்றும் தானிய வகைகள் ( grain) போன்றவை குறைவாக உட்கொள்வோர். (ஆதாரங்கள் 10, 11)

06. வயதானவர்கள்.

Vitamin D யை தேவையான அளவு எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை அடுத்த பதிவில் காண்க.

இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களுக்கு:

Sources:
01. Association of Vitamin D Status and Other Clinical Characteristics With COVID-19 Test Results
https://jamanetwork.com/journals/jamanetworkopen/fullarticle/2770157

02. Vitamin D Status in Hospitalized Patients with SARS-CoV-2 Infection
https://academic.oup.com/jcem/advance-article/doi/10.1210/clinem/dgaa733/5934827

03. Vitamin D deficiency and co-morbidities in COVID-19 patients – A fatal relationship?
https://www.sciencedirect.com/science/article/pii/S2352364620300067?via%3Dihub

04. SARS-CoV-2 positivity rates associated with circulating 25-hydroxyvitamin D levels
https://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0239252

05. Vitamin D sufficiency, a serum 25-hydroxyvitamin D at least 30 ng/mL reduced risk for adverse clinical outcomes in patients with COVID-19 infection
https://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0239799

06. Vitamin D status and sun exposure in India
https://pubmed.ncbi.nlm.nih.gov/24494046/

07. Vitamin D: Light side and best time of sunshine in Riyadh, Saudi Arabia
https://pubmed.ncbi.nlm.nih.gov/24494051/

08. Chapter 13 – Vitamin D: Biology, Actions, and Clinical Implications
https://www.sciencedirect.com/science/article/pii/B9780124158535000133

09. Body fat content and 25-hydroxyvitamin D levels in healthy women
https://pubmed.ncbi.nlm.nih.gov/12519845/

10. An evaluation of the vitamin D3 content in fish: Is the vitamin D content adequate to satisfy the dietary requirement for vitamin D?
https://pubmed.ncbi.nlm.nih.gov/17267210/

11. Free-range farming: a natural alternative to produce vitamin D-enriched eggs
https://pubmed.ncbi.nlm.nih.gov/24607306/

1,872 total views, 1 views today