UAE அபுதாபியில் COVID-19 க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் மருந்தான Stem Cell Theraphy என்றால் என்ன⁉️
இதன் மருத்துவ பயன்பாடுகள் என்ன⁉️ வெற்றி அளிக்குமா⁉️
By: Dr Ziyad Aia

கடந்த இருதினங்களாக சமூக வலை தளங்களில் Trending ஆக பேசப்படும் விடயமே இது. இதன் விஞ்ஞான அடிப்படையை இப்பதிவில் நோக்குவோம்;

Stem cells கொண்டு நோய்களை குணப்படுவித்துவது நவீன மருத்துவத்தின் Advanced Stage என்றே சொல்லலாம்.

 

ஸ்டெம் செல்ஸ் என்றால் என்ன? What are stem cells?


இதனை மனித உடலின் Raw Material என்று சுருக்கமாக சொல்லலாம். இதிலிருந்தே ஒவ்வொரு கலமும் உருவாகிறது.
ஒரு Stem Cell இல் இருந்து அதேமாதிரியான daughter cell உருவாகலாம். இதனை Self Renewal என்போம்.
அல்லது ஒரு Stem Cell இல் வெவ்வேறு வகையான differentiation Cells உருவாகலாம். உதாரணமாக தசை கலங்கள், மூளை கலங்கள், இதைய கலங்கள், என்பு கலங்கள் உருவாவதை சொல்லலாம்.

இதனை இலகுவாக புரியும் பாஷையில் சொல்வதானால் Stem Cells ஐ கோதுமை மாவுக்கு ஒப்பிட்டால், அதிலிருந்து உருவாகும் பாண் , bun , பராட்டா என்பவற்றை differentiation Cells என்று சொல்லலாம்.


Stem Cells மனித உடலில் எங்கிருந்து கிடைக்கின்றன?


இவை பிரதானமாக இரு வகைகளில் கிடைக்கும்.

💓 01. Embryonic stem cells
கருவுற்ற ஆரம்ப நாட்களில் கிடைக்கும் கலங்கள். இவை வேறு கலங்களாக மாற்றம் அடைந்து இருக்காது. தேவைக்கு ஏற்ப மாற்றங்களை செய்து வேறு கலங்களாக மாற்றலாம். (புரியும் பாஷையில் சொல்வதானால் கோதுமை மா எந்த உணவுக்கென்று தயார்படுத்தப்படாமல் இருப்பதை சொல்லலாம். இதனை தேவைக்கு ஏற்ப பாண் என்றால் Yeast கலத்தல், பராட்டா என்றால் அதட்குரிய மாதிரி தயாரிக்கலாம்.)

இந்த Embryonic stem cells ஐ pluripotent (ploo-RIP-uh-tunt) stem cells என்று சொல்லப்படுகிறது.
அதாவது இவற்றைக்கொண்டு இதயம் , என்பு, மூளை போன்ற வேண்டிய கலங்களை பெறலாம்.

💓 02. Adult stem cells:
இது இரு வகைப்படும்:
💞 A) Haematopoietic Stem Cells (HSC)
இது என்பு மச்சை (Bone Marrow), தொப்புள் கொடி (Umbilical cord), மற்றும் இரத்தத்தில் இருந்து பெறலாம்.
இவை ஒருவரிடம் இருந்து பெறப்பட்டு அவருக்கே மீள வழங்கப்படலாம் (Autologos). (அபுதாபியில் இதுவே பரிச்சிக்கப்பட்டது. விபரம் பின்னால்.)
அல்லது பெருத்தமான வழங்கி (Donor) ஒருவர் மூலம் இன்னொருவருக்கு வழங்கப்படலாம். (allogenic)
இந்த Haematopoietic Stem Cells மூலம் இரத்த கலங்கள், நோய் எதிர்ப்பு சக்திக்குரிய கலங்கள் உருவாக்கப்படலாம்.

💞 B) Mesenchymal Stem Cells (MSC):
இது என்பு மச்சை (Bone Marrow), தொப்புள் கொடி (Umbilical cord) மற்றும் உடலில் உள்ள கொழுப்புக்கள் (Adipose Tissue) மூலம் பெறப்படும்.
இவை அழிவடைந்த கலங்களை புதுப்பிக்க உதவுகின்றன.

 

Stem Cell Theraphy மருத்துவ  பயன்பாட்டில் உள்ளதா?


ஆம்

 Stem Cells களை கொண்டு நோய்கள் உருவாகும் விதத்தை ஆய்வு செய்தல். (Genetic Defects)

 பழுதடைந்த கலங்களுக்கு பதிலாக புதிய கலங்களை ஆய்வுக்கூடங்களில் உருவாக்கல்

 புதிய மருந்துகளின் Safety , side effects களை ஆராய்தல்

என பல விடயங்கள் காணப்பட்டாலும் புரிதலுக்காக எமக்கு பரீச்சியமான ஒன்றை எடுக்கலாம் என்று நினைக்கிறேன். அதுதான் Bone Marrow Transplant.

 அடிக்கடி இரத்த புற்றுநோய்க்கு சத்திர சிகிச்சை செய்ய நிதி திரட்டுதல் பற்றிய கோரிக்கைகள் சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கும். அவை பெரும்பாலும் 50 – 70 இலட்சங்கள் வரை இருக்கும்.
leukemia, lymphoma, neuroblastoma and multiple myeloma போன்ற இரத்த, என்பு புற்றுநோய்களுக்கு Bone Marrow Transplant எனும் இந்த Stem Cell Therapy யே அது.

 இதுபோல் சிறுவர்களை தாக்கும் Talassaemia நோய்க்கும் Bone Marrow Transplant எனும் இந்த Stem Cell Therapy செய்யப்படுகிறது. இவை செலவு மிக அதிகம்.

 இதுபோல் இந்த Stem Cell Theraphy ஆனது type 1 diabetes, Parkinson’s disease, amyotrophic lateral sclerosis, Alzheimer’s disease, heart disease, stroke, burns, cancer and osteoarthritis என பல நோய் நிலைமைகளுக்கு பயன்படுவதோடு எதிர்காலத்தில் உறுப்பு மாற்றீடு (Organ Transplant) இல்லாமல் பழுதடைந்த அங்கத்தை புதுப்பிக்க Stem Cell Theraphy இன் பயன்பாடு குறித்து ஆய்வுகள் நிகழ்கின்றன.

 

UAE அபுதாபியில் COVID19 க்கு எதிராக செய்த ஆய்வு என்ன?


2A இல் குறிப்பிட்டதுபோல் COVID-19 தொற்றுக்கு உள்ளான ஒருவரின் இரத்தத்தில் உள்ள Haematopoietic Stem Cells ஐ எடுத்து அவற்றை “activated” நிலைக்கு கொண்டுவந்து மீண்டும் அதே நோயாளிக்கே Nebulization மூலம் துகள்களாக (fine mist) நுரையீரலினுள் சுவாசிக்க வழங்கப்படுகிறது.

இதன்மூலம் நோய்க்கு எதிரான கலங்களின் செயட்பட்டை மாற்றி அமைத்து (அதாவது அதிக எதிர்வினை செய்வதை தவிர்த்து காய்ச்சல், மூச்சு திணறல் ஏற்படுவதை குறைப்பதோடு) நல்ல கலங்கள் அழிவதையும் தடுக்கிறது. மேலும் அழிவடைந்த நுரையீரல் கலங்களை புதுப்பிப்பதாகவும் நம்பப்படுகிறது. (ஆதாரங்கள் 3 & 4)

(It is hypothesized to have its therapeutic effect by regenerating lung cells and modulating the immune response to keep it from overreacting to the COVID-19 infection and causing further damage to healthy cells.)

இச்சோதனையை 73 நோயாளிகளுக்கு செய்ததில் நல்ல பெறுபேறுகள் கிடைத்ததாக அவ்வறிக்கை கூறுகிறது.

இச்சோதனையை வேறு நாடுகள் செய்யவில்லையா?


இதுபோன்ற பல சோதனைகள் வேறு நாடுகளிலும் இடம்பெறுகின்றன.
உதாரணமாக 2B யில் குறிப்பிட்ட Mesenchymal Stem Cells ஐ இரத்தத்தின் ஊடாக செலுத்தி Damage அடைந்த நுரையீரல் கலங்களை புதுப்பிக்கும் பல முயற்சிகள் சீனா , அமெரிக்கா போன்ற நாடுகளில் நடக்கின்றன. (ஆதாரங்கள் 5 & 6)
முயற்சிகள் வெற்றி அடைய பிரார்த்திப்போம்.

இப்பதிவில் Stem Cell Theraphy பற்றி சாமான்யனியனுக்கும் புரியும் வகையில் எளிமையாக்கி உள்ளேன். விரிவான விளக்கம் வேண்டியவரகள் ஆதாரங்கள் 1 & 2 ஐ பார்க்க.

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

 

💓 References:


01. https://www.mayoclinic.org/tests-procedures/bone-marrow-transplant/in-depth/stem-cells/art-20048117

02. https://youtu.be/uKqktf1V2e4

03. https://www.khaleejtimes.com/coronavirus-pandemic/video-uae-develops-breakthrough-coronavirus-treatment-with-promising-initial-results-

04. https://www.arabnews.com/node/1668106/middle-east

05. https://www.technologynetworks.com/biopharma/product-news/stem-cell-therapy-a-promising-treatment-for-covid-19-333498

06. https://www.forbes.com/sites/alexknapp/2020/05/02/large-scale-clinical-trials-of-mesoblasts-stem-cell-treatment-for-covid-19-coronavirus-set-to-begin-soon/#4197db6a4086

1,994 total views, 1 views today