By: Dr. A.I.A.Ziyad, MBBS, MD – Health Informatics

COVID-19 இன்போதான சமூக விலகல் (Social Distancing). தனிமைப்படுத்தல் (Quarantine), அதீத தனிமைப்படுத்தல் (Isolation) , முடக்கம் (Lockdown) மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு Vs பொலிஸ் ஊரடங்கு (Quarantine Curfew Vs Police Curfew) என்பவற்றுக்கான வரையறைகளும் வேறுபாடுகளும்:

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனுடன் தொடர்புடைய வெவ்வேறு சொற்களைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு வரும்போது பெரும்பாலான மக்கள் சமூக விலகல். தனிமைப்படுத்தல், அதீத தனிமைப்படுத்தல், முடக்கம் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஆகிய சொற்களை ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த வார்த்தைகள் வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கின்றன.

சமூக விலகல் – Social distancing

சமூக விலகல் பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:

சமூக தொடர்புகளை முடிந்தவரை குறைத்தல்,

குழுக்களாக , கூட்டங்களாக கூடுவதை தவிர்த்தல்,

முடியுமானவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்தல், Online மூல கற்கைகள்.

வெளியே செல்லும்போது இடைவெளியை (1m) பேணுதல்.

சமூக விலகல் என்பது நீங்கள் நாள் முழுவதும் வீட்டில் உட்கார வேண்டும் என்று அர்த்தமல்ல.
நீங்கள் இன்னும் உங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க அல்லது நடைப்பயணத்திற்கு செல்லலாம், ஆனால் நீங்கள் குழுக்களாக/கூட்டமாக தொடர்பு கொள்ளக்கூடாது. மற்றவர்களிடமிருந்து நல்ல உடல் தூரத்தையும் பராமரிக்க வேண்டும்.

Quarantine – தனிமைப்படுத்தல்:

COVID-19 தொற்றுக்கு உள்ளான ஒருவருடன் தொடர்புபட்ட அல்லது COVID-19 பரவியுள்ள ஒரு பிராந்தியத்திலிருந்து வேறு பிராந்தியத்துக்கு செல்லும் ஒருவரை சமூகத்திலிருந்து (பொதுவாக 14 நாட்களுக்கு) தூரமாக்கி வைத்தலை குறிக்கும். இலங்கையில் அமுலில் இருக்கும் 1897 ஆம் ஆண்டைய தனிமைப்படுத்தல் சட்டத்தின் மூலம் அரசாங்கத்துக்கு அதிகாரம் உள்ளது.

தனிமைப்படுத்தலில் பின்வருவன அடங்கும்:

மருத்துவ அவசரநிலை இல்லாவிட்டால் (medical emergency) கண்டிப்பாக வீட்டில் தங்குவது.

பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்திலிருந்து கண்டிப்பாக விலகி இருப்பது.

கோவிட் -19 அறிகுறிகளான மூச்சுத் திணறல், காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவற்றை தினமும் கண்காணித்தல்.

சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

வீட்டில் மேற்பரப்புகளை தவறாமல் சுத்தம் செய்தல்.

எல்லா தேவைகளையும் வீட்டிலேயே பெற்றுக்கொள்வது மற்றும் வெளியேறாமல் இருப்பது.

தனியாக இருங்கள் மற்றும் முடிந்தால் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் பிரிந்து இருங்கள் குறிப்பாக வயதானவர்கள்.

Isolation – தனியாக்கல் (அதீத தனிமைப்படுத்தல்)

பொதுவாக இதற்கும் தமிழில் தனிமைப்படுத்தல் என்ற சொல் பிரயோகம் பாவிக்கப்பட்ட போதும் Quarantine இல் இருந்து வேறுபட்டது.

கொரோனா வைரஸ் கோவிட் -19 க்கு Positive ஆக கண்டறியப்பட்டு நோய் அறிகுறிகளை காண்பிக்காதவர்களுக்கே அதீத தனிமைப்படுத்தப்படுவது (Isolation) பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது.
Qurantine உடன் ஒப்பிடும்போது இது மிகவும் தீவிரமான தனிமைப்படுத்தல். இவ்வாறான Isolation இல் உள்ளவர்களுக்கான ஒரே வெளிதொடர்பு பாதுகாப்பு உடை அணிந்திருக்கும் (PPE) மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே.

பொதுவாக வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்கள் COVID-19 Suspected Case என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஒருவர் தனிமையில் இருந்தால் (Isolation), அந்த நபருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது தெளிவுபடுத்தப்படாவிட்டால், அவர் / அவள் ஒரு தனிமைப்படுத்தல் மையம் அல்லது மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்கிறார் என்று அர்த்தம்.

தீவிர தனிமைப்படுத்தலில் (Isolation) பின்வருவன அடங்கும்:

ஒரு தனி பகுதி அல்லது மருத்துவநிலையத்தில் கண்காணிப்பில் இருப்பது.
முகமூடி அணிந்து உடல் ரீதியாக யாரையும் தொடர்பு கொள்ள முடியாது.
மற்றவர்களிடமிருந்து தனி பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
எல்லா சுற்றுப்புறங்களையும் தவறாமல் சுத்தம் செய்யுங்கள்.
சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

Lockdown: முடக்கம்

குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்தில் COVID-19 அவதானிக்கப்படும்போது அப்பிராந்தியம் ஏனைய பிராந்தியங்களில் இருந்து தொடர்புகளை முற்றுமுழுதாக துண்டித்து பூட்டிடப்படுவதையே Lockdown குறிக்கிறது. நோய் பரவலால் முழு நாட்டையும் முடக்காமல் குறிப்பிட்ட பகுதியை முடக்கி ஏனைய பகுதிகளை இயங்கச்செய்வதே இதன் நோக்கம்.

குறிப்பிட்ட பிராந்தியத்தில் Lockdown போடப்பட்டாலும் அவசர சேவைகள் இடம்பெறும்.
இலங்கையில் பல பிராந்தியங்களில் Lockdown போடப்பட்டாலும் அவை பிரதான பாதைகளில் அமைந்துள்ள ஊர்களாக இருந்தால் அவ்வூர்கள் ஊடாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டாலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
பொதுவாக Lockdown பண்ணப்படும் பிராந்தியங்களில் Quarantine Curfew வும் சேர்ந்தே அமுலாக்கப்படுவதால் மக்கள் நடமாட்டம் முடக்கப்படுகிறது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு Vs பொலிஸ் ஊரடங்கு (Quarantine Curfew Vs Police Curfew)

அரசியலமைப்பு சட்டத்தில் 1897ம் ஆண்டு 3ம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்களைத் தடுத்தல் கட்டளைச் சட்டம் பின்வரும் அதிகாரங்களை வழங்குகிறது. (Quarantine and Prevention of diseases Ordinance No 3 1897). இது இலங்கை ceylon ஆக இருக்கும்போது plaque நோய் பரவலின்போது இயற்றப்பட்ட சட்டம்.

இச் சட்டத்தின் கீழ் நாட்டில் ஏதாவது தொற்று நோய் அல்லது வைரஸ் தாக்கமானது பரவும் சந்தர்ப்பத்தில்

குறித்த நோய் தாக்கத்திற்குட்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களை நியாயமான காலப் பகுதிக்கு தனிமைப்படுத்தி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும்,

நோய்த் தாக்கம் அதிகரிப்பதனை ஊக்குவிக்கும் பிரதேசங்களை முற்றாக மூடிவிடுவதற்கும்,

உள்நாட்டு போக்குவரத்துக்களில் கண்காணிப்புக்களை மேற்கொள்ளவும்,

நோயாளிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்துவதற்கென பிரத்தியேக வைத்தியசாலைகளையும் பராமரிப்பு நிலையங்களையும் உருவாக்கி பேணுவதற்கும் அதிகாரிமளிக்கிறது.

பொதுவான Police ஊரடங்குகள் நாட்டின் அவசரநிலை, வன்முறை, கிளர்ச்சி, கலவரங்கள் போன்ற நிலைகளின்போது பிறப்பிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு என்பது தொற்றுநோய் பரவலின்போது அதன் மேலதிக பரவலை தவிர்க்க தனிமைப்படுத்தல் சட்டத்தை அடிப்படையாகக்கொண்டு அரசாங்கத்தால் பிறப்பிக்கப்படுவது.

வேறு வகையில் சொல்வதானால் Curfew என்று அழைக்கப்படும் ஊரடங்கே தற்போழுது தனிமைப்படுத்தல் மற்றும் நோய்களைத் தடுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தனிமைபடுத்தல் ஊரடங்காக (வர்த்தமானியின் அடிப்படையில்) மாற்றம் பெற்றுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கின்போது:
வீடுகளுக்கு வெளியே செல்ல முடியாது.
குறிப்பிட்ட பகுதியில் இருந்து வெளிச்செல்லவோ, உள்நுழையவோ முடியாது.
அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதி பெற்று செலவோர் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணுதல் போன்றவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
A/L பரீட்சை, அவசர மருத்துவ உதவிகள் போன்றவற்றுக்கு அனுமதி பெற்று வெளிச்செல்லும் வாய்ப்பு உண்டு.
இடங்களைப்பொறுத்து தேவை ஏற்படின் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதி ஊடாக வாகனங்கள் நிறுத்தப்படாமல் பயணிக்க அனுமதிக்கப்படலாம்.

Sources:

https://www.quarantine.health.gov.lk/images/pdf/act/quarantine_and_prevention_of_disease_act553.pdf

https://www.dailynews.lk/2020/03/30/features/215395/quarantine-law-array-powers-public-health-andsafety#:~:text=Quarantine%20law%20in%20Sri%20Lanka,in%20and%20outside%20Sri%20Lanka.

https://www.indiatoday.in/education-today/grammar-vocabulary/story/difference-between-quarantine-isolation-lockdown-and-social-distancing-1658804-2020-03-23

https://www.reliancegeneral.co.in/Insurance/Knowledge-Center/Blogs/What-is-The-Meaning-of-Quarantine-Social-Distancing-Isolation-Curfew-and-Lockdown.aspx

 

COVID-19 Social Distancing, Quarantine), Isolation, Lockdown, Quarantine Curfew Vs Police Curfew

1,458 total views, 3 views today