“சாஜி சேட்டா நான் மரணத்தை நோக்கி போய்கொண்டு இருக்கிறேன். நான் உங்களை காண முடியாது என எண்ணுகிறேன். மன்னித்து விடுங்கள். நமது குழந்தைகளை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளுங்கள். ஒன்றும் அறியாத நமது குழந்தைகளை உங்களுடனே அழைத்து செல்லுங்கள். தந்தை இல்லாமல் அவர்கள் தனியாக இருக்கக்கூடாது.” 2018 May மாதம் உலகையே அழவைத்த கேரளாவை சேர்ந்த லினி எனும் தாதி (ஒரு தனியார் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.) தனது கணவருக்கு எழுதிய கடிதம். கேரளாவை தாக்கிய Nipah Virus நோயாளிகளை பராமரிக்கும் போது அதே வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.

(நிபா வைரஸ், 1998-ம் ஆண்டு, மலேசியத் தீவுகளில் ஒன்றான `கம்பங் சுங்கை நிபா’ (Kampung Sungai Nipah) என்ற கிராமத்தில்தான் முதன்முதலாக கண்டறியப்பட்டது. அதனால், இதற்கு `நிபா’ எனப் பெயரிட்டனர்.)

அதேபோல் தற்போது பரவிவரும் COVID-19 நோயாளிகளை பராமரிக்க பல சுகாதார ஊழியர்கள் தனது உயிர், குடும்பம் எல்லாவற்றையும் பணயம் வைத்து போராடி வருகின்றனர்.

சீனாவில் மாத்திரம் 3400 க்கும் மேட்பட்ட சுகாதார ஊழியர்கள் COVID-19 இனால் பாதிக்கப்பட்டு அதில் 14 பேர் உயிரிழந்தனர். (இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகவும் விமர்சனங்கள் உள்ளது.)
இதில் மிக இளவயதான வயதான (34 years) Dr Li Wenliang முதல் Dr Mei Zhongming, Dr Jiang Xueqing, Liu Zhiming, (neurosurgeon and director at the Wuchang hospital in Wuhan) மரணித்தவர்களில் அடங்கும்.

COVID-19 உலகில் பல நாடுகளில் பரவியதை அடுத்து சுகாதார ஊழியர்கள் தமது உயிர், தம்மை நம்பியுள்ள குடும்பம் எல்லாவற்றையும் பணயம் வைத்தே நோயாளிகளை பராமரிக்கின்றனர்.
உலகில் சுகாதார துறையில் உள்ள 70% மானவர்கள் பெண்கள். பெரும்பாலும் அவர்கள் தாதியர்கள் (Nurses) மற்றும் செவிலியர்கள் (Mid Wives). 2020 ஐ உலக சுகாதார நிறுவனம் தாதியர் மற்றும் செவிலியர் ஆண்டாக பிரகடனப்படுத்தி உள்ளது.

இலங்கையில் COVID-19 மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் அங்கொடையில் உள்ள தொற்றுநோய் வைத்தியசாலையில் நோயாளர் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் பொலன்னறுவை, கராபிட்டிய என எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது.
ஏற்கனவே 18 வைத்தியசாலைகள் அடையாளம் காணப்பட்டாலும் பின்னாளில் அவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந் நோயாளிகளை பராமரிக்க வைத்தியர் தாதியர் உட்பட அனைத்து சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

ICU எல்லாம் ஏற்கனவே நிரம்பிய நிலையில் சாதாரண Ward களில் , ஏனைய நாடுகளைப் போன்று உயர் தரத்திலான பாதுகாப்பு அணிகலன்கள் இன்றி Risk எடுக்கின்றனர்.

இவர்களுக்கு பக்கபலமாக Quarantine நிலையங்களில் இலங்கை ராணுவமும், வெளிக்களத்தில் நோயாளிகளை கண்டுபிடிப்பதில் PHI மாரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

Social மீடியாக்களும், ஏனைய Mass மீடியாக்களும் எப்போது முதலாவது விக்கெட் விழும்? எப்போது முதலாவது சுகாதார ஊழியர் பாதிக்கப் படுவார்? என Breaking News க்காக காத்திருக்கின்றனர். ஆனால், அதுவே அவர்களின் குடும்பங்களை நம்பி இருப்போருக்கு Heart Breaking News.

எனவே அவர்களுக்காக பிரார்த்திப்போம். வதந்திகளை பரப்பாமல் அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து நோய் பரவலை தடுக்க முன் வருவோம்.

By:-
Dr AIA Ziyad (MBBS – Peradeniya)
MSc in Bio-Medical Informatics (Colombo)
Registrar in Health Informatics (PGIM)

Data Sources:-
https://www.vavuniyanet.com/news/184936/
https://www.businessinsider.com/healthcare-workers-getting-coronavirus-500-infected-2020-2

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

512 total views, 1 views today