COVID-19 மரண சான்றிதழ் வழங்குவது சம்பந்தமான WHO வின் வழிகாட்டல்:
INTERNATIONAL GUIDELINES FOR CERTIFICATION AND CLASSIFICATION (CODING) OF COVID-19 AS CAUSE OF DEATH

இன்று இலங்கையில் தற்கொலை செய்து மரணித்த இளைஞ்ஞன் ஒருவனுக்கு பிரேத பரிசோதனையின்போது செய்யப்பட்ட PCR சோதனையில் COVID-19 Positive என Results வந்ததை தொடர்ந்து இலங்கையில் மரண எண்ணிக்கை 22 ஆக கணக்கிடப்பட்டதை தொடர்ந்து சர்ச்சை எழுந்தது.

சற்றுமுன்னர் சுகாதார அமைச்சு தவறை திருத்தி மரண எண்ணிக்கை தொடர்ந்தும் 21 ஆகவே உள்ளது. இந்த மரணம் COVID-19 மரணமாக கணக்கிடப்படாது என அறிவித்தது.

இந்த குழப்பங்களுக்கு முன்னதாகவே WHO 16 April 2020 என்று சர்வதேச வழிகாட்டல் ஒன்றை வழங்கி இருந்தது.

நோய் கண்காணிப்பு (Disease surveillance) நோக்கிக்காக மரணத்துக்கான காரணமாக (Cause of Death) COVID-19 ஐ குறிப்பிடுவதானால்:

01. மரணம் COVID-19 நோய் அறிகுறிகளுடன்
02. ஆய்வுகூட சோதனையில் சாத்தியமான (probable) or நிருபிக்கப்பட்ட (confirmed)
03. அல்லது மரணத்துக்கான வேறு தெளிவான காரணங்கள் (Eg: விபத்து, கொலை) இல்லாதவிடத்து
04. COVID-19 நோயில் இருந்து முமையாக குணமடைந்து அதன்பின்னர் நிகழ்ந்த மரணமாகவும் இல்லாதவிடத்தே

அந்த மரணத்துக்கான காரணமாக (Cause of Death) COVID-19 ஐ குறிப்பிடலாம்.

DEFINITION FOR DEATHS DUE TO COVID-19
A death due to COVID-19 is defined for surveillance purposes as a death resulting from a clinically compatible illness, in a probable or confirmed COVID-19 case, unless there is a clear alternative cause of death that cannot be related to COVID disease (e.g. trauma). There should be no period of complete recovery from COVID-19 between illness and death.

A death due to COVID-19 may not be attributed to another disease (e.g. cancer) and should be counted independently of preexisting conditions that are suspected of triggering a severe course of COVID-19.

படம் 01: இல் வேறு நோய்களுடன் உள்ள ஒருவர், COVID-19 Positive ஆகி, அதன் காரணமாக மரணிக்கும்போது மரண சான்றிதழ் வழங்கும் விதம்.

படம் 02: விபத்தில் இறந்த ஒருவர் ஏற்கனவே COVID-19 Positive ஆகி இருந்தோ or பிரேத பரிசோதனையின்போது COVID-19 உறுதியானாலோ அதன் மரணத்துக்கான காரணமாக (Cause of Death) COVID-19 ஐ குறிப்பிட முடியாது. COVID-19 அம்மரணத்துக்கு துணை புரிந்து இருந்தால் அதனை படத்தில் உள்ளவாறு Part 2 வில் குறிப்பிடலாம்.

 

Take Home Message:
COVID-19 மரண சான்றிதழ் வழங்குவது சம்பந்தமான WHO வின் வழிகாட்டலுக்கு அமைய தற்கொலை செய்து இறந்த இளைஞ்ஞனின் மரணத்தை COVID-19 மரணமாக கருதுவதில் இருந்து சுகாதார அமைச்சு நீக்கியுள்ளது.
அதேபோல் WHO அனுமதித்த பிரகாரம் மரணித்த உடல்களை அடக்கம் செய்யவும் முடியும் என்ற விடயத்தையும் இலங்கை அரசு செயற்படுத்த பிரார்த்தனையோடு முயற்சிப்போம்.

 

முழுமையான Guidelines ஐ பார்க்க:

89 total views, 1 views today