Covid19 பிரேத எரிப்பு சம்பந்தமான சம்பவத்திரட்டு. (கால ஒழுங்கில் )
1.0 ( March 18, 2020)
இலங்கை சுகாதார அமைச்சு Covid 19 guideline முதலாவது version வெளியிடப்படல் அதில் கட்டாய தகனம் காணப்படல்.
(Source: https://www.lankahealthtamil.com/covid-19-death-disposal/ )
https://bit.ly/2I7eY6V
2.0 ( March 24, 2020)
Covid 19 இனால் மரணித்தவர்களை புதைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தி WHO Interim Guidelines ஐ வெளியிடல்.
https://bit.ly/367IstI
3.0 ( March 28, 2020)
GMOA முஸ்லிம் வைத்தியர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள், அரசியல்வாதிகள் முயற்சி காரணமாக நிலத்தடி நீரை மாசுபடுத்தாத முறையில் 6 அடிக்கும் மேல் புதைக்க முடியும் என்று சுகாதார அமைச்சு Covid-19 guideline திருத்தப்படல்.
https://bit.ly/32gecff
4.0 ( March 30, 2020)
முதலாவது முஸ்லிம் மரணம் IDH இல் அதனை அடக்கம் செய்வதில் JMO இணக்கம் காட்டாமை. நீர்கொழும்பில் நிலத்தடி நீர் ஆழம் குறைந்து காணப்படுவதையும், சரியான Body Bag கைவசம் இல்லை என காரணம் காட்டி தயக்கம் தெரிவித்தல் ( நீர்கொழும்பு பள்ளிவாசலை பாரம் எடுக்க கோரப்பட்டு அவர்கள் மறுத்ததாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைத்தது ) ஈற்றில் எரிக்கப்படல்.
https://bit.ly/2TS0WZw
5.0 ( March 31, 2020)
ரவுப்ஹக்கீம் அவர்களின் ஊடக அறிக்கை. பேஸ்புக் பக்கத்தில் புதைக்க அனுமதியுள்ள guidelines ஐ பதிவேற்றல்.
https://bit.ly/3n5uGz1
https://economynext.com/hakeem-calls-cremation-of-muslim-covid19-victim-reprehensible-63220/
6.0 ( March 31, 2020)
சமூக வலைத்தள மற்றும் Social media தளங்களில் ரவுப் ஹக்கீம் இற்கு எதிரான கருத்துக்கள். திடீரேன புதைக்க அனுமதி இருந்த provision நீக்கப்படல். (Chatura இன் லீக் ஆன வீடியோ.)
Covid 19 guideline version 3
7.0 (April 2, 2020)
இரண்டாவது கொரோனா முஸ்லிம் மையத்தை அடக்க அரசியல் முஸ்லிம் அரசியல் கட்சிகள் முயற்சி செய்தல்.ஜாவத்தை மையவாடியை அண்மித்த பகுதியில் எதிர்ப்புகள் இடம்பெற்றதால் முயற்சி கைகூடாமல் போனதாக தெரிவிக்கப்படல்.
8.0 (April 3, 2020)
GMOA தமது அமைப்பில் உள்ள வைத்தியர்களின் கோரிக்கையை அடுத்து தமது நிலைப்பாட்டை அறிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் புதைப்பதற்கு diseases and Quarantine act இல் இடமுள்ளதையும் WHO guidelines இல் உள்ள provision ஐயும் சுட்டிக்காட்டி சிபாரிசு செய்து சுகாதார அமைச்சுக்கு கடிதம் வழங்கல்.
(அக்கடிதத்தில் புதைக்கலாம். but, அதை நீங்கதான் சொல்லணும் என்று சுகாதார அமைச்சை சாட்டிவிட்டு நழுவியது.)
https://bit.ly/38cjJY8
9.0 (April 12, 2020)
diseases and Quarantine act இன் படிக்கு உள்ள சட்டதிட்டங்களை திருத்தி கட்டாய பிரேத எரிப்பை சுகாதார அமைச்சர் வர்த்தமானி மூலம் ஒழுங்கு படுத்தல்.
https://bit.ly/3oZ0rvi
10.0 (April 17, 2020)
ஜனாஸாக்களை எரிப்பதைத் தவிர்த்து அடக்கம் செய்வதற்காக குழு முயற்சியாக Prof Rezvi Sheriff தலைமையில் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொண்ட குழு சுகாதார அமைச்சு மற்றும் JMO (Judicial Medical Officers) கொண்ட குழுவுடன் கலந்துரையாடல்.
(பேசப்பட்ட விடயங்களை இணைப்பில் காண்க.)
ஒரு கட்டத்தில் குழுவின் சில உறுப்பினர்கள் மருத்துவத்தையும் அறிவியலையும் தாண்டி பயங்கரவாதிகள் சடலத்தை உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள். புதைக்க அனுமதித்தால் 20 மில்லியன் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவார்கள் என்ற வாதங்களை முன்வைத்ததோடு மீண்டும் சந்திப்போம் என்று இச்சந்திப்பு நிறைவு பெற்றது.
https://bit.ly/36b6B2W
11.0 (June 8, 2020)
அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குக்கள் 7 பதிவு செய்யப்படல்.
https://bit.ly/3l0upwj
12.0 (September 9, 2020)
வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப் படாமலேயே மாத கணக்கில் ஒத்திவைக்கபடல். அடுத்த வழக்கு விசாரணை November 26.
https://bit.ly/38dLDmG
13.0
இரண்டாவது அலையில் ஏற்பட்ட மரணங்களும் அரசியல் முயற்சிகளும்.
14.0 (November 03, 2020)
அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, நிபுணர்கள் குழு சிபாரிசுடன் புதைத்தல் பற்றி ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தல்.
https://bit.ly/3oWNtOp
முயற்சிகளும், பிரார்த்தனைகளும் தொடரும்……
தொகுப்பு: Eng Jowsi Abdul Jabbar
Edited By: Dr A.I.A.Ziyad
1,469 total views, 1 views today