💓ஜனாஸாக்களை எரிப்பதைத் தவிர்த்து அடக்கம் செய்வதற்காக எடுக்கப்பட்ட குழு முயற்சிகள். விபரம்!
தமிழில் Dr Ziyad Aia

அடக்கம் செய்யும் உரிமைகளுக்கான கோரிக்கை!

சுகாதார பணிப்பாளர் நாயகம் தலைமையிலான மருத்துவ அதிகாரிகள் எடுத்த முடிவு, “COVID – 19 பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்ய மட்டுமே அனுமதிக்கிறது”, இது முஸ்லிம் சமூகத்தினரிடையே கடுமையான பதட்டத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில் அடக்கம் செய்ய கோருவது நியாயமான கோரிக்கை என்பது விஞ்ஞான அடிப்படையானது.

அடக்கம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி அதிகாரிகளுக்கு சமூகம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைக்கிறது. குறிப்பாக உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கின்றன. உலகில் 180 நாடுகள் இந்தியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மற்றும் அனைத்து மத்திய கிழக்கு நாடுகளும் அடக்கம் செய்வதை அனுமதிக்கின்றன.

இதன் விளைவாக, சமூக பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ பிரதிநிதிகளை கொண்ட குழுவொன்று சுகாதார பணிப்பாளர் நாயகம் தலைமையிலான பணிக்குழு (Task Force) உடன் தமது பக்க நியாயங்களை முன்வைக்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி அடக்கம் செய்வதை அனுமதிக்க வேண்டும் என்பதை பிரதிநிதித்துவப்படுத்த பின்வருவோர் கலந்து கொண்டனர்.

1. Prof Rezvi Sheriff – Snr Consultant Nephrologist and Past President Sri Lanka Medical Association

2. Prof Ravindra Ferdinando- Retired Senior Professor of Forensic Medicine and Past President Sri Lanka Medical Association

3. Prof K I Deen – Retired Senior Professor of Surgery and Consultant Gastrointestinal Surgeon

4. Prof Vajira Dissanayake- Chair professor of Anatomy Colombo and clinical Genetist and Past President Sri Lanka Medical Association

5. Dr Ruvaiz Haniffa – Head Dept Family Medicine Colombo Consultant Family Physician and Past President Sri Lanka Medical Association

6. Mr Illiyas Admani PC

7. Razeek Zarook PC

இரு குழுக்களுக்கிடையேயான சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நடத்தப்பட்டது, இதன் போது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுபவம் மிக்க உறுப்பினர்கள் தங்கள் வாதத்தை விஞ்ஞான ஆதாரங்களுடன் முன்வைத்தனர்.

 இந்த COVID-19 நீர் மூலம் பரவுவது அல்ல. நிலத்தில் 8 அடிக்கு கீழே அடக்கம் செய்வதால் நோய் பரவாது.
உலகில் 180 க்கு மேட்பட்ட நாடுகள் இதனை அனுமதிக்கின்றன.

 சமூக விலகல் வழிகாட்டுதல்களுக்கு வைரஸைத் தவிர்ப்பதற்கு ஒரு மீட்டர் தூரம் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. அடக்கம் செய்யப்படும் சவப்பெட்டியில் 8 அடிக்கு அடியில் புதைக்கப்படும் போது அது பரவுவதற்கான பூஜ்ஜிய நிகழ்தகவு உள்ளது என்று அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.

பணிக்குழுவின் (Task Force) உறுப்பினர்கள் தங்கள் எதிர் வாதத்துக்கு பின்வரும் 4 காரணங்களை முன்வைத்தனர்.

 1. இந்த வைரஸ் பற்றி முழுமையாக தெரியாது; எனவே பரவுவதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது.

 2. இலங்கையின் நிலக்கீழ் நீர் மட்டம் ஒப்பீட்டளவில் ஆழமற்றது, இதனால் மாசுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

 3. தகனம் என்பது வைரஸை தெளிவாக அழிப்பதால் பாதுகாப்பான வழி.

 4. குழுவின் சில உறுப்பினர்கள் மருத்துவத்தையும் அறிவியலையும் தாண்டி பயங்கரவாதிகள் சடலத்தை உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள். புதைக்க அனுமதித்தால் 20 மில்லியன் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவார்கள்.

april 12 இல் பிரதமர் இல்லத்திலும் ஒரு கூட்டம் நடைபெற்றது. அவரது ஆலோசனை பெயரிலேயே இக்கூட்டம் இடம்பெற்றது.

💓 பேராசிரியர் ஷெரிப் தமது வாதத்தில் தகனம் செய்வதற்கான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பேராசிரியர்கள் ஷெரிப் மற்றும் கமால்டீன் இருவரும் அதிகாரிகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பிறரின் நோயை ஒழிப்பதற்கான முயற்சிகளைப் பாராட்டியதோடு, அடக்கம் செய்வதற்கான அச்சத்தைத் தீர்ப்பதற்கான அறிவியல் அம்சங்களை சுட்டிக்காட்டினர்.

அதே நேரத்தில் டாக்டர் ஹனிஃபா நெறிமுறை (Ethical) அம்சங்களை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். திரு. அலி சப்ரி சமூகத்தின் கவலையும், அடக்கம் செய்யப்படுவதற்கான உரிமையை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

கலந்துரையாடல்கள் நீளமாக இருந்தன, ஆனால் தகனம் மட்டுமே என முடிவெடுப்பதற்கான காரணம் “அறியப்படாத பயம்” என IDH ன் JMO விடம் இருந்து மீண்டும் வெளிப்பட்டது. இதுவரை 7 கொரோனா மரணங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. வைரஸ் இறந்த உடலில் அல்லது தண்ணீரில் வாழ முடியும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.

⁉️ தொற்றுநோயியல் நிபுணர் மற்றும் geo hydrographer இருவரும் விஞ்ஞான தரவுகளை முன்வைக்காது பய உணர்வை (syndrome of fear of the unknown) மாத்திரமே காரணமாக முன்வைப்பதன் அடிப்படை என்ன என்பதை P.C. Zarook கேள்வி எழுப்பினார்.

⁉️ ஒரு நுண்ணுயிரியலாளர் (A microbiologist) 182 நாடுகள் போலல்லாது நாம் சீனாவாக இருக்க வேண்டும் அவர்களைப்போல் எரிக்க வேண்டும் என்று பரிதாபமாக விரும்பினார். அவரால் எந்த ஆதாரத்தையும் சேர்க்க முடியவில்லை, ஆனால் மீண்டும் தெரியாத பயத்தை வெளிப்படுத்தினார்.

💓 பேராசிரியர் ஷெரிப்டீன், மருத்துவ நடைமுறை என்பது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போதும் சரி,எதிர்காலலும் சரி அது அப்படித்தான் இருக்கும் என்பதை சுட்டிக்காட்டினார்.

💓 இன்னும் சில உறுப்பினர்கள் எரிப்பதன் மூலம் முஸ்லீம்களின் உணர்வை நசுக்க வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டனர்.

💓 கவுரவ அமைச்சர் மற்றும் சுகாதார பணிப்பாளர் நேர்மையான முறையில் பதில் அளித்தாலும் , இதுபற்றி மேலும் கலந்துரையாட விருப்பம் தெரிவித்தனர்.

JMO விஞ்ஞான அடிப்படை இல்லாத , வெறுமனே கற்பனையான அச்ச உணர்வை வெளிப்படுத்தி எமது கோரிக்கையை எதிர்ப்பதையே அவதானிக்க முடிந்தது.

💓 எல்லா அறியாமையும் வெளியேற்றப்பட வேண்டும், விரைவில் விஞ்ஞான உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.

இது Mr ALM Faris அவர்களின் முகநூல் பதிவு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
https://m.facebook.com/story.php?story_fbid=147944896735653&id=112027336994076

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

94 total views, 1 views today