பொதுவாக வைரஸ்கள் அதிக வெப்பநிலையில் அழியும் என்ற தகவலை அடிப்படையாக கொண்டு இப்போது சுடுநீர் குடித்தல் , சுடுநீரால் ஆவி பிடித்தல் வைரஸை கொல்வதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன. இதன் உண்மை தன்மை என்ன?
By: Dr Ziyad Aia

பொதுவாக வைரஸ்கள் உடம்புக்கு வெளியே அதிக வெப்பநிலை நிலவும்போது அழிய ஆரம்பிக்கும். அதனாலேயே COVID-19 க்காக சோதிக்கும்போது மாதிரிகளை 4 to 8 ‘C வெப்பநிலையில் 48 மணி நேரத்துக்குள் சோதனை கூடத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதோடு 48 மணி நேரத்தை தாண்டினால் -70’C குளிரூட்டலில் சேமிக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. (ஆதாரம் 01)
இதன்மூலம் அவை அழியாது உறங்குநிலையில் (Dormant) நிலையில் பேணப்படும்.

அதே நேரம் உயிருள்ள கலங்களில் (உதாரணமாக மனித உடலில்) 37’C யில் வைரஸ்கள் சிறப்பாக செயற்படுகின்றன என்பதையும் கவனிக்க.

இந்த COVID-19 வைரஸ்கள் எந்த வெப்பநிலையில் முற்றாக அழியும் என்பதற்கு நேரடியான ஆதாரங்கள் இல்லாதபோதும் (ஆதாரம் 02)

இதே குடும்பத்தை சேர்ந்த SARS virus கள் 56’C இல் 15 நிமிடங்கள் சூடாக்கும்போது 10’000 Unit அழிவதாக WHO 2003 இல் வெளியிட்ட ஆய்வொன்று சொல்கிறது. (Heat at 56°C kills the SARS coronavirus at around 10000 units per 15 min (quick reduction). (ஆதாரம் 03)

(இங்கே COVID-19 ஐ உருவாக்கும் வைரஸானது SARS நோயை 2002 இல் உருவாக்கிய virus ஓடு Genetically ஒத்த அமைப்பை கொண்டிருப்பதனால் 2019 novel Corona Virus என்ற பெயர் SARS CoV-2 என்று மாற்றப்பட்டதையும் கவனிக்க. இரண்டுமே Corona குடும்பத்தை சேர்ந்தவை.)

அதேநேரம் இன்னுமொரு ஆய்வில் 60 – 90 ‘C க்கு மேட்பட்ட வெப்பநிலையில் உடனடியாக அழியலாம் என்று சொல்லப்படுகிறது. (ஆதாரம் 04)

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் இங்கே குறிப்பிடும் வெப்பநிலை ஒருவரின் தோலை பாதித்து எரிகாயத்தை உண்டாக்கும் அளவுடையது. (1st Degree Burn.)
அதேநேரம் மனிதனில் சுவாச பாதையில் நோயை உருவாகும் Virus கள் கலங்களுக்கு உள்ளே காணப்படுபவை.


💓Take Home Message:

 நாம் குளிரான or சூடான காலநிலையில் வாழ்ந்தாலும் எமது உடல் வெப்பநிலை 37’C யிலேயே பேணப்படும்.

 சூழல் வெப்பநிலை மற்றும் ஈரப்பதன் மனித உடலுக்கு வெளியே Corona வைரஸின் உயிர்ப்பான நிலையில் செல்வாக்கு செலுத்துமே தவிர உடலினுள் அல்ல.

 சுடுநீர் (கொதித்தாறிய நீர்) அருந்துதல் சுகாதாரத்துக்கு நலவே தவிர COVID-19 ஐ கொல்லாது.

 உணவுப்பொருட்களை நன்றாக சமைக்கும்போது (100’C) COVID-19 நுண்ணங்கிகள் அழிக்கப்படும்.

Sources:-

01. http://www.epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=228&lang=en

02. https://www.ndtv.com/health/coronavirus-can-increase-in-temperature-kill-covid-19-experts-weigh-in-2196557

03. https://www.who.int/csr/sars/survival_2003_05_04/en/

04. https://www.insider.com/what-temperature-kills-germs

05. https://www.bbc.com/future/article/20200403-coronavirus-will-hot-drinks-protect-you-from-covid-19

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

1,279 total views, 2 views today