COVID-19 க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழக்க வழக்கங்களும், உணவுகளும்.
💓 By Dr Ziyad Aia

💓 Part 01:-
இன்று Corona உலகையே அச்சுறுத்தி வருகின்ற நேரம் இதற்கு மருந்துகளோ , தடுப்பூசிகளோ இல்லை.
மறுபுறம் 85% மான தொற்றாளர்கள் பாரிய நோய் அறிகுறிகள் இன்றி அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.
அடுத்த 10% மானவர்கள் Supportive Treatment உதவியோடு நோய் எதிர்ப்பு சக்தியால் மீண்டெழுகின்றனர்.
மரண வீதம் 5% ஆக உள்ளத்தோடு இலங்கையில் 1% ஆக இருக்கின்றது.

இன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் உலாவருக்கின்றன.
இவற்றின் விஞ்ஞான அடிப்படை என்ன?

அறிவியல்பூர்வ ஆதரங்களால் நிறுவப்பட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுகளை பற்றி நோக்குவோம்.

💓 முதலில் இந்த நோய் எதிர்ப்பு சக்தி (immunity) என்ன என்பதை மிக சுருக்கமா சொல்வதானால்:

💗 01. Innate Immunity: (உள்ளார்ந்த / இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி):
இது பிறக்கும்போதே பரம்பரை (Genetic) ரீதியாக மனிதனுக்கு கிடைப்பது.

💗 02. Acquired Immunity: (பெற்றுக்கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி)
இது நோய்க்கரணிகளை எதிர்கொள்ளும்போதோ, தடுப்பூசிகள் வழங்கப்படும்போதோ உடலில் ஏற்படுவது.

உணவு முறைகள் , பழக்க வழக்கங்கள் என்பன நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில்லை. மாறாக அவற்றை மேம்படுத்த மற்றும் அதிகரிக்க உதவி செய்யும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு கீழே வாசிக்க.

 01. போதிய அளவு தூக்கம்:-

இதற்கு பல ஆய்வு ஆதாரங்கள் உண்டு.
போதிய அளவு தூக்கம் மற்றும் ஓய்வு இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். (ஆதாரம் 01)

வயது வந்தவர்களுக்கு 7 மணி நேரமும் , சிறுவர்களுக்கு 8 – 10 மணி நேரமும் , குழந்தைகளுக்கு 14 மணி நேரங்கள் வரை தூக்கம் அவசியம். (ஆதாரம் 02)

தூக்கத்தில் குளறுபடி உள்ளவர்கள் தூங்குவதட்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னமே Blue Light ஐ வெளியிடும் Smart phone களின் பாவனையை தவிர்க்க வேண்டும். (ஆதாரம் 03)
இப்போது கிடைத்திருக்கும் Stay Home மற்றும் நோன்பு என்பவற்றால் பகல் முழுக்க படுத்து இரவு முழுக்க Social Media க்களில் மூழ்கி கிடப்பதால் உங்கள் உயிரியல் கடிகாரம் ( Biological Clock) மற்றும் Natural wake-sleep Cycle மாறுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம். (ஆதாரம் 04)

 02. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்:

தொடர்தேர்ச்சையான மன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் கலங்களின் செயட்பாட்டை குழப்பும். (ஆதாரம் 04 & 05)

குழந்தைகளுக்கு அதிகளவான உளவியல் அழுத்தம் (Psychological Stress) நோய் எதிர்ப்பு ஆற்றலை குறைக்கும். (ஆதாரம் 06)
இதனாலேயே COVID-19 தொடர்பான Negative செய்திகளை அடிக்கடி படிப்பதையும், குழந்தைகளுக்கு Lockdown காலப்பகுதியில் பெரியவர்களுடன் புளங்கும்போது பயமுறுத்தும் மற்றும் மரண பீதியை உருவாக்கும் கதைகளை பகிர்வதை தவிர்த்து வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

 03. மிதமான உடற்பயிற்சிகளில் ஈடுபடல்:

மிதமான உடற்பயிற்சி உடலின் inflammation எனும் செயன்முறையை குறைத்து நோய் எதிர்ப்பு கலங்களை புதுப்பிக்க உதவும். (ஆதாரம் 07)

மிதமான உடற்பயிற்சிகளாக நடத்தல், bicycle ஓடுதல், நீச்சல் என்பவற்றை குறிப்பிடலாம். (ஆதாரம் 08)
சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 30-45 நிமிடங்கள் நடை பயிட்சி செய்ய வேண்டும்.

அதே நேரம் நீண்ட நேர Heavy Exercises immune system ஐயும் பாதிக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்க.

 04. உட்கொள்ளும் சீனியின் அளவை குறைத்தல் (Limit added sugar):

அதிகளவான சீனி மற்றும் அரிசி , கோதுமை என்பவற்றில் காணப்படும் மாப்பொருள் (refined carbs) உடல் இடையை அதிகரிக்க செய்து கொழுக்க செய்யும். இது நோய்க்கு உள்ளாகும் வாய்ப்பை அதிகரிக்கும். (ஆதாரம் 09, 10)

அதிகளவு சீனி உட்கொள்ளுதல் உடலில் inflammation ஐ அதிகரிப்பதோடு சக்கரை நோய் மற்றும் , இருதைய நோய்களுக்கு வழிவகுக்கும். (ஆதாரம் 11 & 12)

 05. தொற்றா நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தல்:

தொற்றா நோய்களான உடல் கொழுத்தல் (obesity), நீரிழிவு (Diabetes), இருதய நோய்கள் என்பவை எமது immune system ஐ நலிவடைய செய்யும்.
(ஆதாரம் 13, 14)

COVID-19 இன் மரணங்களை பொறுத்தவரை நீரிழிவு (Diabetes), இருதய நோய்கள், பிரஷர் (Hypertension), Cancer உள்ளவர்களுக்கே அதிகளவு ஏட்படுகிறது.

 06. போதிய அளவு நீர் அருந்துதல்:

நீர் அருந்துதல் நேரடியாக நோய் தொற்றிலிருந்து தடுக்காவிட்டாலும் உங்கள் உடல் நலத்தைப் பேணும்.

போதிய அளவு நீர் அருந்தாமை தலைவலி, உடல் செயற்பாடுகளை பாதித்தல், focus, mood , சாமிபாடு என்பவற்றை பாதிப்பதோடு சிறுநீரகத் தொழிற்பாட்டையும் பாதிக்கும். (ஆதாரம் 15)
செயற்கை சுவையூட்டப்பட்ட, சீனி சேர்க்கப்பட்ட பானங்களை தவிர்க்க வேண்டும். (ஆதாரம் 16, 17)
குடிக்க வேண்டிய நீரின் அளவு ஒவ்வொருவரின் தாகம், செய்யும் வேலை, காலநிலையை பொறுத்து வெறுபடும். (ஆதாரம் 18)

 07. பழங்கள் விதைகள், சுவை சரக்குகள் (Spices) மரக்கறிகளை அதிகளவு உட்கொள்ளல்:

இவற்றில் காணப்படும் antioxidents உடலில் inflammation ஐ அதிகரிக்க செய்து நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும். (ஆதாரம் 19)

பழங்கள் மரக்கறிகளில் காணப்படும் விட்டமின் சி ஆனது தடுமல் போன்ற நோய்களின் வீரியத்தை குறைக்கும். (ஆதாரம் 20), தேசிக்காய், தோடம்பழம் போன்ற புளிப்பு சுவை உடைய (Citrus குடும்ப) உணவுகளில் அதிகளவு விட்டமின் சி உள்ளது.

வெள்ளைப்பூண்டில் காணப்படும் sulfur-containing compounds, such as allicin நோய் எதிர்ப்பு சக்தியை மேம்ப்படுத்துவதாக பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. (ஆதாரம் 25)

அதேபோல் மஞ்சளில் (turmeric) அதிக செறிவில் காணப்படும் curcumin ஆனது inflammatory குறைத்து நோய் எதிர்ப்பு சத்தியை மேம்படுத்துகிறது. இது மிருகங்களில் செய்யப்பட்ட ஆய்விலும் தெரிய வந்துள்ளது. (ஆதாரம் 26, 27)

அதுபோல் இலங்கை தேயிலையும் மிக சிறந்த ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஒன்றாகும். இதுபற்றிய ஆய்வு ஆதாரங்களை அறிய முன்னைய பதிவை பார்க்க.
www.lankahealthtamil.com/இலங்கை-தேயிலை-covid-19-க்கு-எதிர/

 08. அதிக புரத உணவுகளை உட்கொள்ளல்:

புரதங்கள் ஆனது பக்டீரியா வைரஸ் தொற்றுக்களால் சிதைவடைந்த உடல் கலங்களை சீர்படுத்த உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் கலங்கள் மற்றும் Antibody களுக்கு புரதம் இன்றியமையாதது. புரத குறைபாடானது உடல் சோர்வு, மயக்க நிலை மற்றும் நலிந்த நோய் எதிர்ப்பு சக்தி என்பவற்றை உருவாக்கும்.
(ஆதாரம் 21, 22, 23)

புரதம் நிறைந்த உணவுகளாக கோழி, மாட்டிறைச்சி, மீன் முட்டை, பால் , பருப்பு, அவரை வகைகள், விதைகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

 09. புகைத்தல் மற்றும் மது பாவனையை தவிர்த்தல்:

மது அருந்துதல் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் கலங்களை பாதிக்கிறது. (ஆதாரம் 24)
மது அருந்துதல் உடலின் நோயை எதிர்க்கும் செயல் திறனை நலிவடைய செய்கிறது.

⁉️அதெல்லாம் சரி Docter இப்படி பொத்தாம் பொதுவா உணவுகளை சொல்லாமல் குறிப்பா இந்த வெள்ளைப்பூண்டு, மஞ்சள் போல பிரபலமான item கள் பற்றிய அறிவியல் தகவல்களை சொல்ல ஏலாவா?

💓 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவு வகைகளின் அறிவியல் ஆதாரம் உள்ளவற்றின் பட்டியலை Part 02 வில் காண்க.

💓 உறுதிப்படுத்தப்பட்ட , ஆதாரபூர்வமான சுகாதார தகவல்களை பெற எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
facebook.com/LankaHealthTamilPage/
#Ziyad_Aia

 

💓 Sources:

 

01. The Sleep-Immune Crosstalk in Health and Disease
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/30920354

02. Sleep and Health
https://www.cdc.gov/healthyschools/sleep.htm

03. Suppression of Blue Light at Night Ameliorates Metabolic Abnormalities by Controlling Circadian Rhythms.
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/31504080

04. Effects of stress on immune function: the good, the bad, and the beautiful.
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/24798553

05. Chronic stress, glucocorticoid receptor resistance, inflammation, and disease risk.
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/22474371

06. Psychological stress in children may alter the immune response.
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/24501202

07. Exercise and the Regulation of Immune Functions.
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/26477922

08. Physical Activity Guidelines for Americans
https://www.hhs.gov/…/physical-activity-guidelin…/index.html

09. Perspective: A Historical and Scientific Perspective of Sugar and Its Relation with Obesity and Diabetes.
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/28507007

10. A Review of Excessive Sugar Metabolism on Oral and General Health.
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/29181456

11. Added sugar in the packaged foods and beverages available at a major Canadian retailer in 2015: a descriptive analysis.
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/28401111

12. Innate immunity and the failing heart: the cytokine hypothesis revisited
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/25814686

13. Role of Adaptive and Innate Immunity in Type 2 Diabetes Mellitus.
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/30533447

14. The Evidence for Saturated Fat and for Sugar Related to Coronary Heart Disease.
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/26586275

15. Water, Hydration and Health
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2908954/

16. Sugar-sweetened and artificially-sweetened beverages in relation to obesity risk.
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/25398745

17. Impact of sugar on the body, brain, and behavior.
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/29772560

18. Water & Nutrition
https://www.cdc.gov/healthywa…/drinking/nutrition/index.html

19. Functional Foods for Health: The Interrelated Antioxidant and Anti-Inflammatory Role of Fruits, Vegetables, Herbs, Spices and Cocoa in Humans.
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/27881064

20. Vitamin C for preventing and treating the common cold.
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/23440782

21. Are high-protein foods good for the immune system?
https://www.webmd.com/…/are-highprotein-foods-good-for-the-…

22.Amino acids and immune function.
https://www.ncbi.nlm.nih.gov/pubmed/17403271

23. Functions of Antibodies
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4159104/

24. Alcohol and the Immune System
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4590612/

25. 6 Surprising Ways Alcohol Affects Your Health — Not Just Your Liver
https://health.clevelandclinic.org/6-surprising-ways-alcoh…/

26. Garlic Can Boost Immune Function
https://www.healthline.com/nutrition/garlic-fights-colds-and-flu

27. Reduced inflammatory and muscle damage biomarkers following oral supplementation with bioavailable curcumin
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4802396/

28. Immunomodulators Inspired by Nature: A Review on Curcumin and Echinacea
https://www.mdpi.com/1420-3049/23/11/2778/htm

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

2,169 total views, 1 views today