ஏன் டாக்டர் அடிக்கடி ஏதாவது ஒரு நாடு இந்த Corona க்கு எதிராக மருந்து, தடுப்பூசி கண்டுபிடித்து விட்டார்கள் என்கிறார்கள். பின்னாடி அது எல்லாம் சரி வரவில்லை என்கிறார்கள்.
ஏன் இப்படி ஆசைகாட்டி மோசம் செய்றாணுகள்?

Corona க்கு மருந்து இல்லை என்று சொல்லுராணுகள்; அப்புறம் நோயாளி குணமாகி வீடு செல்கிறான்; என்றும் சொல்லுராணுக்கள் ஒரே குழப்பமா இருக்கே.

 இது ஒரு நல்ல கேள்வி.
இதை விளங்க ஒரு நீதிக்கதை சொல்லுறேன் கேளுப்பா?
By Dr Ziyad Aia

ஒரு காட்டுல சிங்கமொன்று ராஜாவா இருந்திச்சாம்.
அதை கண்டதுமே ஏனைய விலங்குகள் எல்லாம் பயந்து ஓடிச்சாம். (ஒரு சிலதை தவிர.)

ஒருநாள் அந்த சிங்கத்திடம் குள்ள நரி ஒன்று வந்து சொன்னதாம். சிங்க ராஜாவே இந்த காட்டில் நீங்கள் மட்டும் ராஜா இல்லை. நானும் ராஜாதான். என்னை கண்டாலும் மற்ற விலங்குகளும் பயந்து ஓடும். எனவே நானும் உங்களுக்கு துணையாக இருக்கிறேன் என்றதாம்.
சிங்கத்துக்கு ஒரே ஆச்சரியம் “நீ பொய் சொல்கிறாய்” என்றது.

அதை கேட்ட நரி, “நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை என்றால் என்னோடு கூட வந்து பாருங்கள்” என்றது.
சிங்கமும் நரியை சோதிக்க அதனுடன் கூட சென்றது. என்ன ஆச்சரியம் நரி சொன்னதுபோல் எல்லா விலங்குகழும் பயந்து ஓடின.

சிங்கமும் நரியின் சொல்லை நம்பி அதனை தனது Partner ஆக சேர்த்துக்கொண்டது.

என்ன டாக்டர் சுத்த மொள்ளமாரித்தனமா இருக்கு?

நரியோட சிங்கம் போனதனால்தானே ஏனைய மிருகங்கள் பயந்து ஓடின. இதை வைத்து நரி எப்படி உரிமை கொண்டாட ஏலும்?

 சகல சரியா சொன்ன. அதுதான் COVID-19 லயும் நடக்குது.

COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட 80% வீதமானவர்களுக்கு பாரிய நோய் அறிகுறிகள் இன்றியே குணமடைகிறார்கள். இன்னும் 15% ஆனவர்கள் பாரிய நோய் அறிகுறிகள் தோன்றினாலும் வைத்தியசாலைகளில் வழங்கப்படும் Supportive treatment களால் தேறி விடுகிறார்கள்.
(இந்த supportive Treatment க்காகத்தான் வைத்தியசாலைகளில் அனுமதிக்கிறார்கள்.)
மரணம் நிகழ்வது வெறும் 5% மானவர்களுக்கே. இலங்கையில் அது 2% இலும் குறைவு.

Virus களை பொறுத்தவரை அவற்றை எதிர்ப்பது கதையில் வரும் சிங்கம் போல் எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியாலேயே.
85% க்கு மேட்பட்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியாலேயே சாதாரணமாக குணமடைவதால் மருந்தின் பங்களிப்பு இந்த குள்ள நரியின் நிலை போல் கேள்விக்குறி ஆகிறது.
அதனாலேயே ஆரம்பத்தில் குணப்படுத்துவதாக நம்பப்பட்ட சில மருந்துகள் பின்னாளில் பல சோதனைகளுக்கு பின்னால் பயனில்லை எனப்படுகிறது.

சரி டாக்டர் அந்தக் கதையில் சிங்கம் நரியின் கூடவே செல்லாமல் ஒளிந்திருந்து நரியை தனியே அனுப்பி சோதித்து பார்க்கலாமே?

 நல்ல ஒரு Idea. அதாவது மருந்தை மனித உடலில் செலுத்தாமல் ஆய்வுகூடத்தில் சோதித்து பார்க்கலாம்.
But, அதில் சாதகமான பெறுபேறுகள் கிடைத்தாலும் மீண்டும் மனித உடலில் செலுத்தும்போது நோய் எதிர்ப்பு சக்தியாகிய சிங்கமும் கூட வரும்.
அதே நேரம் Covid-19 க்கு எதிரான செயற்பாடு ஆரம்ப நிலையில் ஒருமாதிரி ஆகவும் , நுரையீரலை தாக்கும்போது வெறுமாதிரியும் செயற்பட வேண்டும்.
அதிலும் பல சிக்கல்கள் உண்டு. அதனை இந்த 10 நிமிட Video பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
https://youtu.be/eaG1P3gvCBM

 அதேபோல் தடுப்பூசிகளை 10 க்கு மேற்பட்ட நாடுகள் கண்டுபிடித்துவிட்டதாக அறிக்கை விடுகின்றன.
அவை ஆரம்ப கட்ட ஆய்வுகூட சோதனைகள்.
அதன் பின்னால் பல கட்ட சோதனைகள் உண்டு. ஆனால் Breaking News க்காக அலையும் ஊடகங்கள் பிள்ளையார் சுளி போடும்போதே சூறாவளி பிரச்சாரம் செய்து விடுகின்றன.
இதில் பல நாடுகள் நீயா? நானா? என போட்டி வேறு.
ஆனால் அவை பல சோதனை நிலைகளை தாண்ட வேண்டும்.
தடுப்பூசி பாவனைக்கு வர பல மாதங்கள் செல்லும்.

இப்போதைக்கு தீர்வுதான் என்ன டாக்டர்?
Lockdown எல்லாம் நீண்ட நாட்களுக்கு சென்றால் நாடு தாங்காது.
(Election வருதோ இல்லையோ நாடு மெல்ல மெல்ல வழமைக்கு திரும்பி ஆகணும். அதுதான் நெசம்.)
கைவசம் இருக்கும் சிங்கத்துக்கு துணையாக மருந்து எனும் புலி ஒன்று கிடைக்கும்வரை, சிங்கத்தை ( நோய் எதிர்ப்பு சக்தியை) பலப்படுத்தி போராடுவதே நாட்டில் நோய் பரவினால் கைவசம் இருக்கும் ஒரே வழி.

💗 Stay safe. But, இன்னும் எவ்வளவு காலத்துக்கு Stay Home?
#Dr_ Ziyad_ Aia

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

1,929 total views, 1 views today