இலங்கையில் அறிமுகமாகியுள்ள Antigen – Rapid Detection Test (Ag-RDT) யாருக்கு, எந்தெந்த சூழ்நிலையில் செய்யப்படும் என இலங்கை சுகாதார அமைச்சின் வழிகாட்டல்.
By: Dr. Ziyad Aia

Antigen – Rapid Detection Test பற்றி அறிய:
https://m.facebook.com/story.php?story_fbid=201292838123065&id=102520121333671

இலங்கையில் இவ்வாரம் முதல் அறிமுகமாகியுள்ள rapid Test (Ag-RDT) சோதனையின் அடிப்படை:

01. வழமையாக அமுலில் உள்ள RT-PCR சோதனைக்கு மேலதிகமான ஒன்றாகவே இது இருக்கும். இது PCR சோதனையை பிரதியீடு செய்யாது.

02. நோய்த்தொற்று பரவலை தடுக்க சந்தேகத்துக்கு இடமானவர்களை அவசரமாக தனிமைப்படுத்த இச்சோதனை உதவும்.

03. சமூகத்தில் ஆபத்து நிறைந்த குழுக்கள் இருப்பதை கண்டுபிடிக்க உதவும்.

04. இச் சோதனையானது நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு குறைந்த மற்றும் சுய பரிசோதனைகளுக்கு (Screening) உபயோகிக்க முடியாது.

யார் யாருக்கு இந்த Rapid Antigen test (Ag-RDT) சோதனை செய்யப்படும்?

01. COVID-19 சந்தேகிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு PCR சோதனைக்கு மேலதிகமாக இது செய்யப்படும்.
இதன் போது நோயாளியின் ஒரு மூக்கு துவாரத்தின் ஊடாக PCR சோதனைக்கும் மறு மூக்கு துவாரத்தின் ஊடாக Rapid Testing க்கும் ஒரே நேரத்தில் மாதிரிகள் பெறப்படும்.

இதில் Rapid Test ல் Positive என வரும்போது PCR சோதனை செய்யப்படாது.
மாறாக Rapid Test ல் Negative என வரும்போது மற்றைய மாதிரி ஊடாக PCR செய்யப்படும்.

02. Rapid Test ஆனது COVID-19 தொற்றுக்கு உள்ளான ஒருவரின் நோய் அறிகுறிகளை காண்பிக்காத நெருங்கிய உறவுகளுக்கு (Close Contacts) சோதிக்க பயன்படுத்தப்படும்.

03. COVID-19 அறிகுறிகளை காண்பிக்காது COVID பரவல் அதிகமாக உள்ள பிராந்தியங்களில் (High Risk Area) இருந்து வேறு நோய் காரணங்களுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு.

04. COVID-19 களப் பணிகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களை தனிமைப்படுத்த வேண்டுமா? அவசர முடிவை மேற்கொள்வதற்கு.

05. மரணித்த உடல்களுக்கு: (தேவையானபோது)
இதன்போது 01 இல் குறிப்பிடப்பட்டவாறு இரு சாம்பிள்கள் பெறப்படும்.

Rapid Test ல் Positive என வரும்போது PCR சோதனை செய்யப்படாது நேரடியாக COVID-19 முறைப்படி இறுதிக்கிரியைகள் (தகனம்) மேற்கொள்ளப்படும்.
மாறாக Rapid Test ல் Negative என வரும்போது அடுத்த Sample மூலம் PCR சோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே இறுதி கிரிகைகள் பற்றி தீர்மானிக்கப்படும்.

சுருங்க சொல்லின் ஏதாவது Sample இல் Positive என பெறப்பட்டால் எரித்து சாம்பல் பெறப்படும்.

கிடைக்கும் பெறுபேறுகள், நடைமுறைகளை பொறுத்து இந்த Circular எதிர்காலத்தில் மாற்றப்படலாம்.
முழுமையான Circular ஐ வாசிக்க:

461 total views, 1 views today