COVID-19, Be Positive: 💓💓💓
இலங்கையின் சாதகமான பக்கங்கள்.
By Dr Ziyad Aia

💓 27th, January 2020 இலங்கையில் முதலாவது சீன நோயாளி கண்டுபிடிக்கப்பட்டத்தில் இருந்து 80 நாட்களை கடந்து வந்துள்ளோம்.

💓 Lockdown ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்துவிட்டது.

Forbes சஞ்சிகை வெளியிட்ட COVID-19 Risk அதிகமுள்ள நாடுகளில் இலங்கைக்கு 16 வது இடம்.
எல்லோரும் இலங்கை மீது வைக்கும் குற்றச்சாட்டு அதிகளவான Tests கள் செய்யவில்லை, அதனால் அதிகளவான நோயாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை என்று.

இது வெளிப்படையான உண்மையாக இருந்தாலும் இதை நினைத்து அச்சப்பட வேண்டுமா?
மறுபுறம் GMOA அறிக்கையில் COVID-19 தொற்றாளர்களுடன் சம்பந்தப்பட்ட 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சமூகத்தில் காணப்படலாம் என அதிர்ச்சி அளிக்கிறது.

இதையெல்லாம் தாண்டி நம்மிடம் உள்ள நம்பிக்கை தரும் விடயங்கள் என்ன?

 01. இலங்கையில் தற்போதைய COVID-19 மரண வீதம் 3%. (நோயாளிகள் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டால் இந்த வீதம் இன்னும் குறையும்.)

இந்த 2 மாத காலத்தில் நிகழ்ந்த COVID-19 மரணங்கள் ஏழு. அதில் இருவர் மரணிக்கும் சில மணி நேரத்துக்கு முன்னர் COVID-19 உறுத்திப்படுத்தப்பட்டவர்கள். So, அவர்களை COVID-19 மரணம் என்பதைவிட, மரணித்தவர்களில் Covid-19 காணப்பட்டது என்றே சொல்லலாம். மீதம் உள்ள ஐவரில் ஒருவர் மாத்திரமே இளவயது (40 / 44).
 எனவே 50 வயதுக்கு குறைந்தவர்களில் மரண வீதம் 1% ஐ விட குறைவு.

💓 16/04/2020 நிலவரப்படி ICU வில் இருப்பவர் ஒருவர் மாத்திரமே. இதுவும் நம்பிக்கை தரும் விடயம்.

💓 தற்போதுவரை 68 பேர் குணமடைந்து Recovery Rate 27% ஆக உள்ளது. வரும் நாட்களில் இது இன்னும் அதிகரிக்க்கும்.

 02. ஒருவேளை சமூகப்பரம்பல் நிகழ்ந்திருந்தாலும் குறிப்பிட்ட அளவு சமூகத்தில் இருந்து நோயாளிகள் நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை. புதிதாக கண்டுபிடிக்கப்படும் பலர் நோய் அறிகுறி இன்றியே உள்ளனர். இது ஆபத்தான நிலை என்று Negative பக்கத்தை எடுத்தாலும், மறுபுறம் எங்களுக்கு COVID-19 தாக்கியும் நோய் வரவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி வருகிறது என்ற Positive பக்கத்தையும் கவனிக்க வேண்டும்.
💓 ( நம்ம Plain Tea லயும் விஷயம் உண்டு.)

 03. ஆபத்து குறைந்த மாவட்டங்களில் ஊராடங்கை தளர்த்தும் நடவடிக்கையை அரசங்கம் முன்னெடுக்க எடுக்கும் முயற்சி வரவேற்க தக்கது.
நமது ஊரடங்கு எல்லாம் வெறும் பேரளவானதே. 4 நாள் மூடிவிட்டு ஒரு சில மணித்தியாலங்கள் குறிப்பிட்ட சில கடைகளை மாத்திரம் திறக்கும்போது Corona வுக்கு தேவையாக ஐந்து பொருத்தமும் அம்சமாக அமைகிறது. அதைவிட மாவட்டங்களுக்கு வெளியே நடமாட்டத்தை கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கையை கட்டுப்படுகளுடன் திருப்ப வேண்டும்.
அவ்வாறான நிலையிலும் மக்கள் சனநெரிசலை குறைத்து , இடைவெளியை பேணி, அடிக்கடி கை களுவுதலை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.

நடைமுறையில் உள்ள ஊராடங்கால் Foodcity களும் பெரிய வியாபார நிறுவனங்களுமே நன்மை அடைகின்றன. சிறு வியாபாகள், கூலி தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
தடைகளை தாண்டி பிழைக்க தெரிந்தவன் பிழைக்கிறான். (Survival of the fittest.)

 04. இப்படியே போனால் July 20 வரை COVID-19 நீடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதுவரை நாடு தாங்காது. துரிதமாக Testing களை அதிக்கப்படுத்துவதன் மூலம் சந்தேகத்துக்கு இடமானவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி திடீர் அனர்த்தங்கள் ஏட்படுவதை தவிர்க்க வேண்டும்.
(இப்போது அரசாங்கத்துக்கு இருக்கும் சவால் பொதுத்தேர்தல் முன்னோக்கி வருவதால் , அதிகமான Tests களை செய்து அதிக நோயாளிகளை கண்டுபிடித்தால் நற்பெயருக்கு களங்கம் வந்துவிடும் என்று.) மாறாக, அதிக சோதனைகள் செய்வது ஊரடங்குகளை நம்பிக்கையோட தளர்த்த வழி வகுக்கும்.

 இதில் இன்னுமொரு சாதகமான விடயம் என்னவெனில் வெளிநாட்டில் இருந்து வரும் புதிய நோயாளிகள் இல்லாதபோதும், உள்நாட்டில் ஒரு மாதம் கடந்தும் பாரிய நோய் அறிகுறிகளுடன் நோயாளிகள் பதிவாகவில்லை. இது நம்பிக்கை தரும் விடயமா? அல்லது புயலுக்கு பிந்திய அமைதியா என்பதை இனிவரும் சில நாட்கள் பதில் சொல்லும்.

 05. Fear Psychosis இல் இருந்து நாம் விடுபட வேண்டும்.
Corona வந்துவிட்டால் ஒருவரை கொலை குற்றவாளியை விட கேவலமாக சித்தரிப்பதையும் , Media க்கள் அதை பூதாகரமாக்குவதையும் தவிர்க்க வேண்டும்.

கொரோனா வந்துவிட்டால் மரணம் என்கிற மாயையில் இருந்து நாம் வெளியே வரவேண்டும்.
அதனைவிட பயங்கரமான இதுவரை மருந்தே இல்லாத Dengue வையே அசால்ட்டாக வருடாவருடம் கடந்து வருகிறோம்.

இன்னும் சிலர் Corona Virus நாட்டுக்கு நாடு வேறுபடும். அதனால்த்தான் இலங்கை இதுவரை பாதிப்பு அடையவில்லை என்கின்றனர்.

💓 நாங்க China வுல இருந்து வந்த Corona வுக்கே முத்தம் கொடுத்து அனுப்பிட்டு , அதிகமான பாதிப்பை ஏற்படுத்திய இத்தாலி Corona வையே அசால்ட்டாக Deal பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

💓💓 April முடியும்வரை எந்த அநர்த்தமும் நிகழவில்லை எனில் இறைவனின் அருளால் நாம் மீண்டெழுவது உறுதி. 💓💓

💓 Disclaimer:-

இப்பதிவு பய உணர்வை போக்கி நம்பிக்கையை ஏட்படுத்தவே.
இதை பார்த்து Over Confident ஆகி கால் விலங்கை கழற்றிவிட்டு, கைகளையும் கழுவாமல் திரிய வேண்டாம். அப்புறம் வௌவாலுக்கு Corona வாம், காத்துல பரவுதாம் என்று புதிய ஆய்வு சொல்லுதாம் என்று கட்டுரை எழுத வேண்டி வந்துடும்.

💓 Take Home Message:- 💓

பயம் , பதட்டத்தை தவிர்த்து எச்சரிக்கை உணர்வை வளர்ப்போம்.
முகநூல் மற்றும் Whatsapp களில் வரும் எல்லா செய்திகளின் பின்னால் சென்று Stress க்கு ஆளாகாமல் நம்பகரமான , நம்பிக்கை ஊட்டும் செய்திகளை படிப்போம்; பரப்புவோம்.

References:-
https://covid.iq.lk/

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

66 total views, 4 views today