🛑 COVID-19 இறந்தவர்களை அடக்கம் செய்வது மற்றும் எரிப்பது பற்றிய விவாதத்தில் வெவ்வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்ட நிலையில் அறிவியல் உண்மைகளை நேராகப் பெற, Sunday Times ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் (HKU) வைராலஜி பேராசிரியர், பேராசிரியர் மாலிக் பீரிஸின் நிபுணத்துவ கருத்தை நேரடியாக கேட்டது.
தமிழில்; Dr Ziyad Aia

🛑 அடிப்படை உண்மை – இறந்த கலங்களில் வைரஸ்கள் பெருக்கமடைய முடியாது. இதனால் வைரஸ் பெருக்கம் மரணத்துடன் நின்று, மீதமுள்ள தொற்று வைரஸ் படிப்படியாக இறக்கத் தொடங்குகிறது.

🛑 ஒரு நோயாளியிலிரிருந்து COVID-19 தொற்றானது நோய் அறிகுறிகள் தோன்ற 2-3 நாட்களுக்கு முன்பிருந்தும் நோய் அறிகுறிகள் தோன்றி 4-5 நாட்கள் வரையும் ஏனையோருக்கு அதிகளவில் பரவும் வல்லமை வாய்ந்தது. பொதுவாக ஒரு நோயாளி நோய் தொற்றுக்கு உள்ளாகி 2 வாரங்களின் பின்னரே இறப்பார். அந்த நேரத்தில் அவரது உடலிலிருந்து நோய் தொற்று பரவும் சாத்தியம் மிகவும் குறைவு.

🛑 Positive RT-PCR பெறுபேறு என்பது நோய் தொற்றை உண்டாக்கும் Virus இருப்பதை குறிக்காது. வைரஸை வளர்ப்பது மட்டுமே தொற்று வைரஸ் இருப்பதை நிரூபிக்கும்.
இதனால்தான், நோயிலிருந்து மீண்ட நோயாளிகள் அறிகுறி தோன்றிய 10-14 நாட்களின் பின்னர் PCR Positive ஆக இருந்தபோதும் மருத்துவமனை தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று WHO அறிவுறுத்தியது. இதனை இலங்கை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துகிறது. எனவே ஒரு RT-PCR Positive ஆக மாறுவதால் தொற்று வைரஸ் இருப்பதாக அர்த்தமல்ல. (செயலிழந்த Virus இன் RNA இருந்தால்கூட Positive என காட்டும். ஆனால் இதனால் நோய் பரவாது.)

🛑 COVID-19 என்பது சுவாச பாதை மூலம் பரவும் ஒரு நோய். இது நீரினால் பரவும் நோய் அல்ல. இதுவரை நீர் மூலம் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், ஒரு முன்னெச்சரிக்கையாக, typhoid, cholera, shigella அல்லது பிற வயிற்றுப்போக்கு நோய்கள் அடங்கிய அனைத்து நோய்க்கிருமிகளால் தேவையற்ற நீர் மாசுபடுவதைத் தவிர்ப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். COVID-19 நீரில் பரவும் நோய்கள் குறித்து நாம் கவலைப்பட வேண்டிய பட்டியலில் முதலிடத்தில் இல்லை. இலங்கை தீவின் சில பகுதிகளில் நிலக்கீழ் நீர் மட்டம் மிக அதிகமாக இருந்தால், அத்தகைய இடங்களில் கல்லறைகள் அமைக்காமல் தவிர்க்கலாம். ஆனால் டைபாய்டு, காலரா, ஷிகெல்லா அல்லது கோவிட் -19 உள்ளிட்ட தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வது பாதுகாப்பான தீவின் எந்தப் பகுதியும் இல்லை என்று கூறுவது அபத்தமானது.

🛑 மண்ணில் Plastic Bag, கிருமி கொல்லிகள் மற்றும் வேதிப்பொருட்களுடன் அடக்கம் செய்யப்படுவதால், இறந்த உடலில் இருந்து எஞ்சியிருக்கும் தொற்று வைரஸ் வெளியேறக்கூடிய அபாயத்தை தடுக்க முடியும்.

இறந்த உடலில் இருந்து கசியக்கூடிய எஞ்சிய தொற்று வைரஸ் இருந்தால் கூட, இந்த சுரப்புகள் மண்ணின் வழியாகச் செல்வதால் அது மண்ணால் வடிகட்டப்படும்.

🛑 ஒரு பேச்சுக்கு (அனுமானமாக), இந்த தடைகள் அனைத்திலிருந்தும் தப்பித்து நிலத்தடி நீரில் நுழையும் சிறிய அளவிலான தொற்று வைரஸ் இருந்தால் (மிகவும் சாத்தியமில்லை), நிலத்தடி நீரின் பெரிய அளவு காரணமாக அவை நீர்த்துப் (Diluted) போகும். ஒரு சில COVID-19 தொற்று வைரஸ்கள் நோய்த்தொற்றைத் தொடங்காது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நோய் உருவாக்க தொற்று வைரஸின் ஒரு பெரிய அளவை நீங்கள் பெற வேண்டும். சுவாச வழியால் தொற்றுநோயுடன் ஒப்பிடுகையில், இந்த தொற்று அளவு தண்ணீரில் உட்கொண்டால் நோயை உருவாக்க இன்னும் பெரிய அளவில் தேவைப்படும். ஏனெனில், இவற்றில் பெரும்பாலானவை வயிற்றுக்கு நேரடியாக சென்று இரைப்பை அமிலத்தன்மையால் கொல்லப்படும். சுவாசப்பாதையில் உள்ள epithelial cells வைரஸால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய செல்கள். இது காற்றில் பரவும் பரவலுடனேயே நிகழ்கிறது.

🛑 உண்மையில் நிலத்தடி நீர் மாசுபடுதலில் இவ்வளவு பெரிய ஆபத்து இருக்குமானால், இலங்கையில் சில அசாதாரண புவியியல் அம்சங்கள் இருப்பதாக கருதினால், நிலத்தடி நீர் மட்டம் ஏற்கனவே பெரிதும் மாசுபட்டிருக்கும், ஏனெனில், COVID-19 வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் மலத்தில் உள்ளது. COVID-19 உடைய பெரும்பாலான மக்கள் நோய்த்தொற்று தொடங்கிய பின்னர் நாட்கள் அல்லது ஒரு வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் கண்டறியப்படுவதில்லை, அந்த நேரத்தில் அவர்கள் வைரஸைக் கொண்ட மலத்தை வெளியேற்றுகிறார்கள். இறந்த உடலில் காணப்படும் எந்த வைரஸையும் விட இவை அதிக வீரியத்துடன் தொற்ற கூடியவை. இலங்கையில் பெரும்பாலான மக்கள் கழிவை அகற்றுவதற்காக நீர் மலகூட குழிகளைப் (soakage pits) பயன்படுத்துவதால், COVID-19 நோயைக் கண்டறிந்து தனிமைப் படுத்தப்படுவதற்கு முன்னர் பலர் இந்த வசதிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், நீர் மட்டம் மாசுபாடு ஒரு பிரச்சினையாக இருந்தால், அது ஏற்கனவே பல முறை நடந்துள்ளது.

🛑 அனைத்து அல்லது பெரும்பாலான COVID-19 நோயாளிகள் தற்போதுள்ள கொத்தணிகளை (clusters of cases) கண்காணிக்க முடியும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் (அதாவது “சமூக பரிமாற்றம்” இல்லை), அசுத்தமான நீர் வழியாக பரவுவதற்கான இந்த சாத்தியமான ஆதாரம் நடந்ததாகத் தெரியவில்லை. அப்படியானால், அடக்கம் செய்வதன் மூலம் நீர் மட்டம் மாசுபடுத்துவதற்கான மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட , வெறுமனே அனுமானம் செய்யப்பட்ட மற்றும் புறக்கணிக்கக்கூடிய ஆபத்து குறித்து நாம் ஏன் கவலைப்படுகிறோம்?

🛑 நான் மேலே கூறிய காரணங்களுக்காக ஒரு உடலை நீர் மட்டத்தில் அல்லது அதற்கு அருகில் புதைக்க யாரும் பரிந்துரைக்கவில்லை. நீர் மட்டம் பற்றிய கவலை COVID-19 ஐ விட மற்ற தொற்று நோய்களுக்கு அதிகம். ஆனால், இலங்கையின் எந்தப் பகுதியும் பொருத்தமில்லை என்று சொல்வது அபத்தமானது, அங்கு நீர் மட்டம் தரை மட்டத்திற்கு கீழே போதுமானதாக இருப்பதால் அடக்கம் பாதுகாப்பாக சாத்தியமாகும்.

🛑 சாத்தியமே இல்லாத ஒரு அனுமானத்தை வைத்து அந்த Risk ஐயும் நாங்கள் தவிர்க்க பார்க்கிறோம் என்று கூறி “மரணித்த உடல்களை புதைப்பது என்ற அதீத மத நம்பிக்கை கொண்ட ஒரு சமூகத்தின் உரிமையை மறுதலிப்பது” அச்சமூகத்தை நோயை மறைக்க செய்வதன்மூலம் அதைவிட பாரிய Risk ஐ கொண்டுவரும்.

“I fear that this dispute on burial for those who have strong religious beliefs in this regard is already leading to increased transmission because of the loss of community participation in sections of the affected community. So, rather than reducing risk, this policy is ALREADY INCREASING the risk.”
– Professor Malik Peris

ஆங்கில மொழிமூலத்துக்கு:
https://m.facebook.com/story.php?story_fbid=10160421529173222&id=642263221

Source:
http://www.sundaytimes.lk/…/cremation-or-burial-prof-malik-…

1,152 total views, 1 views today