(Corona) வைரஸ்களுக்கு உயிர் இருக்கா? இல்லையா? 🤔
விடிய விடிய ராமாயணம்…..(பலர் மனசுக்குள் நினைப்பது புரிகிறது.)
By Dr Ziyad Aia

இக்கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.
இதற்கான பதில் நாம் “உயிர்” என்பதற்கு கொடுக்கும் வரைவிலக்கணத்தில் தங்கியுள்ளது.
இப்போது சொல்லக்கூடிய பதில் . இருக்கு ஆனால் இல்லை.

உயிருள்ளவற்றின் பண்புகளையும் உயிரற்றவைகளின் பண்புகளையும் பெற்றுள்ளதால் வைரஸ்கள், இன்றளவும் உயிரியல் வல்லநர்களுக்கு பெரிய புதிராகவே உள்ளன.

எனவே வைரஸ்களுக்கு வகைபாட்டியலில் தனி இடம்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. மிக நுண்ணிய, இலத்திரனியல் நுண்ணோக்கியினால் (Electron Microscope) மட்டுமே காணக்கூடிய, தொற்றக்கூடிய வேறு உயிருள்ள கலன்களுக்குள் வாழும் கட்டாய ஒட்டுண்ணிகள் என்று தற்போது வைரஸ்கள் வரையறுக்கப்படுகின்றன.

வைரஸ்களின் மிக நுண்ணிய அளவின் காரணமாக அவைகளைப் பற்றிய அறிவு உயிரியல் வல்லுநர்களுக்கு நீண்ட காலமாக இல்லாமலேயே இருந்தது. ஆனால் பாக்டீரியங்கள் அல்லாத வேறு சிலவும் நோயை உண்டாக்கும் திறனுடையதாக இருந்ததும் தெரியவந்தது.

19ம் நூற்றாண்டில் புகையிலையின் பல் வண்ண இலை நோய் (மொசைக்) வைரஸ் (Tobacco Mosaic Virus), வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த புகையிலையைக் கடுமையாக தாக்கி சேதம் உண்டாக்கிய போதுதான் வைரஸ்கள், ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது.

நோயுற்ற இலையின் சாற்றினை நோயில்லாத இலையில் தெளித்தாலே அது நோய்வாய்ப்பட்டது என்பதனை மேயர் என்பவர் நிரூபித்துக் காட்டினார். நோயுற்ற இலையின் சாற்றினை பாக்டீரிய வடிகட்டி மூலம் வடிகட்டின பிறகும் கூட அச்சாறு தொற்றுத்தன்மை வாய்ந்ததாக இருந்ததால், இத்தொற்றுத்தன்மைக்குக் காரணம் பாக்டீரியங்கள் அல்ல என்பதனை Dmitri Ivanovsky (1892) என்ற ரஷிய அறிவியல் அறிஞர் வெளிப்படுத்தினார்.

டச்சு நுண்ணுயிர் வல்லுநர் Martinus Beijerinck (1898) என்பவர் ஐவோனோஸ்க்கியின் கண்டுபிடிப்புகளை ஊர்ஜிதப்படுத்தினார். நோயை உண்டாக்கும் துகள்கள் வைரஸ்கள் என அழைக்கப்பட்டது.

W.M. ஸ்டான்லி (1935) என்ற அமெரிக்க உயிர் வேதியியல் நிபுணர் வைரஸ்களை படிகவடிவில் தனிப்படுத்தினார். இப்படிக வடிவிலும் அவை நோய் உண்டாக்கும் திறன் உடையவையாய் இருந்தன. இதுவே Virology என்ற புதிய அறிவியல் பிரிவு ஆரம்பமாக அடிகோலியது.

💓 Virus பொதுப்பண்புகள்:
வைரஸ்கள் புரத உறையால் சூழப்பட்ட நியூக்ளிக் அமிலத்தை (Nucleic Acid) உடையவை. நியூக்ளிக் அமிலம் DNA அல்லது RNA ஆகும். ஆனால் இவை இரண்டையும் சேர்ந்து கொண்டிருப்பதில்லை.

வைரஸ்கள் சாதாரண கல (Cell) அமைப்பைக் கொண்டிருப்பதில்லை. பொதுவாக வைரஸ்களின் அளவு 20 நேனோ மீட்டரிலிருந்து 300 நேனோ மீட்டர் வரை உள்ளன.

எந்த ஒரு வளர்சிதை மாற்றத்திற்கும் தேவையான அமைப்பையும் இவை பெற்றிருக்கவில்லை. உயிருள்ள செல்லுக்கு வெளியே இவை முழுமையாக செயலற்றவை. (Inactive)

💓 வைரஸ்களின் உயிர்ப்பண்புகள்:
 உயிருள்ள தாவர அல்லது விலங்கு செல்லினுள்ளே பெருக்கமடையும் திறன் உடையவை.
 நியூக்ளிக் அமிலம், புரதம் மற்றும் நொதிகளைக் கொண்டிருத்தல்.
 பல்கிப்பெருகி நோயை உருவாக்கும் திறன் உடையவை
 திடீர்மாற்றம் (Mutation) அடையும் திறன் உள்ளவை

💓 வைரஸ்களின் உயிரற்ற பண்புகள்:
 அசைவு, சுவாசம், சமிபாடு போன்ற பொதுவான உயிர் இயல்புகள் அற்றவை.
 செல்லுக்கு வெளியே பெருக்கமடையும் திறன் அற்றவை.
 எந்த ஒரு வளர்சி மாற்றமும் அற்றவை
 கருவுடன் கூடிய கலம் (புரோட்டோபிளாசம்) அற்றவை.
 படிகப்படுத்த முடியும்.

⁉️⁉️ அப்போ உயிரில்லாமலா காற்றில் இத்தனை மணி நேரம், கதவில் இத்தனை மணிநேரம் வாழும், கொல்லப்பட்ட வைரஸ்களை Vaccine ஆக பயன்படுத்துகிறோம் என்பதெல்லாம் பொய்யா Gopal?

உண்மையில் Virus கள் “உயிருடன்” இருக்கும் என்பதைவிட “உயிர்ப்புடன்” இருக்கும் எனும் சொல் பதமே பொருந்தும். அதாவது அவை உயிருள்ள கலம் ஒன்றினுள் நுழையும்போது இனப்பெருக்கம் ஆற்றலை தக்கவைத்துக்கொள்ளும் இயல்பிலேயே இது தங்கியுள்ளது.

Virus களை அழிப்பதை இறப்பு (Dead) என்பதை விட செயலிழப்பு எனும் “inactivated” or “attenuated” எனும் சொல்லே பொருந்தும்.
வெப்பமாக்கும்போது Virus களின் protein கவசம் உடைதல் (உதாரணமாக Corona Virus கள் 56 -60’C வெப்பநிலையில் அழியும்.)
, genetic material அழிதல், Virus கள் துண்டுதுண்டாக உடைதல் என்பவற்றால் செயலிழக்கின்றன.

நன்றி: விகாஸ்பீடியா

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள Link களை பார்க்கவும்.
01. https://www.khanacademy.org/test-prep/mcat/cells/viruses/a/are-viruses-dead-or-alive

02. https://www.mentalfloss.com/article/583778/whats-difference-between-dead-and-live-virus

03. https://www.sciencealert.com/are-viruses-alive

https://www.newscientist.com/question/are-viruses-alive/

https://microbiologysociety.org/publication/past-issues/what-is-life/article/are-viruses-alive-what-is-life.html

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

1,200 total views, 2 views today