By: Dr Ziyad Aia
இன்றைய சமூகத்தில் பிறந்த பாலகனிலிருந்து அன்றாடம் பாவிக்கும் ஒன்றாக Diapers மாறிவிட்டது. Diaper ஐயே ஆடையாக அணிவிக்கும் கலாச்சாரம் வந்துவிட்டது.
Plastic பாவனை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது போல் இதுவும் ஆகிவிட்டது.
இதனால் ஏற்படுகின்ற பிரதான பிரச்சினைதான் படத்தில் காட்டி இருக்கின்ற Diaper Rash (diaper Dermatitis). இதனுடன் பங்கஸ், பாக்டீரியா தொற்று ஏற்படும் போது இரத்தக் கசிவும் ஏற்படலாம். (Bleeding diaper rash)
இது பின்வரும் 3 பிரதான காரணிகளால் ( தனியாகவோ, சேர்ந்தோ) ஏற்படலாம்:-
01. சிறுநீர், மலத்தில் உள்ள ஈரலிப்பும் கழிவு பதார்த்தங்களும்.
02. இறுக்கமாக அணியப்படும் டயப்பரினால் ஏற்படும் தோல் பாதிப்பு.
03. குழந்தையின் மென்மையான தோலில் ஏற்படும் அழற்சி. (Irritation to baby’s super-sensitive skin)
நோய் தொற்றுகள்:-
01. பங்கஸ் தொற்று (Candida Infection)
ஏற்கனவே சொன்ன காரணங்களால் ஏற்படும் தோல் அழற்சியில் Fungus தொற்றுவதால் ஏற்படும். இதனால் ஈரலிப்பான சிவப்பு நிற தோல் அடையாளம் ஏற்படும். சில இடங்களில் சிவப்பு புள்ளிகள் தோன்றலாம். சிவப்பு நிறம் ஒரு இடத்திலிருந்து வெளி நோக்கி வருவதை அவதானிக்கலாம்.
02.Infantile seborrheic dermatitis:-
Pink அல்லது மஞ்சள் நிற தழும்புகள் (Scales) போல காணப்படும். (See the link). பொதுவாக இது குழந்தைகளின் தலையில் தோன்றக்கூடிய ஒன்று. (Cradle cap)
Diaper அணியும் பிள்ளைகளில் அடிவயிறு, தொடையின் உட்பகுதியில் தோன்றலாம்.
03. Psoriatic diaper rash:-
இது தோலில் வீக்கம் போன்ற (Inflammation) தடிப்புகளையும், சொரிச்சலையும் ஏற்படுத்தும். இதனால் குழந்தை காரணம் இன்றி அழுது கொண்டிருக்கும்.
04. பாக்டீரியா தொற்று:-
பொதுவாக Staphylococcal, Streptococcal bacteria க்களால் ஏற்படும். இது மஞ்சள் நிற சேல் கட்டிகளாக தோன்றும். இது குழந்தைகளுக்கு அரிதாக ஏற்பட்டாலும் மேலே சொன்ன (1-3) நோய் நிலைமைகளை குணப்படுத்தப்படாதவிடத்து வாய்ப்புகள் அதிகம்.
Diaper Rash ஐ தவிர்க்கும், குணப்படுத்தும் முறைகள் (Prevention & Treatment):-
01. குழந்தை மலம், சலம் கழிக்கும் போது உடனடியாக Diaper ஐ மாற்றல். குறிப்பாக மலம் கழித்தால். இரவில் தூங்கும் போது இருந்தாலும் செய்ய வேண்டும்.
02. ஒரு Diaper ரை கழட்டிய உடன் அடுத்ததை மாற்றுவதற்கு சில மணி நேரம் இடைவெளி விடல். (Tummy time) இந்த நேரத்தில் தளர்வான மிருதுவான ஆடைகளை அணிவித்தல்.
03. Diaper களை இறுக்கமாக அணியாதீர்கள். இறுக்கமாக அணியும் போது உராய்வினால் மென்மையான சருமத்தில் rashes தோன்றலாம்.
04. முடிந்த அளவு Baby wipes பாவிப்பதை தவிர்ந்து கொள்ளுங்கள்.
இவற்றில் காணப்படும் fragances or cleansers diaper rash ஐ மேலும் மோசமடையச் செய்யும்.
Diaper ஐ கழற்றிய உடன் சாதாரண or இளஞ்சூடான நீரினால் மென்மையாக கழுவி சுத்தமான சீலையினால் துடைத்தல் சிறந்தது.
05. Rash தோன்றுவதை அவதானித்தால் வைத்திய ஆலோசனையுடன் zinc oxide, Vaseline மற்றும் antifungal ointment ஐ பாவித்தல்.
அவ்வாறான காலப்பகுதியில் முடிந்த அளவு Diapers ஐ தவிர்ந்துகொள்ளல்.
06. குழந்தைக்கு
A. Diaper rash உடன் காய்ச்சல்
B. Rashes உடலின் ஏனைய பாகங்களான கை, முகம் தலைக்கு பரவினால்.
C. பெரிய காயங்கள் தோன்றினால்
D. குழந்தை இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டால்
உடனடியாக வைத்திய உதவியை நாடுங்கள்.
Take Home Message:-
Diaper Rash தோன்றுவது குழந்தைகளுக்கு பொதுவான ஒன்று.
Diaper ஐ கழிவுகள் வெளியானதும் உடனடியாக அகற்றுதல், தொடர்ந்து பாவிப்பதையும் இறுக்கமாக அணிவதையும் தவிர்த்தல்.
Diaper அணிவதால் Cancer தோன்றி குழந்தை மரணமா?
கீழே உள்ள படம் சில நாட்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் News7 செய்தியாக பரவலாக பகிரப்பட்ட ஓன்று.
இதன் உண்மைத்தன்மை என்ன?
முதலில் டயப்பர் அணிவிப்பது குழந்தை மரணித்த சம்பவங்கள் உண்டா?
என்று தேடினால் பல உள்ளன. அவற்றுக்கான காரணம் ஏற்கனவே சொன்ன Diaper Rash சரியாக Treat பண்ண படாமல் விடப்பட்டு அதனில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அந்த நோய் தொற்றினால் குழந்தை இறந்த சம்பவங்கள். இந்த சம்பவங்களின் போது ஒரே Diaper 4 தொடக்கம் 14 நாட்கள் வரை பாவிக்கப்பட்டும் நோய் அறிகுறி தென்பட்ட குழந்தைகள் கவனிக்காமல் விடப்படும் உள்ளது.
Cancer தொற்று பற்றி:-
முதலில் கேன்சர் ஒரு தொற்று நோய் கிடையாது.
இங்கே படத்தில் காட்டப்பட்டுள்ள குழந்தை உண்மையில் “Bleeding Diaper Rash” னால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கூகுள் பண்ணினால் இதே படம் தோன்றும்.
இந்த படம் பற்றிய மேலதிக தெளிவான விளக்கங்களுக்கு:-
https://srilanka.factcrescendo.com/tamil/baby-died-because-of-long-time-wearing-diaper/
ஆரம்ப நிலையில் கண்டு பிடித்து முற்றுமுழுதாக குணப்படுத்தக்கூடிய கேன்சர் பற்றிய எனது Video பதிவு:-
உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/
COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.
12,176 total views, 1 views today
Definitely, what a splendid site and informative posts, I will bookmark your blog.All the Best!
Thank you for the good writeup. It in fact used to be a entertainment account it. Look complex to more delivered agreeable from you! By the way, how could we communicate?