Cannabis Uses and Side Effects கஞ்சா: நினைவாற்றலை கெடுக்குமா அல்லது கொடுக்குமா?
சிகரெட்டை விட கஞ்சா பாவிப்பது சிறந்ததா?
அதன் மருத்துவ பயன்பாடு என்ன?
By: Dr.Ziyad Aia

ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை WHO, ஐ.நா சபை நீக்கியதை தொடர்ந்து கஞ்சா சம்பந்தமான வாத பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. பல நாடுகள் கஞ்சாவை மருத்துவ பாதனைக்காக அனுமதிக்கவும், இன்னும் சில நாடுகள் சிகரட் பாவனை போன்று கஞ்சா பாவனையையும் அனுமதித்துள்ளன.

கஞ்சா பாவனை பற்றி மருத்துவ ரீதியாக நோக்குவோம்.

கஞ்சா (Cannabis) என்பது 3 விதமான தாவரங்களை குறிக்கும். அவற்றின் தாவரவியல் பெயர்களாவன
Cannabis sativa,
Cannabis indica,

Cannabis ruderalis.

வர்த்தக ரீதியாக இது weed, pot, மற்றும் marijuana எனும் பெயர்களில் அழைக்கப்படுகிறது. கஞ்சா செடியின் பூ, இலை என்பவற்றிலிருந்து தயாரிக்கும் முறைகளில் இதன் பெயர் மாறுபடும்.

#கஞ்சாவின்_உள்ளடக்கம்:
கஞ்சாவில் காணப்படும் இரு பதார்த்தங்களே அதன் போதை தரும் இயல்புக்கும், மருத்துவ குணத்துக்கும் காரணம்.

01. Cannabidiol (CBD)
02. Tetrahydrocannabinol (THC)

Tetrahydrocannabinol (THC):
Tetrahydrocannabinol (THC) என்ற பதார்த்தம் தான் போதையை கொடுக்கிறது. அதேநேரம் மூளையில் தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி ஞாபகசக்தியையும் கடுமையாக கெடுக்கின்றது.

குறிப்பாக, THC உச்ச அளவில் இருக்கும் கஞ்சா சுருள்கள் நினைவாற்றலை கடுமையாகப் பாதிக்கும் என்றும் அதனைப் பயன்படுத்துவோரில் 10 வீதமானோர் அதற்கு அடிமையாகிவிடுவார்கள்.

சில நாடுகளில் வீதிகளில் விற்கப்படுகின்ற கஞ்சா சுருள்களில் THC அதிகமாக, அதாவது 15 வீதம் வரை காணப்படுகின்றது. அதன் மூலமே, அதன் பாவனையாளர்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த தூண்டும் விதத்தில் அது ஆட்கொண்டுவிடுகின்றது.

Cannabidiol (CBD):
அதேநேரம், கஞ்சாவில் இருக்கின்ற CBD என்கின்ற பதார்த்தம் THC க்கு நேரெதிரான விளைவுகளைக் கொடுக்கின்றது.

மன அமைதியை ஏற்படுத்தி, மனக் குழப்பங்களுக்கு எதிரான, நினைவாற்றலை பாதிக்காமல் வைத்திருப்பதற்கான விளைவுகளை அளிக்கின்றது.

கஞ்சாவில் காணப்படும் Cannabidiol (CBD) யே அதன் மருத்துவ குணங்களுக்கு பிரதான காரணம். இது வலி நிவாரணி, Migraine தலைவலி, glucoma, மனநோய் மற்றும் மயக்க மருந்தாகவும் உபயோகமாகிறது. இன்னும் வேறு பல நோய்களுக்கும் நிவாரணி என பல ஆய்வுகள் உள்ளன.

கஞ்சாவின் மருத்துவ பயன்பாடு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இப்னு சீனாவின் (Avicenna) மருத்துவ குறிப்புகளிலும் சத்திர சிகிச்சைளுக்கு மயக்க மருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலும் ஆயுர்வேத , யூனானி வைத்தியமுறைகளில் இது அனுமதிக்கப்பட்டுள்ளது.
மதன மோதகய மற்றும் காமேஷ்வரீ மோதகய ஆகிய இரு ஆயுர்வேத மருந்துகளும் கஞ்சாவின் நேரடி தயாரிப்புகள்.

அலோபதி மருத்துவ துறையிலும் வலிப்பு நோயை குணப்படுத்தும் புதிய மருந்தொன்று கஞ்சாவின் Cannabidiol (CBD) கொண்டு தயாரிக்கப்பட்டு FDA Approval பெற்றுள்ளது. இதன் பெயர் Epidiolex.
(Epidiolex is the first and only prescription medication to contain CBD and be approved by the Food and Drug Administration, or FDA. This medication is used to treat certain kinds of epilepsy.)

கஞ்சா பாவனையால் (மருத்துவ நோக்காக இன்றி போதைக்காக முழுமையாக பாவிப்பதால்) உருவாகும் உடனடி மற்றும் நீண்டகால பாதிப்புகள்.

#உடனடி_பாதிப்புகள்:

மன அமைதி – relaxation (நன்மை)

தலை சுற்றல் _- giddiness

தன்னை சுற்றி எழும் சிறிய ஒலிகளும் மனதை குழப்பும்

பசி அதிகரித்தல் – increased appetite

காலம் , இடம், பொருள் போன்றவற்றில் தெளிவற்றிருத்தல். இதனால் கண்டபடி உளறுதல். (altered perception of time and events)

புத்துப்புது தத்துவங்கள் ஐடியாக்கள் உருவாதல் – focus and creativity

கஞ்சாவில் Tetrahydrocannabinol (THC) அளவு அதிகரிக்க பாதிப்புகளும் அதிகரிக்கும்.

இன்னும் சிலரில் வேறுபாடான பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.

சமநிலை பாதிக்கப்பட்டடல் – coordination issues

மெதுவாக நகர்தல் – delayed reaction time

குமட்டல் – nausea

சோர்வு – lethargy

பய உணர்வு – anxiety

இதய துடிப்பு அதிகரித்தல் – increased heart rate

இரத்த அழுத்தம் குறைதல்- decreased blood pressure

தன்னை யாரோ பயமுறுத்துவது போன்று உணர்தல் – paranoia

#கஞ்சாவின்_நீண்டகால_பாதிப்புகள்;

01. மூளை வளர்ச்சியில்பாதிப்பு;
இளவயதில் (Adolescent) கஞ்சாவுக்கு அடிமையானால் ஞாபக சக்தி , மூளை வளர்ச்சி என்பவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது..

02. அடிமையாதல் – Dependence
தூய்மையாக்கப்படாத மற்றும் THC அதிகம் கொண்ட கஞ்சாவை பாவிக்கும்போது அதற்கு அடிமையாக்குகிறது.
கஞ்சா இல்லாதபோது withdrawal symptoms களான கோபப்படல் (irritability), பசி இன்மை (low appetite), மற்றும் மன அமைதியின்மை (mood swings) ஏற்படும்.

சுவாச கோளாறுகள்:
Cigarette புகைப்பது போன்றே கஞ்சா பாவனையும் bronchitis, COPD போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளபோதும் Cigarette அளவுக்கு பாதிப்பு இல்லை என்பதோடு , Cancer ஏற்படும் வாய்ப்புகளும் Cigarette உடன் ஒப்பிடும்போது மிக குறைவு.

Take Home Message:
கஞ்சாவில் போதை தரும் இயல்புகளும் (THC), மருத்துவ குணங்களும் (CBD) அடங்கியுள்ளது.
கஞ்சாவின் மருத்துவ குணங்கள் பல நூற்றாண்டுகளாக நிரூபிக்கப்பட்டவை.
கஞ்சாவில் உள்ள போதை தரும் பதார்த்தங்களை நீக்கி மருத்துவ பயன்பாட்டுக்கு அனுமதிப்பது பயனளிக்கும்.
அதேவேளை எந்த கட்டுப்பாடுகளும் இன்றி கஞ்சா பாவனையை அனுமதிப்பது எதிர்கால சந்ததியை பாரிய அழிவுக்கே இட்டு செல்லும்.

By: Dr.Ziyad Aia

Sources:
01. A Quick Take on Cannabis and Its Effects
https://www.healthline.com/health/what-is-cannabis#components

02. Cannabis in Sri Lanka – Laws, Use, and History
https://sensiseeds.com/en/blog/countries/cannabis-in-sri-lanka-laws-use-history/

03. கஞ்சா: நினைவாற்றலை கெடுக்குமா அல்லது கொடுக்குமா?
https://www.bbc.com/tamil/science/2015/02/150222_cannabis_reasearch

04. Associations between cigarette smoking and cannabis dependence: A longitudinal study of young cannabis users in the United Kingdom
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4337852/

3,730 total views, 3 views today