Cancer:- மாட்டிக்கொண்ட Johnson & Johnson உம் asbestos அரசியல் செய்யும் ரஸ்யாவும் – PostMortom Report

By:- Dr Ziyad aia

சமீப காலமாக ஊடகங்களில் பேசுபொருளான ஒரு விடையம் Johnson & Johnson நிறுவனம் 4.7Billion USD நஷ்ட ஈடு வழங்க அமெரிக்க நீதி மன்றத்தால் தீர்ப்பளிக்கபட்டதும் அதே நேரம் இலங்கை அரசு கூரைத்தகடுகள் (Sheets) இறக்குமதிக்கு தடை விதித்ததும் அதன் எதிரொலியாக ரஷ்யா இலங்கை தேயிலைக்கு தடை விதித்ததும் என 3 விதமான செய்திகள் வெளிவந்தன.
இம்மூன்று செய்திகளும் சந்திக்கும் ஒரே புள்ளி “ஆஸ்பெஸ்டாஸ் – Asbestos”
அது பற்றிய ஒரு ஆய்வறிக்கையே இப்பதிவு.

 

Asbestos எனும் மூலப்பொருள் பல நூற்றாண்டுகளாக பாவனையில் உள்ளது.

இது இலகுவானதும் , நீண்ட காலம் நிலைத்து நிற்கக் கூடியதும், நெருப்பு மின்னொழுக்கு என்பவற்றை தாக்குப்பிடிக்க கூடியதும் ஆகும்.

Asbestos கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள்:-

(Source:- https://www.asbestos.com/products/ )

01. Asbestos Sheets – எஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகள்.

02. Asbestos Gaskets & Break plates:-
ஆரம்ப காலங்களில் இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்புக்கு பயன்படுத்த பட்ட போதும் தற்போது இது மாற்றீடு செய்யப் பட்டுள்ளது.

03. Cigarette Filters

04. Cosmatics:- அழகு சாதன பொருட்கள். பொதுவாக Makeup sets.
2017 முதல் பல அழகு சாதனப் பொருட்களில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்டன. இருப்பினும் இவற்றின் பாவனை தொடர்ந்து கொண்டே உள்ளது.

05. Electrical Cloth & Electrical Panel Partition. ஆரம்ப காலங்களில் இவற்றை உபயோகிக்கப்பட்டாலும் பின்னர் இவை gypsum, calcium silicate, cellulose மற்றும் polystyrene என்பவற்றால் மாற்ரீடு செய்யப்பட்டுள்ளது.

06. Fire proofing & Prevention Materials
இவையும் மாற்றீடு செய்யப்பட்டு அஸ்பெஸ்டாஸ் அளவு 1% ஐ விட குறைவாக பேணப்படுகிறது.

07.Plastic:- திருப்பாச்சிக்கே அரிவாளா என்பது போல் நானே கேன்சர் உருவாக்குபவன் எனக்குள் இன்னொரு கேன்சல் ஐட்டமா? என்ற நிலை வந்ததால் இது Calcium Carbonate, clay, mica, glass & silica என்பவற்றால் மாற்றீடு செய்யப் பட்டு வருகிறது.

08. Vinyl Products:- உதாரணமாக வீட்டில் பதிக்கும் Tiles. 1980க்கு முன் இது உபயோகத்தில் இருந்தாலும் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது

09. Talcum Powder:- முக பவுடர்கள்.
பல நிறுவனங்கள் தமது தயாரிப்புகளில் அஸ்பெஸ்டோஸ் இல்லை என்றும் வாதிட்டு வந்தாலும் , ஆய்வுகள் இருப்பதை நிரூபிக்கின்றன. அப்படி மாட்டிக் கொண்டது தான் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்.

Asbestos ஆல் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

01. Mesothelioma:- நுரையீரலை பாதிக்கும் ஒரு வகை கேன்சர்.

02. Asbestosis:- நுரையீரல் இறுக்கமடைந்து சிதைவடைந்து செயலற்றுப் போதல்.

03. நுரையீரல் Cancer:- (Mesothelioma தவிர்ந்த) அமெரிக்காவில் புகைத்தல் மூலம் கேன்சர் உருவாகி இறந்தவர்களில் பிரேத பரிசோதனையில் 50% ஆனோருக்கு Asbestosis இருந்தது உறுதியாகி உள்ளது.

04. Laryngeal Cancer

05. Ovarian Cancer:- ( பெண்களுக்கு ஏற்படும் சூலக புற்று நோய்)

06. Pleaural Diseases.

Asbestos இனால் நோய் உருவாகும் விதம்

 

இந்தியாவில் asbestos க்கு நேரடியாக , மறைமுகமாக பாதிக்கப்பட்டோர் பற்றிய WHO வின் விவரணப் படம். (9 mins. Worth watching.)

பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் Asbestos விடயத்தில் மாட்டிக் கொண்டது எப்படி?
Source:- The Guardian https://www.theguardian.com/business/2018/jul/13/johnson-johnson-ordered-to-pay-47bn-in-talc-powder-claim )

இங்குதான் asbestos துணிக்கைகளின் நடத்தை உதவியிருக்கிறது. பொதுவாக நுரையீரல் கேன்சர் களில் இந்த துணிக்கை காணப்படுவது Tissue Biopsy இல் தென்படுவது போல் சூலக கேன்சரினால் இறந்த 7 பெண்களின் பிரேத பரிசோதனையில் அவர்களின் சூலகங்களில் asbestos காணப்பட்டதுடன் Talc பவுடர் துணிக்கைகளும் காணப்பட்டன. இதுவே உறுதியான ஆதாரமாக அமைந்து விட்டது. இதனால் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்த 22 பெண்களுக்கு 4.7 Billion USD நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடப்பட்டது. இன்னும் பல வழக்குகள் (9000) நிலுவையில் உள்ளன.

இதேநேரம் அந்நிறுவனம் தனது தயாரிப்புகளில் asbestos இல்லை என்று கூறி வருவதுடன் மேன்முறையீடு செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் asbestos பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. பொதுவாக கூரைத்தகடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதால் பல நாடுகள் தடை செய்துள்ளன.

உலகில் 55 நாடுகள் Asbestos ஐ தடை செய்து விட்டன.

 

உலகில் 50 வீதமான asbestos sheet கள் Russia, China, Brazil மற்றும் Kazakhastan இனால் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 அந்த அடிப்படையில் இலங்கை நல்லாட்சி அரசாங்கம் எஸ்பெஸ்டஸ் கூரைத்தகடுகளை ஜனவரி 2018 முதல் தடை செய்வதாக ஆறிவித்தது.

அதன் எதிரொலியாக ரஷ்யா இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேயிலையில் வண்டு இருந்ததாக கூறி அதன் இறக்குமதியை தடை செய்வதாக அறிவித்தது.

இலங்கைக்கு அஸ்பெஸ்டாஸ் மூலப் பொருட்களை அனுப்பும் பிரதான நாடு Russia ஆகும். பெருந்தோட்ட துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க கருத்துப்படி அஸ்பெஸ்டோஸ் தடைக்கும் இலங்கை தேயிலை தடைக்கும் அரசியல் ரீதியான சம்பந்தம் இருப்பதாக தோன்றுவதாக தெரிவித்தார். ( கீழே உள்ள Youtube Video களை பார்க்க. )

அதிசயமான முறையில் இலங்கை Asbestos இன் தடையை நீக்கியதும் Russia தேயிலைக்கான தடையை நீக்கியது. ( மகான் கணக்கு )

Take Home Message :-

@ அரசாங்கத்தால் Asbestos பாவனையை தடுக்க முடியாத பொறியில் சிக்கி இருந்தாலும் மக்கள் அதன் பாவனையை குறைப்பதே அதனால் ஏட்படும் Cancer ஐ தடுப்பதட்கான வழி.

@ வேலை தளங்களில் கைக்கவசம் , மற்றும் முகமூடி அணிவது சிறந்தது.

உடைந்த அஸ்பேஸ்ட்டோஸ் கூரை தகடுகளை கண்ட இடங்களில் வீசாமல் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவோம்.

@ முக Powder களால் பல சுவாச நோய்கள் வருவது நிரூபிக்கப் பட்டு இருப்பதால் அவற்றை தவிர்ப்போம். குறிப்பாக குழந்தைகளுக்கு பாவிப்பதை முற்றாக தவிர்ப்போம்.

 

 

 

Sources:-

https://www.asbestos.com/products/

https://www.theguardian.com/business/2018/jul/13/johnson-johnson-ordered-to-pay-47bn-in-talc-powder-claim

http://www.asbestosnation.org/facts/asbestos-bans-around-the-world/

http://www.who.int/ipcs/assessment/public_health/asbestos_substitutes.pdf?ua=1

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

8,353 total views, 5 views today