Body bag என்றால் என்ன? இதன் பயன்கள் என்ன?
⁉️ Body Bag இல் வைக்கப்படும் மரணித்த உடல் உக்காதா?
By Dr Ziyad Aia
(☣️🚷Attention: பலவீனமான மனதுள்ளோர் இதனை படிப்பதை தவிர்ப்பது நல்லது.)
COVID-19 இல் மரணித்த உடல்களை கொண்டு செல்வதற்கு இந்த Body Bag or Cadaver Pouch தேவை பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. உண்மையில் இதன் உபயோகம் என்ன?
இது இரண்டாம் உலக மகா யுத்த காலங்களில் அறிமுகமாகியது. ஆரம்ப காலங்களில் பல்வேறு வகையான Materials மூலம் தயாரிக்கக்ப்பட்டாலும் தற்போது தடிப்பான Plastic மூலம் தயாரிக்கப்படுகிறது.
இது வெள்ளை, கருப்பு, நீலம், Orange, Grey போன்ற பல்வேறு நிறங்களில் காணப்படும்.
சில பைகள் உள்ளே இருப்பவரை அடையாளம் காணக்கூடியவாறு Transparant ஆகவும் இருக்கும்.
இதில் முழு நீள “J” வடிவ அல்லது “D” வடிவ Zip காணப்படும். இவை நடுவிலோ , பக்கவாட்டிலோ முழு நீளத்துக்கும் காணப்படும். இதனால் உடலை இலகுவாக உள்ளே வைக்கலாம்.
பொதுவாக இரு முனைகளிலும் கையாள வசதியாக “Handles” காணப்படும்.
Body Bags மீள பயன்படுத்துபவை அல்ல. (Single Use)
Body Bags இன் பயன்கள் என்ன?
✅ 01. இதன் பிரதான பயன் மரணித்த உடலை சேகரிக்கும்போது அல்லது அடக்கும்/எரிக்கும் இடத்துக்கு கொண்டுசெல்லும்போது அம்மரணித்த உடலில் இருந்து திரவங்கள் (Body Fluids) சூழலுக்கோ, கையாள்பவர்களுக்கோ வெளியாகாமல் இருக்க உதவும்.
✅ 02. யுத்த களம் , அல்லது அனர்த்தங்களின்போது உடல் சிதைந்து துண்டுகளாகும்போது அவற்றை ஒன்றுசேர்த்து (சிலவேளைகளில் உருக்குலைந்து இருந்தால் வெளியில் உள்ளவர்கள் அதனை பார்க்காதவாறு) இடப்பட்டு இறுதிக்கிரியைகள் செய்ய உதவும்.
✅ 03. யுத்த காலங்களில் மரணங்கள் நிகழும்போது அடக்கம் செய்யக்கூடிய வழிகள் இல்லாதவிடத்து Body Bags இல் இட்டு தற்காலிகமாக புதைக்கப்படும். பின்பு யுத்தம் நிறைவு பெற்ற வேளைகளில் மீள தோண்டி எடுத்து அரச மரியாதையுடன் அடக்கப்படும்.
(Body Bag இல் இடப்படும் உடல்கள் அழுகும் வேகம் குறைவு.)
Body Bag இல் வைக்கப்படும் மரணித்த உடல் உக்காதா?
மனிதனின் தோலிலும், சமிபாட்டு தொகுத்தியிலும் பல இலட்சம் நுண்ணங்கிகள் உள்ளன. மனிதன் இறந்ததும் அவையே உடலை அழிக்க ஆரம்பித்துவிடும். அதனால்தான் மரணித்த உடலை 24 மணித்தியாலத்துக்கு மேல் வைக்கும்போது நாற்றம் எடுக்கிறது.
மண்ணில் அடக்கப்படும் உடல் உக்கிப்போவதில் பிரதான பங்கு வகிப்பவை:-
✅ 01. வெப்பனிலை: இது அதிகரிக்க அழியும் வேகம் அதிகரிக்கும்.
✅ 02. காற்றோட்டம்: அதாவது Oxygen
இது கிடைக்கும்போது நுண்ணங்கிகளின் கற்று சுவாசம் மூலம் வேகமாக அழியும்
✅ 03. ஈரலிப்பு:
இது நுண்ணுயிர்கள் வளர சாதகமாக அமைவதால் விரைவாக உடல் அழியும்
✅ 04. இதைவிட மண்ணின் தன்மை, மழை வீழ்ச்சி, உடல் பருமன், வயிற்றில் குடலின் அளவு , காயங்கள் , சவப்பெட்டி என பல காரணிகள் செல்வாக்கு செலுத்தும்.
💓 இதனாலேயே பொதுவாக மலர்ச்சாலைகளில் (Funeral Directors) உடலை பதனிடும்போது (Embalming) தொடையில் உள்ள இரத்த குழாய் ஊடாக இரத்தத்தை வெளியேற்றுகின்றனர். நீண்ட நாட்கள் உடலை வைத்திருக்க வேண்டுமென்றால் வயிற்று பகுதியில் உள்ள குடலும் அகற்றப்படும்.
Body Bag இல் வைத்தாலும் அதனுள் உடல் உக்கிப்போகும். ஆனால் சாதாரணமாக மண்ணில் அடக்கம் செய்வதைவிட உக்கும் வேகம் குறைவு. காரணம் உடலில் உள்ள நுணங்கிகளே அழிக்கின்றன. மண்ணில் உள்ள ஏனைய உயிரினங்களின் தாக்கம் குறைவு. வளி, ஈரப்பதன் போன்ற காரணிகள் குறைவாக கிடைப்பதால் முழுமையாக சிதைவடைய காலமெடுக்கும்.
💓💓💓 அதே நேரம் Conora Virus உட்பட எல்லா Virus களுமே உயிருள்ள காலங்களிலேயே உயிர்ப்புடன் இருக்கும். இறந்த உடலில் சில மணி நேரம் முதல் சில நாட்களில் அழிந்துவிடும்.
(Virus பற்றி அறிய முன்னைய பதிவை பார்க்க.
https://m.facebook.com/
மண்ணில் அடக்கம் செய்தாலும் Body Bags அப்பபடியேதான் இருக்குமா?
பொதுவாக Plastic மண்ணில் உக்காது. இதனை அடிப்படையாக கொண்டு அது அப்படியே இருக்கும் என பலர் கருதலாம்.
ஆனால் அவ்வாறன்று.
❌ 01. அடக்கம் செய்யும்போதே மேற்பரப்பில் உள்ள மண்ணால் வழங்கப்படும் அழுத்தத்தால் பை கிழியலாம்.
❌ 02. பையினுள் நுண்ணங்கிகளால் நிகழும் காற்றின்றிய சுவாசத்தின் மூலம் வெளிப்படும் காற்று Body Bag ஐ உப்ப செய்வதால் வெளியில் உள்ள மண் அழுத்தமும் சேர்ந்து வெடிக்கலாம்.
❌ 03. நிலக்கீழ் உள்ள தாவர வேர்கள் பையை ஊடறுத்து கிழிக்கலாம்.
❌ 04. Zip பகுதியில் கிடைக்கும் மிகச்சிறிய துவாரங்களையும் பயன்டுத்தி நுண்ணங்கிகள் பாதை அமைக்கலாம்.
இங்கு Body Bags இன் நோக்கம் மண்ணுள் உடலை பாதுகாப்பது அல்ல. மாறாக மரணித்த உடலை அடக்கம் செய்யும்வரை பேணுவதே.
Body Bags இல் வைக்கப்படும் உடல்கள் எவ்வளவு காலத்தில் அழியும் என்பதை வரையறுத்து சொல்ல முடியாது. அது வேறு பல காரணிகளில் தங்கி உள்ளது. மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள References பார்க்க.
💓 References: 💓
https://
http://
http://
உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/
COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.
1,649 total views, 1 views today