அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் செல்ல நாயை ஆசையுடன் முத்தமிட்ட பெண்மணியின் கை கால்கள் வெட்டி நீக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் விடுமுறையை கழித்துவிட்டு ஒகையோ மாகாணத்தின் ஸ்டார்க் கவுண்டி பகுதியில் உள்ள குடியிருப்புக்கு திரும்பியிருந்தார் Marie Trainer என்ற பெண்மணி.

குடியிருப்புக்கு திரும்பியதும், சில நாட்களாக பிரிந்திருந்த தமது செல்ல நாயை அள்ளியெடுத்து முத்தம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் அடுத்த சில தினங்களில் அவருக்கு முதுகுவலி மற்றும் குமட்டல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மயக்கமிட்டு விழுந்த அவரை மீட்டு ஸ்டார்க் கவுண்டி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

தொடர்ந்து 9 நாட்கள் சிகிச்சையில் இருந்து கண்விழித்த மேரிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரது கை, கால்கள் வெட்டி நீக்கப்பட்டது தெரியவந்தது.

மயக்கமிட்ட நிலையில் மேரியை மருத்துவமனையில் சேர்ப்பித்த பின்னர், அவருக்கு என்ன நோய் என்பதை கண்டறிய மருத்துவர்களுக்கு 7 நாட்களாகியுள்ளது.
இதனிடையே அவரது நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. அதனாலையே அவரது கை, கால்களை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் நாயை முத்தமிடும்போது அவரது உதட்டில் இருந்த வெடிப்பு ஒன்றினூடாக நாயின் உமிழ்நீர் சென்றுள்ளது. (இது நாய் கடிப்பதட்கு ஒப்பானது.)

இவருக்கு தாக்கியிருந்தது நாயின் உமிழ்நீரில் காணப்பட்ட bacteria capnocytophaga canimorsus. இது மிக அரிதான நோய். million இல் ஒருவருக்கு இவ்வாறு ஏட்படலாம். இந்நுண்ணங்கி மிகவும் ஆபத்தானது. இது உடலில் நுழைந்து நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து பல ஆபத்துகளை உண்டுபண்ணும்.

Sources:-

https://edition.cnn.com/2019/08/02/health/amputation-dog-lick-ohio-woman/index.html?fbclid=IwAR1sXvBMBldITyGAZ3Ic2iy8Sc2-hjaT_n0ZezXoY7xrsrWsaE1Zg7QG1KQ

https://www.telegraph.co.uk/news/2019/08/03/woman-undergoes-quadruple-amputation-licked-pet-dog/?fbclid=IwAR1QHvYImwxGOr8utWYaCkio8PEWpREqMBjVSEwQVsMOLPLl120y04DwP2o

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

3,655 total views, 2 views today