வியர்க்கூரு (Prickly Heat) / வெப்ப சொறி (heat rash) காரணம்? அறிகுறிகள்? மருத்துவம்? தவிர்க்கும் வழிகள்?
By: Dr. Ziyad Aia (MBBS, MD – Health Informatics)
நாட்டில் நிலவி வரும் வெப்ப அலையினால் தோல் வியாதிகளும் அதிகரித்து வருகின்றன.
மனிதனின் தோலானது நோய்த்தொற்றுகள், இரசாயனங்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.
இது வியர்வையை உருவாக்குவதன் மூலம் உடலுக்குள் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. தோலில் வியர்வையானது வியர்வை சுரப்பிகளிலிருந்து உருவாகிறது.

உங்கள் வியர்வை குழாய்கள் சில தடைபடும் போது வெப்ப சொறி/வியர்கூரு உருவாகிறது. வியர்வை ஆவியாவதற்கு பதிலாக தோலுக்கு அடியில் சிக்கி, வீக்கம் மற்றும் சொறி ஏற்படுகிறது.


புதிதாக பிறந்த குழந்தைகளின் வியர்வைக் குழாய்கள் முழுமையாக விருத்தியடைந்திருப்பதில்லை. அவை மிகவும் எளிதில் சிதைந்து, சருமத்தின் அடியில் வியர்வை சிக்க வைக்கும்.
பொதுவாக பிறந்து முதல் வாரத்தில் வெப்ப சொறி/வியர்கூரு உருவாகலாம், குறிப்பாக குழந்தை Incubator இல் இருந்தால், மிகவும் இறுக்கமாகவும் , நீண்டநேரம் உடையணிந்து இருந்தால் அல்லது காய்ச்சல் ஏற்பட்டால் தோன்றலாம்.

வெப்பமான, ஈரப்பதமான வானிலை வெப்ப சொறிச்சலை ஏற்படுத்தும்.

கடுமையான உடற்பயிற்சி, கடின உழைப்பு அல்லது நீங்கள் அதிக வியர்வை உண்டாக்கும் எந்தவொரு செயலும் வெப்ப சொரிச்சலுக்கு வழிவகுக்கும்.

பொதுவாக அதிக வெப்பம், மிகவும் சூடாக ஆடை அணிவது அல்லது கம்பளி போன்ற போர்வையின் கீழ் தூங்குவது – வெப்ப சொறிச்சலுக்கு வழிவகுக்கும்.

நீண்ட காலமாக படுக்கையில் வைக்கப்பட்டுள்ளவர்களிடமும் (வயதானவர்கள், நோயாளிகள்) வெப்ப சொறிச்சல் ஏற்படலாம், (குறிப்பாக அவர்களுக்கு காய்ச்சல் இருந்தால்.)
வெப்ப சொறி வழக்கமாக தானாகவே போய்விடும். சில மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கலாம்.

வளர்ந்தவர்களில் பொதுவாக தோல் மடிப்புகளில் மற்றும் ஆடை உராய்வு ஏற்படும் இடங்களில் வெப்ப சொறி ஏற்படுகிறது . குழந்தைகளில், சொறி முக்கியமாக கழுத்து, தோள்கள் மற்றும் மார்பில் காணப்படுகிறது. இது அக்குள், முழங்கை மடிப்பு மற்றும் இடுப்பு ஆகியவற்றிலும் காட்டப்படலாம்.



வெப்ப சொறியின் லேசான வடிவம். தோலின் மேல் அடுக்கில் உள்ள வியர்வை குழாய்களை பாதிக்கிறது. இந்த வடிவம் தெளிவான, திரவத்தால் நிரப்பப்பட்ட கொப்புளங்கள் மற்றும் புடைப்புகள் ஆகியவற்றால் அறியலாம். இது தானாக மறையக்கூடியது. (படம் 01)

சிவப்பு வெப்ப சொறி. இதுவே தோல் நிலையின் மிகவும் பொதுவான வடிவமாகும். இந்த வகை அதன் அரிப்பு மற்றும் எரியும் அறிகுறிகளால் “வேர்க்குரு” என்றும் அழைக்கப்படுகிறது. வியர்வை சுரப்பிகள் ஆழமாக தடுக்கப்படுதல் சொறிக்கு சிவப்பு நிறத்தை ஏற்படுத்துகிறது (எனவே இதற்கு மிலாரியா ருப்ரா என்று பெயர்). படம் 02

சிவப்பு வெப்ப சொறிகளில் பாக்டீரியா தாக்கத்துக்கு உட்பட்டு கொப்புளங்கள் உருவாகும்போது வெள்ளை / மஞ்சள் வெப்ப சொறி (மிலியா பஸ்டுலோசா) ஏற்படுகிறது. இந்த கொப்புளங்கள் தோல் நோய்த்தொற்றின் முதல் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே அவற்றை உங்கள் #மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறவும்.

அரிதான வகையில் தடுக்கப்பட்ட வியர்வையானது வியர்வை சுரப்பியில் இருந்து தோலில் கசிந்து, Goose Bumps களை ஒத்த உறுதியான சதை பகுதி போன்ற தோற்றம் ஏற்படுத்துகிறது. குறிப்பாக உடற்பயிற்சி அல்லது வெப்பத்தை வெளிப்படுத்திய பின் தோன்றக்கூடும்.






topical steroids (Eg: ஹைட்ரோகார்ட்டிசோன் கிரீம். வைத்திய ஆலோசனை பெறுவது நல்லது.)



எப்போதாவது வெப்ப சொறிகளில் தொற்று ஏற்படக்கூடும், குறிப்பாக பாக்டீரியாக்கள் சருமத்தில் படையெடுத்து செல்லுலிடிஸ் தொற்றுநோயை ஏற்படுத்தும்.
சிவத்தல்,
வீக்கம்,
அதிகரித்த வலி,
காய்ச்சல் அல்லது கொப்புளங்கள்
போன்ற அறிகுறிகள் தோன்றினால் வைத்திய ஆலோசனையை பெறுங்கள். (தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க மேற்பூச்சு கிரீம்கள் அல்லது வாயால் எடுக்கப்பட்ட மருந்துகளுடன் ஆண்டிபயாடிக் சிகிச்சை தேவைப்படலாம்.)
உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரபூர்வமான சுகாதார தகவல்களுக்கு எனது பக்கத்தை Like செய்து இணைந்திருக்கவும்.
அதிகளவு வெப்பத்தினால் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்வதற்கு:
1,311 total views, 3 views today