போலி COVID-19 முடிவுகள்.

தான்சானியா கிழக்கு ஆப்பிரிக்காவில் 7 கோடி பேர் வாழும் நாடு. தான்சானிய அதிபர் ஜான் மகுபுலி.

தன்சானியாவிள் இதுவரை 480 COVID-19 நோயாளிகள் இங்காணப்பட்டுள்ளதோடு 16 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
எதிர்க்கட்சிகள், அரசாங்கம் தகவல்களை மறைப்பதாக குற்றம் சாட்டிய நிலையில்:

ஜனாதிபதி Magufuli
தான்சானியாவில் கொரானா வைரஸ் தொற்று 480 என ஆய்வகம் சொன்னதை கண்டு,
#ஆடு#பறவை#வாகன_எண்ணெய்#பலாப்பழம்#பப்பாளி இவற்றின் சாம்பிள்களுக்கு மனித பேர் வைத்து தேசிய பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பினார். அதில் ஆடு, பறவை, பப்பாளி பழத்திற்கு #கொரானா_பாசிட்டிவ் என முடிவு வந்தது. இதை அடுத்து தான்சானியா அதிபர் ஜான் மகுபுலி, நாட்டின் பரிசோதனை மைய தலைவரை பதவி நீக்கம் செய்துள்ளார். பரிசோதனை மையத்தை, கொரானா டெஸ்டுகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வுகூடத்தின் “Dirty game” என குறிப்பிட்ட அவர் Tests Kits எந்த நாட்டில் இருந்து பெறப்பட்டவை என்பதை அவர் குறிப்பிடவில்லை.
எனினும் “அன்பளிப்பாக கிடைக்கும் எதையும் ஏற்குமுன் அதன் தரம் பற்றியும் நாட்டுக்கு அதன் நன்மை பற்றியும் சிந்திக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வுகூட நடவடிக்கைகளை ஆராய 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் லாக் டவுனை தன் நாட்டில் அனுமதிக்காத அதிபர் ஜான் மகுபுலி, கொரானா பீதி தேவையற்றது என்றும், மக்கள் முன்னை விட கூடுதலாக உழைக்கும்படியும் கேட்டுள்ளார். தான்சானியா அதிபர் ஜான் மகுபுலி வேதியியலில் முனைவர்
(Ph.d in chemistry) பட்டம் பெற்ற அறிவியலாளரும் ஆவார்.

தன்சானியாவில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளபோதும், ஏனைய நாளாந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன. Church மற்றும் பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகைகள் நடாத்துவது வழமைபோல் தொடர்கிறது.

இச்செய்தியை Al-Jazeera உட்பட பல்வேறு செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

இலங்கையிலும் இரு தினங்களுக்கு முன்னர் Positive என அறியப்பட்ட மூவருக்கு மறுநாள் சோதனையில் Negative என்று அறிவித்தது மருத்துவ துறை சார்ந்தோர் மத்தியில் பல்வேறு கேள்வி கணைகளை ஏற்படுத்தி உள்ளது.

Sources:

https://www.aljazeera.com/…/tanzania-covid-19-lab-head-susp…

https://www.msn.com/…/covid-19-goat-fruit-test…/ar-BB13yyMa…

http://www.adaderana.lk/…/three-identified-as-covid-19-posi…

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

98 total views, 1 views today